web log free
May 06, 2025
kumar

kumar

களனிப் பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் நிலையத்தில் கல்விகற்ற மூதாட்டியே இவ்வாறு முதுகலைப் பட்டத்தை பெற்றுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக வயதான மாணவர் என்ற பெருமையை 97 வயதான விதானகே அசிலின் தர்மரத்ன பெற்றுள்ளார்.

இவரது பட்டப்படிப்பிற்கான பாடங்கள் 7 பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. பாலி நியதியில் பௌத்த தத்துவம், இலங்கையில் பௌத்த கலைகள் மற்றும் கட்டிடக்கலை, பௌத்த உளவியல், பௌத்த தத்துவத்தில் பொருளாதாரம், தேரவாத பாரம்பரிய வரலாறு மற்றும் தர்மம் போன்ற பிரிவுகளை உள்ளடக்கியதுடன் பௌத்த நெறிமுறைகளது கருத்துக்கள், தத்துவ விளக்கங்கள் மற்றும் ஆராய்ச்சி முறைகளை கொண்டது.

அவரது ஆய்வறிக்கை எம்பெக்கே தேவாலயத்தின் மர வேலைப்பாடுகளில் கடந்தகால வாழ்க்கை முறைகளை உள்ளடக்கியுள்ளது.

இளம் வயதில் அசிலின் தர்மரத்ன ஒரு நொத்தாரிசாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் இலக்கிய பாதையில் கவனத்தை திசைதிருப்பினார். இவருக்கு 6 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தனது 94 ஆவது வயதில் வித்யோதயா பல்கலைக்கழகத்தில் திரிபிடகம் மற்றும் பாலி மொழி தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றார்.

இலங்கை முழுவதும் 39 கொலைகளை அவரது கும்பல் செய்துள்ளதாக கணேமுல்ல சஞ்சீவவின் வாக்குமூலங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.இது தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவை அனைத்தும் சஞ்சீவவுக்கு தெரிந்தே நடந்தவை என்றும், சில கொலைகள் பழிவாங்கும் செயல் என்றும், சில கொலைகள் ஒப்பந்தங்கள் எனவும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சஞ்சீவ மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் வெளியேற்றப்பட்டதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் (15) நடைபெற்ற இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அக்ஷர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அவரது கையில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த போட்டியில், பந்து அக்ஷரின் கையில் பட்டதால், இந்த காயம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது எலும்புகளில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்ஷர் பட்டேலுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் சகலதுறை வீரர் வொஷிங்டன் சுந்தர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதேநேரம் புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கியூபாவில் நடைபெற்ற ஜி77 + சீனா அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டபின்னர், அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவதுகூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்.

2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் செப்டம்பர் 18 முதல் 21 வரை இம்முறை கூட்டத்தொடர் நடைபெறும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி கூட்டத்தொடரில் பங்கேற்று, தனது விசேடஉரையை ஆற்ற உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக செப்டம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள, 2030 ஆம் ஆண்டிற்கான மாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகள் என்பவற்றுக்காக உலக தலைவர்களினால் வழிகாட்டுதல்கள்
வழங்கப்படும் 2023 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் உச்சி மாநாட்டின் அரச தலைவர்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

மேலும், அன்று ஜனாதிபதி, உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலிலும் பங்கெற்கவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி Marc-André Franche-வை நேற்று (15) கொழும்பில் சந்தித்துள்ளனர். 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடப்படாமை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் இதன்போது அவரது கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதற்கமைய, குறித்த விடயத்தை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதாக ஐ.நாவின் இலங்கைக்கான பிரதிநிதி உறுதியளித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்கள் இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளமை தொடர்பில் தரவுகளுடனான ஆவணமொன்றை ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி Marc-André Franche-விற்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. v

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்செயல்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.

யாழ். குடாநாட்டில் அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட

கூட்டமொன்று கடற்றொழில் அமைச்சர் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (150 நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே, அமைச்சர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் பிரதிநிதி, பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களாகிய பலரும் கலந்துகொண்டனர்.

பொழுதுபோக்கு அம்சத்தின் கீழ் கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் அகற்றப்படும் என கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வெளிநாட்டைக் குறிப்பாக இலக்குவைத்து வடிவமைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தில் இதுபோன்ற உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதன் சட்ட ஏற்பாடுகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு வினவியமைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (12) கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. இதில் எதிர்வரும் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2021ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்து ஆராயப்பட்டன.

எந்த சட்ட அடிப்படையில் அவ்வாறான உணவுக் கூடங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கினீர்கள், எந்த அடிப்படையில் அவற்றை 2027ஆம் ஆண்டு அகற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளீர்கள் என அரசாங்க நிதி பற்றிய குழு, ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வினவியது. இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதா என்றும் கேள்வியெழுப்பியது.

இது விடயம் தொடர்பான தகவல்களைக் கூடிய விரைவில் குழுவில் சமர்ப்பிக்குமாறு கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

துறைமுக நகரத்தில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளால் அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கும் வருமானம் தொடர்பிலும் குழு மேலும் கேள்வியெழுப்பியது. எனவே, குறித்த ஒழுங்குவிதிக்கு அனுமதி வழங்க முன்னர் முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட சகல தகவல்களையும் வழங்குமாறும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.

ஸ்மார்ட் சிட்டி எண்ணக்கருவுக்கு அமைய தனியான நிலப்பரப்பில் துறைமுக நகரம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஸ்மார்ட் சிட்டியில் கழிவுநீர் முகாமைத்துவம், புதுப்பிக்கத்தக்க சக்தி, உரிய வடிகாலமைப்புக்கான பொறிமுறைகள் காணப்படுகின்றனவா என்றும் குழு, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வினவியது. கழிவுநீர் முகாமைத்துவம் மற்றும் வடிகாலமைப்புத் தொடர்பில் நாட்டின் ஏனைய பகுதிகளில் கிடைத்த அனுபவம் துறைமுக நகரத்தை அமைக்கும்போது தவிர்க்கப்பட வேண்டும் என்பது குழுவின் நிலைப்பாடாக இருந்தது.

அத்துடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, நீர்வழங்கல் சபை போன்ற அரசாங்க நிறுவனங்கள் துறைமுக நகரின் கட்டுமானம் மற்றும் அபிவிருத்தியில் பெருந்தொகையான பணத்தைச் செலவிட்டமையும் இங்கு தெரியவந்தது. இவை அனைத்தும் வரி செலுத்தும் நாட்டு மக்களின் பணம் என்பதால் இதனால் நாட்டுக்குக் கிடைக்கும் நன்மைகள் யாவை என்றும் குழு கேள்வியெழுப்பியது.

இதற்கமைய துறைமுக நகரம் மற்றும் உட்கட்டமைப்புக்கு அரசாங்கம் மேற்கொண்ட செலவுகளின் வகைப்படுத்தல் மற்றும் வருமானம் கிடைக்கும் மார்க்கங்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழு, ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியது.

 

 

 

நேற்று பயணப்பொதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சடலம் நீல நிற பயணப்பொதியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் சடலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடையது எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (15) மாலை சீதுவை பெல்லானவத்தை, கிந்திகொட பிரதேசத்தில், தன்டுகங் ஓயாவின் கரையோரத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய 05 அடி 08 அங்குல உயரமும் சராசரியான உடலும் 02 அங்குல நீளமான முடியும் கொண்ட ஆண் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் சிவப்பு சட்டை மற்றும் பழுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்தவரின் கழுத்தில் வலப்புறம் 07 நட்சத்திர அடையாளங்களுடன் பச்சை குத்தப்பட்டிருந்தமையும், தலை மற்றும் கன்னம் ஆகிய இருபுறங்களிலும் காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது..

நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காலி வீதியின் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் இடையூறை ஏற்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட 12 பேர் நேற்று வியாழக்கிழமை (14) கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டிப் பணப் பரிவர்த்தனையே தகராறுக்குக் காரணம் எனக் கூறிய பொலிஸார் இரு தரப்பிலும் இருவர் காயமடைந்து காணப்பட்டதாகவும் கூறினர்.

இவர்களது உறவினர்களுக்கிடையில் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களும் கொரலலவெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd