web log free
April 28, 2025
kumar

kumar

நடிகை சமந்தாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகிறது.
மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு பலமொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக்கொண்டார்.

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார். அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடிப்பதில் முழுகவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில், சமந்தா ஆடிய ’ஓ சொல்றியா மாமா’ பாடல் சில எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துவந்தார். இந்நிலையில், நடிகை சமந்தா கருப்பு பச்சை உடை அணிந்து வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

அடுத்து வரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இன்று (10) நடைபெற்ற கட்சியின் கொழும்புல் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற இந்த மாநாடு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

”அடுத்து வரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும். அது தொடர்பில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். கூட்டமைப்பு அரசியலில் நாம் தனித்துப் போட்டியிட்டு பின்னர் எமது கொள்கையை ஏற்றுக்கொள்ளும் தரப்புடன் கூட்டமைப்பாக இணைந்து கொள்ள முடியும்”

என இதன்போது நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

இலங்கைக்கான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வருமானம் 180 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இரண்டு கப்பல்களில் அடங்கியுள்ள 7000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று காலை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கெரவலப்பிட்டிய – ஹெந்தல கடற்கரையில் நங்கூரமிடப்பட்டிருந்த எரிவாயுவை ஏற்றிய கப்பல், கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் விடுவிக்கப்படாமல் இருந்தது.

எவ்வாறாயினும், தற்போது அந்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் கூறியுள்ளார்

மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் மருந்து விலைக்கான குழுவினால் விலையேற்றம் குறித்து தற்போது ஆராயப்படுவதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 25 தொடக்கம் 30 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, நாணய மாற்று வீதத்திற்கு ஏற்ப மருந்துகளின் விலையை நியாயமான முறையில் அதிகரிக்க நேற்று அனுமதி வழங்கப்பட்டதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதன் மூலம் நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

டொலரின் பெறுமதிக்கு இணையாக நியாயமான முறையில் மருந்துகளின் விலைகளை அதிகரிப்பதற்கான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நேற்று தீர்மானித்ததாகவும் இது தொடர்பில் மருந்து இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய வார இறுதி நாட்களில் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, இன்று (12) முற்பகல்10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அந்த வலயங்களில் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும், A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அந்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதற்கிடையில், P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு இடையே நாளை தினம் (13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
 

நேற்று இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.

லங்கா ஆட்டோ டீசல் : ரூ. 55 இனால் அதிகரிப்பு, புதிய விலை ரூ. 176 ஆகும்.
லங்கா 92 பெற்றோல் : ரூ. 77 இனால் அதிகரிப்பு. புதிய விலை ரூ. 254 ஆகும்
லங்கா 95 பெற்றோல் : ரு. 75 இனால் அதிகரிப்பு. புதிய விலை ரூ. 283 ஆகும்.
லங்கா சுப்பர் டீசல் : ரூ. 95 இனால் அதிகரிப்பு. புதிய விலை ரூ. 254 ஆகும்.

நாட்டில் உணவுப் பொதியொன்றின் விலையும் உயர்வடைவதாக அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விலையின் அடிப்படையில், உணவுப் பொதியொன்று 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை பாண் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன அறிவித்துள்ளார்.

மேலும் பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆயிரக்கணக்கான சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பேக்கரிகளின் உரிமையாளர்கள் கடும் சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 450g பாண் ஒன்றின் விலை 20 தொடக்கம் 30 ரூபா வரையில் அதிகரிக்கப்படுவதுடன், பணிஸ் ஒன்றின் விலையானது பத்து ரூபாவல் அதிகரிக்கப்படுகிறது.

‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. அதன்பின் வரலட்சுமி சரத்குமார், ’விக்ரம் வேதா’, ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’, ,சர்க்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
 
வரலட்சுமி சரத்குமார்
 
இந்நிலையில், வரலட்சுமி மாலத்தீவிற்கு சென்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனை பதிவி செய்யும் வகையில் அங்கு எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

ரஷ்யா - உக்ரைன் போரில் இரசாயன தாக்குதல்? பல உயிர்கள் அழிவு

உக்ரைன் மீதான போரில் ரஷியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் உக்ரைன்தான் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக ரஷியா தெரிவித்தது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

உக்ரைனில் ரசாயன ஆயுதங்கள் அல்லது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. ரஷியாவின் திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் ரஷியா மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதை பார்த்தாலே போதும்.

அமைதியான ரஷியா மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக நாங்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளோம். எங்களுக்காக வேறு என்ன தயார் செய்துள்ளீர்கள்? ரசாயன ஆயுதங்களால் எங்கு தாக்குகிறார்கள்? என்று கூறுங்கள்.

எங்கள் மீது குற்றம் சாட்டுவது என்னை மிகவும் கவலை அடைய செய்துள்ளது. நான் ஒரு நாட்டின் அதிபர். 2 குழந்தைகளின் தந்தை. எங்கள் நாட்டில் ரசாயன ஆயுதம் மற்றும் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்கள் தயார் படுத்தப்படவில்லை. இது உலகுக்கே தெரியும். ரஷியா எங்கள் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தினால் மேலும் பொருளாதாரத்தடைகளுக்கு உள்ளாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே உக்ரைனில் அமெரிக்கா ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாக ரஷியா குற்றம்சாட்டி அது தொடர்பாக விசாரிக்க ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்ட கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd