web log free
April 27, 2025
kumar

kumar

 

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்படத்தையும் (ஏகே 61) வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் அஜித்தின் புதிய லுக்கை போனிக்கபூர் வெளியிட்டுள்ளார்.

காதில் கடுக்கன், பெரிய கண்ணாடி, வெள்ளை தாடி, வெள்ளை தலை முடி, கருப்பு நிற கோட் அணிந்து வித்தியாசமான லுக்குடன் அஜித் இருக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது.

அந்த கெட்டப்பில் தான் அஜித் புதிய படத்தில் தோன்ற உள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது டார்க் ஷேட் புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக போட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கை குறித்து இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையும் வத்திக்கானும் ஆராய்ந்து வருவதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

வத்திக்கானுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம் ஆனால் தற்போதைக்கு அது குறித்து எதனையும் தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக கத்தோலிக்க திருச்சபை சர்வதேச உதவியை நாடுவதன் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக செஹான் சானக கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்தினால் அது கிட்டத்தட்ட ஒரு கடத்தல் என தெரிவித்துள்ளார்.

கைது செய்வதற்கு என நாகரீகமான வழிமுறைகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (15) முதல் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளாந்தம் மின்வெட்டு ஏற்படலாம் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்த்தேக்கங்களில் உள்ள நீரை சேமிப்பதற்காகவும், எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த தீர்மானத்திற்கான மின்வெட்டு அட்டவணை இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி பிற்பகல் இலங்கை மின்சார சபை மற்றும் லெகோ நிறுவனங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவுகளுக்கு அமையவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இவ்வாறான மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

மின்வெட்டுக்கு அனுமதி கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மூன்று மாத காலத்திற்கு மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை அனுமதி கோரியிருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநுராதபுரம் சல்காதுப்பிட்டியவில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு அரிசி விநியோகித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப் பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேரணி ஆரம்பிப்பதற்கு முன்னர் 40 அடி அரிசிக் கொள்கலன்கள் நான்கு கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்ததாக அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை விட வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்கள் உள்ளடங்காது என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீர் மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இன்று தொடக்கம் நாளாந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் வழிமுறைகள் இன்று பிற்பகல் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சாரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான உரிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருளுக்கான வரிச்சலுகை அல்லது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் தற்போதைய விலையினை தொடர்ந்தும் பேணுவதால், ஏற்படும் பாரிய நட்டத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமே சுமப்பதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் நிதியின்மையினால் எதிர்வரும் காலங்களில் டொலரை பெற்றுக்கொள்வதும் சவாலானதாக மாறியுள்ளதாக எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

டொலர் இன்மையினால் எதிர்காலத்தில் நாட்டிற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்படுமென அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு உடனடியாக எரிபொருளுக்காக வரிச்சலுகையை வழங்க வேண்டும் அல்லது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, லங்கா IOC நிறுவனத்தினால் கடந்த 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது.

அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 07 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதன் புதிய விலை 184 ரூபா என அறிவிக்கப்பட்டது.

லங்கா IOC நிறுவனத்தினால் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 03 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 213 ரூபா என தெரிவிக்கப்பட்டது.

இந்நிறுவனத்தினால் ஒரு லீட்டர் டீசலின் விலையும் 03 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

அதற்கமைய, லங்கா IOC நிறுவனத்தில் ஒரு லீட்டர் டீசலின் புதிய விலை 124 ரூபா என அறிவிக்கப்பட்டது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது. இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரை குறித்து காதல் கிசுகிசு சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா காதல் குறித்து பல கிசுகிசுக்கள் வந்தது. இருந்தும் இருவரும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதல் என்ன ஆனது? என்று இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதற்கு பிறகு லாஸ்லியாவின் தந்தை இழப்பு. இது லாஸ்லியாவுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இருந்தும் எல்லா துயரங்களையும் கடந்து லாஸ்லியா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் லாஸ்லியா படங்களில் கமிட்டாகி வருகிறார். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கேஎஸ் ரவிக்குமார் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

அவர் சொன்னதை தொடர்ந்து பிக் பாஸ்க்கு பின்னர் முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா கமிட்டானார். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், ஆரியுடனான படத்திற்கு முன்பாகவே ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இயக்குனர் ஜே.பி.ஆர் ஷாம் சூர்யா இந்த படத்தை இயக்கி உள்ளனர். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ், அர்ஜுன் உள்பட பல சிங், நடித்துள்ளார்கள்.

இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தும் லாஸ்லியாவின் முதல் திரைப்படம் வெற்றி படமாக அமைய வில்லை. இருப்பினும் இவர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது லாஸ்லியா அவர்கள் ஆல்பம் பாடலுக்கு நடனமாடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஸ்வின் உடன் தான் லாஸ்லியா சேர்ந்து நடனமாடியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இவர் இதற்கு முன்பே சின்னத்திரை சீரியல்கள், படங்களிலும் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியதுகுக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ஆல்பம் சாங், வெப்சீரிஸ் என்று பிசியாக நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் என்ன சொல்லப்போகிறார் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. ரசிகர் மத்தியில் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது அஸ்வின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து sugar baby என்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார்கள். தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு இவர்களுடைய இந்த பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும், இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் லாஸ்லியா, அஸ்வின் இருவரும் ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்து இருக்கிறார்கள். Blesso Beauty soap என்ற விளம்பரத்தில் இருவருமே நடித்திருந்தார்கள். இது தான் லாஸ்லியாவின் முதல் விளம்பரம் என்பது குறிபிடத்தக்கது. தற்போது மீண்டும் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஆல்பம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கவின் இல்லை இனிமேல் அஸ்வின் தான் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

 

இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் 54 சீன செயலிகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இன்று தடை விதித்துள்ளது.

இதில் பியூட்டி கேமரா, ஸ்வீட் செல்பி ஹெச்.டி, விவோ வீடியோ எடிட்டர், டுயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட 54 செயலிகள் அடங்கும்.

ஏற்கனவே, சீனாவின் டிக்டாக் லைட், ஹெலோ லைட், ஷேர்இட் லைட், பிகோ லைட் உள்ளிட்ட 224 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

உக்ரேனில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக தொடர்ச்சியாக அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் நிலவும் போர் சூழல் காரணமாக, உக்ரைனில் வசிக்கும் தமது நாட்டு குடிமக்களை வெளியேறுமாறு பல நாடுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், உக்ரேனில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக தொடர்ச்சியாக அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது:

உக்ரேனில் தற்போது சுமார் 40 இலங்கையர்கள் உள்ளனர். அவர்களில் 7 பேர் மாணவர்கள். இந்த இலங்கையர்கள் தற்போது எந்தவித பிரச்சினையும் இன்றி அங்கு தங்கியுள்ளனர். அங்கு அவசரநிலை ஏற்பட்டால், இலங்கையர்களை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உக்ரேனில் இலங்கைத் தூதரகம் இல்லாததால், துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவே இந்த விடயங்கள் கையாளப்படுகின்றன என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் 100,000 துருப்புகளைக் குவித்துள்ளது. இதனால், உக்ரேனில் போர் சூழல் நிலவுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd