web log free
July 27, 2024
kumar

kumar

UNICEF இன் சமீபத்திய அறிக்கையில் இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் காட்டுகிறது.

இலங்கையில் 22 இலட்சம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 286 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் 4.8 மில்லியன் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என யுனிசெஃப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையும் என்றும், 6.2 மில்லியன் மக்கள் மிதமான உணவுப் பற்றாக்குறையாலும், 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு 5 குடும்பங்களிலும் 2 குடும்பங்கள் தமது மாதாந்த சம்பளத்தில் 75 வீதத்தை தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்ய செலவிடுவதாகவும், அதனால் அந்தக் குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக மிகக் குறைந்தளவே ஒதுக்க முடியும் எனவும் அறிக்கை காட்டுகிறது. 

பணவீக்கம் காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் தங்களது சேமிப்பில் பெரும்பகுதியை செலவழித்துள்ளதாகவும், அந்த குடும்பங்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிக்கலை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்  டயானா கமகேவுக்கு இலங்கை பிரஜாவுரிமை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அவரது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள பலர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமகி ஜன பலவேகய தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வந்த அவர் தற்போது அவரது குடியுரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சமகி ஜனபலவேகவின் எம்.பி பதவியை பெறுவதற்கு அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பலரிடையே போட்டி நிலவி வருவதாக, இதுவரையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கூறப்படுகின்றது. 

அவ்வாறு வெற்றிடம் நிலவினால் அந்த இடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர அல்லது சுஜீவ சேனசிங்க ஆகிய இருவரில் ஒருவரை நியமிப்பது குறித்து சஜித் பிரேமதாச கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

முன்னாள் அமைச்சரும் பொதுஜன ஐக்கிய பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்தார்.

இவர் ஒரு மாதத்திற்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தார்.

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் திரு.பசில் ராஜபக்ஷ இன்று காலை 08.30 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.

ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லோககே, பவித்ரா வன்னியாராச்சி, சாந்த பண்டார, எஸ்.எம்.சந்திரசேன, பிரசன்ன ரணவீர, பியல் நிஷாந்த உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவும் அவரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறைக்கு வருகை தந்திருந்தனர். 

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் விசேட கூட்டமொன்று அண்மையில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரன் தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

“சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும்” என ஏனைய கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்காக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சமகி ஜன பலவேகவின் உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்தில் இணைவதற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர்களில் ராஜித சேனாரத்ன எம்.பி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர் சமகி ஜன பலவேக அலுவலகத்தில் இருந்துள்ளார்.

எவ்வாறாயினும், சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அவர்களில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் முக்கியமானவர்கள்.

எமக்கு அமைச்சர் பதவியை வழங்காமல் சமாதிக்கு ஜனாதிபதி எவ்வாறு அமைச்சர் பதவியை வழங்க முடியும் என கூறுகின்றனர்.

பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி ஆள் கடத்தல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

டுபாய் மற்றும் ஓமானுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் என அடையாளம் காணப்பட்டவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதாள உலகக் குழு உறுப்பினர் என்று கூறப்படும் "மன்னா கண்ணா" என்ற நபர் மீது இனந்தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது கிராண்ட்பாஸ் – நவகம்புர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கை மற்றும் தலையில் சுடப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ் தனது 40 வயது காதலரான ஜோர்டான் லோம்பார்டியுடன் பிரேசிலியாவில் உள்ள பார்க்வே ஓட்டலில் தங்கி இருந்தார்.

லோம்பார்டியாவும் மார்செல்லாவும் ஜனவரி 2023 இல் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். அழகி மார்செல்லா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலையில், அவர்களுக்குள் சண்டை ஏறபட்டு உள்ளது.

அப்போது லோம்பார்டியிடம் இருந்து கைத்துப்பாக்கியைப் பறித்து அவரை சுட்டு உள்ளார். படுகாயம் அடைந்த காதலர் லோம்பார்டி மருத்துவமனையில் சிகிஅச்சி பெற்று வருகிறார்.

பின்னர் அவர் நிர்வாணமாக லோம்பார்டியின் ஆடி கியூ7 காரில் தப்பிக்க முயன்று உள்ளார். அப்போது ஓட்டலின் வாயிலில் டிரைவரை தாக்கி உள்ளார்.பின்னர் பள்ளி பேருந்தின் ஓட்டுநரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உள்ளார்.

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் அலுவலகம் (Office of the Overseas)  என்ற நிறுவனத்தை டிசம்பர் மாதத்திற்குள் ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதுடன், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அதனுடன் நேரடியாக தொடர்புகொண்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதற்கான சந்தர்ப்பத்தை இது வழங்கும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றவுடன் புலம்பெயர்ந்தோரிடமும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமும் நாட்டுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை லண்டனில் சந்தித்து கலந்துரையாடிய புலம்பெயர் சமூகத்தினரை புலம்பெயர்ந்தோர் என்ற பெயருக்கு பதிலாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் என அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளார்.

புதிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் சிங்கள மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தோர் இந்த அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு இலங்கையில் முதலீடு செய்யலாம்.

மற்ற முதலீட்டாளர்களை இணைக்கும் வாய்ப்பும் உள்ளது.

புதிய அலுவலகத்தை அமைப்பதற்கான அமைச்சரவை ஆவணம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், டிசம்பர் மாத இறுதிக்குள் அலுவலகத்தை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

வங்கிகளில் பெறப்படும் கடனுக்கான வட்டி வீத அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

வங்கிகளில் குறைந்த வட்டியில் வாங்கிய கடனுக்கு தொழிலதிபர்கள், மக்கள் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தலைமையில் நடந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே நிவாரணம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “கடனை செலுத்த எங்களிடம் பணம் இல்லை. பெரிய பட்ஜெட் இடைவெளி உள்ளது. வட்டி விகித உயர்வு தற்காலிகமானது. முதலில் நீங்கள் அதை கட்டுப்படுத்த வேண்டும். தற்போது IMF உடன் பேசி வருகிறோம். ஜனவரிக்குள், இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு சாதகமாக பதிலளிக்கும். கடன் மறுசீரமைப்பு நடந்தவுடன், வட்டி விகிதம் மாறும்.

இதில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வங்கி வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்மைகளை விளக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விரைவான வட்டி வீதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வங்கி வாடிக்கையாளர்கள் குறுகிய காலத்திற்கு தமது கடனுக்கான வட்டியை மாத்திரம் செலுத்துவதற்கு உரிய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு ஆலோசனைக் குழுவிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

நேற்றைய தினம் வாகனேரி கண்டத்து வயல்களுக்கு நீர்பாச்சுகின்ற ஆறுகளிலும், வயல்களிலும், அணைகட்டுகளிலும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெறுவதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

அத்துடன் அதனை பார்வையிட்டு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்;

சட்டவிரோத மண் அகழ்வு. வனபாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் இவ்வாறான மண் அகழ்வுகள் இடம்பெறுகின்றது.

இது பாரிய அளவில் சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது. பின்னணியில் யார் உள்ளார். மாவட்டத்தில் இரண்டு அரச சார் அமைச்சர்கள் என்ன செய்கின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுச் சூழலுக்கான அமைச்சர் உள்ளார்.

பல தலைமுறைகளாக மக்கள் விவசாயம் செய்து வந்த காணிகள் அரச காணிகள் வனத்துறைக்கு சொந்தமான காணிகள் என கையகப்படுதிவிட்டு. சட்ட விரோத மண் அகழ்வு மற்றும் வள சுரண்டல்களுக்கு இடமளிக்கின்றார்கள்.

ஆனால் அங்குள்ள மக்கள் காட்டுக்குள் விறகு வெட்டுவதற்காக செல்லும் வேளை வன பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அதற்கான தண்டனை உட்பட இருபதாயிரம் மட்டில் அபராதமும் செலுத்தியுள்ளார்கள்.

இவை இப்படி இருக்க மிகவும் வெளிப்படையான முறையில் மண் அகழ்வானது இடம்பெறுகின்றது. வனத்துறையினருக்கு சொந்தமான காணியில் மண் சேமிக்கப்பட்டு கடத்தப்படுகின்றது.

இதன் பின்னணியில் வனத்துறையும் உள்ளதா? மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் இதுதான்.

இவ்வாறான விடயங்கள் வெளியில் வரும் என்னும் பயமே காரணம். மண் அகழ்வுக்கு எமது மாவட்ட இரு அமைச்சர்களும் பின்னால் உள்ளார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்புக்கு என கட்டப்படுள்ள வரம்பை உடைத்து அதன் மூலம் கடத்துகின்றனர்.

அடுத்ததாக இங்குள்ள அரசியல் வாதிகள் தமது அரசியல் சுயலாபம் மற்றும் சுயநலம் கருதி தமிழ் முஸ்லீம் என பாகுபாடு காட்டி மக்களை பிரித்துவிட்டு இவ்வாறான சட்டவிரோத செயல்பாடுகளில் ஒன்றாக செயல்படுகின்றார்கள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பக்கமாக பிரித்து மக்களுக்கு சொந்தமான வளங்கள் சூறையாடப்படுகின்றது.

இவ் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் அல்லாதுவிடில் எமது மக்களும் எதிர்கால சந்ததியும் நிர்க்கதியாகுவது வெகு விரைவில் நடைபெறும். என்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.