web log free
July 27, 2024
kumar

kumar

மருமகன் தாக்கி, மாமியார் பலியான சம்பவமொன்று வலப்பனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வலப்பனை தெரிப்பெய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் இச்சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், 59 வயதுடைய டப்ளியூ.ஜி.ரணசிங்க என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் வறுமையை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் பகிந்தளிக்கப்பட்டன.

அவ்விடத்தில், மகள், மருமகன், மாமி ஆகிய மூவரும் வந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.

அதன்போதே, மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால், 27 வயதான மருமகன், மாமியாரை தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவ்விடத்திலே​யே மாமி உயிரிழந்தார்.

பிரேத பரிசோதணைக்காக ரிகலகஸ்கட பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்த தெரிப்பெய பொலிசார் மருமகனை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். 

பட்ஜெட் மீதான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு இன்று முடிவடைந்தது.

பெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் பதிவாகின.

சபையில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்று என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். 

சி.வி.விக்னேஸ்வரன் சபையில் இருக்கவில்லை. 

சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துபாய் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுற்றுலா விசா பெற்று நாட்டுக்கு வேலைக்குச் சென்ற இவர்களில் பலர் நாட்டில் வேலை கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சில இலங்கை இளைஞர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் வீதிகளில் தங்கி இலங்கையர்களிடம் பணம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

வேலை அனுமதிப் பத்திரமாக தயாரிக்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் காரணமாக டுபாய் மாநிலத்தில் பலர் இலங்கைக்கு திரும்புவதற்கு கடவுச்சீட்டு பெற முடியாமல் தவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, துபாய் சென்று பலாத்காரத்திற்கு உள்ளான பெண்கள் உள்ளிட்டவர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் இசுரு பண்டார வெலிக்கடை சிறைச்சாலையில் தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தினாரா அல்லது சிறையில் தொலைபேசி கொடுத்தனரா என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

இசுரு பண்டார நபர் ஒருவருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபடும் ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதன்படி, இசுறு சிறைச்சாலையின் நலன்புரி பிரிவில் உள்ள கைதிகளின் தொலைபேசியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதா அல்லது அவர்களின் தனிப்பட்ட தொலைபேசியை அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தொடர்பில் சிறைச்சாலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக திலினி பிரியமாலியிடம் இருந்து இரண்டு செல்போன்களை சிறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு ஒழுக்கத்தினை கற்பிப்பதற்கு முன்னர், கூட்டமைப்பிலுள்ள சாணக்கியனுக்கு ஒழுக்கத்தினை கற்பிக்க வேண்டும் எனவும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.ஏ சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார். 

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  மத்திய செயற்குழு நேற்று கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. 

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முதன்முறையாக தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் இதுவரையில் அமைச்சுப் பதவிகளையும் பெற்றுள்ளனர்.

இன்று (21) மெட்டியகொட நமிமியாவ பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது பலப்பிட்டிய வைத்தியசாலையின் முதலாம் வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக மெட்டியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பலபிட்டிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைது செய்யப் போகும் போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரனும் தங்கையும் வசித்து வந்த நிலையில் தனிமையில் இருந்த தங்கையை சகோதரன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதுடன் 26 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேவையான ஆதரவை பொதுஜன பெரமுன வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுன எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பூரண ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்படுவேன் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உத்தேச அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மொட்டு கட்சி தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் தனிப்பட்ட விடுமுறைக்காக அமெரிக்கா சென்றிருந்த திரு.பசில் ராஜபக்ச நேற்று (20) இலங்கை திரும்பினார்.

அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்தார்.

ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்சியை ஒழுங்குபடுத்துவதற்காக அவர் திடீரென நாட்டுக்கு வந்துள்ளதாக மொட்டு கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அவரது வருகையின் பின்னர் இதுவரை காலதாமதமாகி வந்த அமைச்சரவை நியமனங்களும், ஆளுநர் நியமனங்களும் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.