web log free
May 04, 2024
kumar

kumar

15 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 64 வயதுடைய நபருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. மாத்தளை வேவல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மே 5, 2008 அன்று, சந்தேக நபரின் வீட்டில் சிறுமியை கூரிய ஆயுதத்தைக் காட்டி மிரட்டப்பட்டு வன்புணரவுக்குள்ளாகியுள்ளார். இதன்படி, நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பை மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹன ஜயவர்தன இன்று அறிவித்தார்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி, தனது வாடிக்கையாளரின் வயதை கருத்திற் கொண்டு அவருக்கு தண்டனை வழங்குமாறு நீதிமன்றில் கோரினார். ஆனால் சிறுமியொருவரின் இந்த வன்புணர்வை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையாகிய அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்கு முன்னுதாரணமாக அமையும் வகையில் தண்டனை வழங்குமாறும் அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரியுள்ளார். அதன்படி அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சிறுமிக்கு 150,000 ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நிலைமை குறித்து அறிக்கை அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் கருத்துகளை முன்வைப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டார்.

சூரியனிலிருந்து 2 இலட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள இழை ஒன்று வெடித்து சிதறியுள்ளது. அந்த வெடிப்பனால் சிதறிய காந்த துகள்கள் பூமியைத் தாக்கக் கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நாசா சோலார் அப்சர்வேட்டரி சூரியனில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

சூரிய வெடிப்புகள் மேலும் சில சூரிய வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த சூரிய வெடிப்பினால் ஏற்படும் சிதறல்களால் ரேடியோ தகவல் தொடர்புகள், மின்சக்தி கட்டங்கள், மின்சார சிக்னல்கள் மட்டுமின்றி விண்வெளி வீரர்கள், விண்கலங்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரிய மேற்பரப்பில் 1,30,000 கிலோமீட்டர்கள் முழுவதும் 10க்கும் அதிகமான இருண்ட கருக்களைக் கொண்டுள்ளது.

செவ்வாய்க் கிழமை காலை சூரியனில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் இருந்து சூரியப்புயல் வெளியேறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரி56 ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தந்தை மற்றும் இரு மகன்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (04) மாலை வவுனியா வேப்பம்குளம் பகுதியில் வசிப்பவர் ஒருவர் மலசலகூட குழியை மீண்டும் தோண்டும் போது 3 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குடியிருப்பாளர் கைவிடப்பட்ட கழிவறை குழியை மீண்டும் பயன்படுத்துவதற்காக தோண்டிய போது இந்த வெடிகுண்டுகள் தொடர்பில் நெல்லுக்குளம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் அந்த இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 03 வகையான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

60 மில்லிமீற்றர் மோட்டார் ரவுண்டு, கைக்குண்டு மற்றும் ஆளணி எதிர்ப்பு கண்ணி என்பன அங்கு காணப்பட்டன.

கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் அனைத்தும் மோசமாக சேதமடைந்துள்ளதுடன், யுத்தத்தின் போது எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் வெடிகுண்டுகளை வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வவுனியாவில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகளை நீதிமன்ற உத்தரவுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிக இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, வசந்த முதலிகே தப்பிச் செல்ல முயன்றார் எனக்கூறி அவரைக் கொலை செய்யும் ஆபத்து காணப்படுவதாகவும் சபைக்கு அறிவித்தார்.

ஜெனிவாவில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பேசப்படும் தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் இவ்வாறு நடந்துக்கொள்வது சரியா? எனவும் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பினார்.

இந்த விடயத்தில் நடந்திருப்பது அரச பயங்கரவாதமே எனவும் தெரிவித்த சஜித், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீதும் இந்த அரசாங்கம் தாக்குதலை மேற்கொள்கிறது எனவும் தெரிவித்தார். 

கடந்த காலங்களில் நாட்டை அழித்தது ராஜபக்சர்கள் இன்றி 16 இலட்சம் அரச உத்தியோகத்தர்களே என தற்போதைய அரசாங்கம் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும்,இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹபராதுவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோடீஸ்வரர்களுக்கு பெரும் வரிச்சலுகைகளை வழங்கி நாட்டை வங்குரோத்தியமாக்கியது ராஜபக்சக்களே என சுட்டிக்காட்டிய பிரேமதாஸ அவர்கள்,அதற்காக அரச ஊழியர்கள் குற்றம் புரிந்தவர்களாக மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

வெள்ளைப்பூண்டு,எரிவாயு,

தேங்காய் எண்ணெய்,

சீனி,நிலக்கரி போன்ற அனைத்து மோசடிகளின் பின்னணியிலும் ராஜபக்சர்கள் இருந்ததை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்,

எனவே,இதற்கு அரச ஊழியர்கள் பொறுப்பல்ல எனவும் தெரிவித்தார்.

நாட்டை வங்குரோத்தடைய செயற்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பிரேமதாஸ அவர்கள் இங்கு வலியுறுத்தினார்.

ஹபராதுவ தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளர் சுமணசிறி லியனகே அவர்கள் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் மது பாவனையில் குறிப்பிடத்தக்க குறைப்பு பதிவாகியுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 215 மில்லியன் லீற்றர் மதுபானம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பிரிவின் உப தலைவர் நளீன் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரை மக்கள் 120 மில்லியன் லீற்றர் மதுபானங்களை மட்டுமே உட்கொண்டுள்ளதாக நளீன் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் திங்கட்கிழமை (03) சர்வதேச மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்

ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் எதிர்க்கட்சி மூன்று உறுப்பினர்களுக்கு அமைச்சரவை பதவிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த மூன்று எம்பிக்களுக்கும் பெரும்பாலும் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலும் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் நிரந்தர அமைச்சரவை நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர் பதவியை வகிக்க வேண்டிய 12 பேரின் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மொட்டுவுக்கு 12 அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமாயின், எஞ்சிய கட்சிகளுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குவதிலும் சிக்கல் ஏற்படும்.

ஏனைய கட்சிகளைச் சேர்ந்த ஜீவன் தொண்டமான் மற்றும் அதாவுல்லா இருவருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்ட வஜிர அபேவர்தன மற்றும் அரசாங்கத்தில் இணையவுள்ள துமிந்த திஸாநாயக்க ஆகிய இருவருக்குமே ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வழங்குவார் என அறியப்படுகிறது. 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் நோக்கில் இலங்கையின் அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான பிரதான சட்டமூலத்தின் மீதான விவாதம் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக விவாதம் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 6 மற்றும் 7ம் திகதிகளில் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டது.