முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக நாம் முன்னர் தெரிவித்திருந்தோம்.
இந்த செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வார இறுதி ஒரு தேசிய பத்திரிகையில் கருத்து தெரிவிக்கும் போது.,
தான் ஒரு கட்சித் தலைவர் என்றும் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல் முன்னணியின் தலைவர் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனவே கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தலைவணங்குவதே தமது கொள்கை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை சிறப்பாக செய்து வருவதாகவும் அவரை பதவியில் இருந்து நீக்க எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரவுக்கு ஒரு நாட்டை ஆள்வதற்கு தேவையான சர்வதேச தொடர்புகள் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு குறைந்தபட்சம் மாலைதீவில் கூட எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் ,இன்று மக்கள் விடுதலை முன்னணி மக்களை பயமுறுத்தி கூட்டங்களுக்கு
அழைப்பதாகவும் கூட்டங்களுக்கு வராதவர்களை அடுத்த தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது என்று கூறி மக்களை பயமுறுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இது இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடன் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு திறைசேரிக்கு தகுதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட விசாரணையின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான கடமைகளை ஆரம்பிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு 770 மில்லியன் ரூபாவை கோரிய போதிலும், இதுவரை நிதியமைச்சு அந்த தொகையை வழங்கவில்லை.
வெல்லவாய நகருக்கு அருகில் இன்று (11) காலை 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மொனராகலை மற்றும் புத்தளயை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களை ஆய்வு செய்வதற்காக இரண்டு புவியியலாளர் குழுக்கள் அந்த பகுதிகளுக்கு சென்றதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
மொனராகலை, புத்தள, வெல்லவாய, கும்புக்கன, ஒக்கம்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
எனினும் இன்றைய நிலநடுக்கத்தின் தாக்கத்தை தாங்கள் உணரவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
ஆறு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வலம்புரி சங்கு ஒன்றினை நுவரெலியா அதிரடிப் படையிரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று இரவு (10) ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ஸ்ரதன் பகுதியில் சுருவத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று இரவு குறித்த வீட்டினை சோதனை செய்த போது மிகவும் சூட்சுமமான முறையில் அரிசி பாத்திரம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வலம்புரி சங்குடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த வலம்புரி சங்கினை ஆறு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வலம்புரி சங்கு மற்றும் சந்தேக நபர்கள் இன்று (11) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து இன்று (10) விபத்து ஏற்பட்டுள்ளது.
இரத்தினபுரி - சிறிபாகம வீதியில் இந்துருவ - மஹவங்குவாவிற்கு அருகில் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தில் பயணித்த 28 பேர் காயமடைந்து கிலிமெல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமானதால் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையின் மொனராகலை - புத்தல வெல்லவாய பகுதியில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இது 3 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் என்றும், அச்சப்படத் தேவையில்லை என்றும் மையம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தாக்கல் செய்த ரிட் மனு, உச்ச நீதிமன்றத்தால் இன்று பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தேசிய தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டபடி நடத்துவதற்கு இலங்கையின் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க தேசிய தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே முன்னெடுத்துள்ள நிலையில், இந்த விடயத்தில் உத்தரவுகள் அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செல்லுபடியாகாத ரிட் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தர உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், நிதிச் செயலாளர், பிரதமர், அமைச்சரவை செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும், மேற்படி மனுவை பரீட்சைக்கு எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்றத்தை நிராகரிக்குமாறு கோரி SJBயின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமான் பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் ஆகியோரால் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மேலும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரினால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், சட்டத்தரணி சுனில் வட்டகல, எரங்க குணசேகர, மற்றும் வி.சந்திரசேகரன் ஆகியோர் இடைத்தரகர்களாக மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அதன்படி, மேற்கூறிய மனுக்களை தொடர வேண்டாம் என உச்ச நீதிமன்ற அமர்வு முடிவு செய்தது.