web log free
April 27, 2024
kumar

kumar

பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை முறைப்படுத்தி ஒரு வாரத்திற்குள் நாட்டை வழமைக்கு கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முதல் தடவையாக கூடிய அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவலறிந்த வட்டாரங்களின்படி, ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கோட்டா முறையின் கீழ் விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பை பாதுகாப்பதற்கும், மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்.

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தார்.

இந்த நிலையில் 18 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பதவியேற்றுள்ளனர்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் - தினேஷ் குணவர்தன

கல்வி அமைச்சர் - சுசில் பிரேம ஜயந்த

கடற்றொழில் வளங்கள் அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா

சுகாதாரத்துறை அமைச்சர் - கெஹெலிய ரம்புக்வெல

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் - பந்துல குணவர்தன

விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் - மகிந்த அமரவீர

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் - ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச

சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் - ஹரீன் பெர்னாண்டோ

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் - ரமேஷ் பத்திரன

நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க

வெளிவிவகாரத்துறை அமைச்சர் - அலி சப்ரி

பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் - விதுர விக்ரமநாயக

வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் - கஞ்சன விஜேசேகர

சுற்றாடற்றுறை அமைச்சர் - நஸீர் அஹகமட்

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் - ரொஷான் ரணசிங்க

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் - மனுஷ நாணயக்கார

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - டிரான் அலஸ்

வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் - நளின் பெர்னாண்டோ

இலங்கையின் 27வது பிரதம மந்திரியாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தினேஷ் குணவர்த்தன பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்சே, நாமல் ராஜபக்சே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் உயிர் தப்பிய இளைஞரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில்,கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் அதிரடிபடையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏழு போராட்டக்காரர்களும் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில்,பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த போராட்டக்காரர் ஒருவர் பாதுகாப்புத்தரப்பினரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 எனினும் இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஒரு சிவிலியன் தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளைஇராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை போராட்டக்கள பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை நாளை (22) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நாளை பிற்பகல் பதவியேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கை பொலிஸ் சேவையின் நலனை விரிவுபடுத்துதல்
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் அவர்களின் ஆலோசனையின்படி அனைத்து காவல்துறை அதிகாரிகளின் நலனை விரிவுபடுத்தும் வகையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

1. காவல்துறை அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர பயணப்படியை அதிகரிக்க வேண்டும்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த பயணக் கொடுப்பனவை 2023 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 14 நாட்களில் இருந்து 21 நாட்களாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. காவல்துறை அதிகாரிகளுக்கான சட்ட உதவி நிதியை நிறுவுதல்.

காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்வதில் எதிர்கொள்ளும் சட்ட விஷயங்களுக்காக சட்ட உதவி நிதியை அமைப்பதற்கான அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த நிதியை காவல்துறை ஆணையர் தலைமையிலான குழு மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்வகிக்கிறது. கூறப்பட்ட குழு, அனைத்து காவல்துறை அதிகாரிகளும் இந்த சட்ட உதவியைப் பெறலாம், தேவைப்பட்டால், அவர்கள் திறமையான ஜனாதிபதியின் வழக்கறிஞர் குழுவின் ஆதரவையும் பெறலாம்.

3.உதவி காவல் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து உயர் பதவிகளுக்கு வழங்கப்படும் வாகனங்கள்.

உதவிக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு மேல் உள்ள பணியிடங்களுக்கு வாகனங்களை வழங்கும்போது, ​​சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி அல்லது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியின் மனைவிக்கு வாகன உரிமையின் நிபந்தனை நீக்கப்படும். மேலும், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு இருந்த அனுமதி, போலீஸ் கராஜ் தொழில்நுட்ப பொறியாளரின் பரிந்துரையின் பேரில் 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு வழங்கப்பட்டது.

அகிலா தென்னகோன்
பொது பாதுகாப்பு அமைச்சர் பத்திரிக்கை செயலாளர்
பொது பாதுகாப்பு அமைச்சகம்

ஜனாதிபதி செயலகத்தில் தொடர்ந்தும் தங்கியுள்ள காலி முதூற செயற்பாட்டாளர்களை அங்கிருந்து வெளியேற்ற நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு கோட்டை பொலிஸார் தயாராகி வருகின்றனர்.

சட்டமா அதிபர் திணைக்களம் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் கோட்டை பொலிஸாருக்கு அதன் செயலாளர் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில் இந்த நீதிமன்ற உத்தரவை எடுக்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, போராட்டம் என்ற போர்வையில் பிரதமர் அலுவலகத்தை ஜனாதிபதி அலுவலகம் கையகப்படுத்துவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சமகி ஜன பலவேகவின் சுமார் பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் வாக்களித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

அவர்களில் 08 பேர் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனவும் ஏனையவர்கள் சிங்களவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியினால் அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் சமகி ஜன்பலவேகவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இணையவுள்ளதாகவும் அவர்களில் சிலருக்கு அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், எதிர்க்கட்சியின் பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் சஜித் பிரேமதாச வகித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி, எதிர்க்கட்சியின் பெரும்பான்மையை வைத்திருக்கும் கட்சி அல்லது குழுவிடம் பறிபோகும் அபாயமும் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.

அதன்படி அவர் நாட்டின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இதேவேளை, அவருக்கு கீழ் பிரதமர் பதவியை வகிக்க நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தினேஷ் குணவர்தன, விஜேதாச ராஜபக்ஷ, சரத் பொன்சேகா மற்றும் சுசில் பிரேம ஜயந்த ஆகியோர் பின்வருமாறு முன்மொழியப்பட்டுள்ளனர்.