இலங்கையில் அரசாங்க பாடசாலைகளுக்கு இம்மாதம் விடுமுறை வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அடுத்த வாரம் அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்று கொண்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதுடன், 18ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் கடந்த 2021ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இந்த ஏப்ரல் மாதம் வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் இவ்வாண்டிற்கான முதலாம் தவணை கற்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் சில விமானங்கள் சேவையிலிருந்து நிறுப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திடீரென முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி கொழும்புக்கும் பஹ்ரைனுக்கும் இடையேயான UL201 மற்றும் UL202 விமானங்களை நிறுத்த முடிவு எட்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் ஆலயத்தை பொது மக்கள் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஞானாக்கா நடத்தி செல்லும் காளி ஆலயத்தில் ஆன்மிக அமைதி தேடி கோட்டாபய அடிக்கடி அங்கு சென்று வருவது வழமை.
இந்நிலையில் ஜனாதிபதி ஆலயத்திற்கு வரவுள்ளார் என்ற தகவலின் பேரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் சம்பவ இடத்திற்கு ஏராளமான பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அனுராதபுரத்தில் பல எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் பொது அவசர நிலையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார்.
இதன்படி, நாட்டில் அவசரகால நிலை பிரகடனமாகியுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட அதிகாரங்களை கொண்ட இந்த வர்த்தமானியின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை உள்ளடக்கி இடைக்காலஅரசு அமைக்கப்படாவிட்டால், அமைச்சு பதவிகளை துறந்து அரசிலிருந்து வெளியேறுவோம்.
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றிரவு கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஜனாதிபதிக்கு நாளை கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
கொழும்பு நுகேகொட பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் பாரிய ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்திரளானவர்கள் இணைவதால் கொழும்பில் இணைய வசதி முடக்கப்பட்டுள்ளது.
தற்போது காலை 6 மணிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை அதிகாலை 6.00 மணி வரை மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரும் சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று (01) அதிகாலை நாட்டின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டது.
மிரிஹான பெங்கிரிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மின்வெட்டை தவிர்ப்பதற்கு போதுமான எரிபொருளை பெற்றுக்கொடுக்க எரிசக்தி அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளது.
தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியாமையினால், பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தீர்ப்பளிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நாணய சபை, மத்திய வங்கியின் ஆளுநர், மின்சார சபை, அரசாங்க நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களும் மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மின்வெட்டினை தவிர்ப்பதற்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக 200 மில்லியன் டொலர்களை ஒதுக்குமாறு நிதி அமைச்சர், திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு 2016 ஆம் ஆண்டு முதல் அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு பலமுறை கடிதங்களை அனுப்பி வைத்துள்ள போதிலும் அது தொடர்பில் எந்த நிறுவனமும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, அதுவே தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
மின் உற்பத்தியை துரிதமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தாம் அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாகவும், 2015 ஆம் ஆண்டின் பின்னர் பாரிய மின்னுற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையெனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முடிவதற்குள் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதற்காக எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பணம் தேவையெனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சார உற்பத்திக்கு தேவையான போதுமானளவு எரிபொருள் கிடைக்காமையே, மின்வெட்டுக்கான காரணம் என தெரிவித்துள்ள ஆணைக்குழு, அது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சினை அறிவுறுத்த தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மின்சார உற்பத்தியை துரிதப்படுத்தவும், எரிபொருளை வழங்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மனுவில் கோரியுள்ளது.
சட்டத்தரணி யொஹான் குரே, நிரஞ்சன் அருள் பிரகாசம், சமித் சேனாநாயக்க, ஹர்ஷ பெர்னாண்டோ மற்றும் சட்டத்தரணி G.G. அருள்பிரகாசம் ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேயரின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இவ்வாறு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரட்டுவ குருச சந்தி பகுதியில் இருந்து காலி வீதியை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் வில்லோராவத்தை பகுதியிலுள்ள மொரட்டுவ மேயரின் இல்லத்திற்கு பேரணியாக சென்றனர்.