எரிபொருள் விலைகள் மற்றும் வரி விகிதங்கள் அடுத்த ஆறு மாதங்களில் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் உதவி கேட்கத் தயாராக இருப்பதாக அவர் ராய்ட்டர் செய்தி சேவையிடம் தெரிவித்தார்.
சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்க இலங்கை தயாராகி வருவதாகவும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைக் காலத்திற்கு விண்ணப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜூலை மாதம் செலுத்த வேண்டிய $1 பில்லியன் கடன் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
அடுத்த ஐந்து வாரங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1,945 அமெரிக்க டொலர்களாக உள்ளது.
இதனிடையே, இந்தியாவிலும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளது.
இதேவேளை, இலங்கை தங்க சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருகின்றது.
22 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 166,000 மற்றும் 24 காரட் தங்கம் ரூ. 180,000 ஆக காணப்படுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதற்காக எடுத்த தீர்மானம் இரண்டு அமைச்சர்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 4ஆம் திகதி அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்வதற்கு முன்னதாக பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமர் தனது முடிவை அறிவிக்க இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட பலரது வற்புறுத்தலின் பேரில் பிரதமர் இந்த முடிவை மாற்றியுள்ளார்.
பிரதமர் பதவி விலகினால் தானும் அரசியலில் இருந்து விலகுவேன் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
பிரதமர் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த நிலையில், அழுத்த நிலைமை காரணமாக அது கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் பிரதமர் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நள்ளிரவு தாண்டி இன்று காலையும் தொடர்கிறது.
மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்ற போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மழையில் நனைத்தபடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதன் புகைப்படங்கள் சில வருமாறு,
'கோட்டா கோ ஹோம்' - காலி முகத்திடல் வளாகத்தில் இன்று காலை ஆரம்பமான மக்களின் தன்னெழுச்சி போராட்டம் இரவிலும் தொடர்கின்றது.
அரசாங்க ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கினால் ஜனாதிபதி பதவியுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் ஆட்சியை ஏற்பதானால் ஜனாதிபதி பதவியுடன் கூடிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு – காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றது.
பல்வேறு தொழிற்சங்கத்தினரும் இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டுள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
இலங்கையின் தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர் கிறிஸ் சில்வர்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரர் மிக்கி ஆர்தரின் இரண்டு வருட ஒப்பந்தம் ஜனவரிலயில் முடிவடைந்ததை அடுத்து தற்போது காலியாக இருந்த பதவியை சில்வர்வுட் ஏற்றுக்கொள்கிறார்.
சில்வர்வுட் சமீபத்தில் இங்கிலாந்து ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார், ஆனால் பேரழிவு தரும் ஆஷஸ் தொடருக்குப் பிறகு நீக்கப்பட்டார், இங்கிலாந்து ஐந்து டெஸ்டுகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் இழந்தற்காக .
2022 டி 20 உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய தொடரைத் தொடங்குவதற்கு முன், இலங்கையுடனான அவரது முதல் பணி அடுத்த மாதம் பங்களாதேஷில் ஆரம்பமாகும் எனவும் தெரியவருகின்றது .
பேரூந்துகளுக்கு ஏற்றப்படும் ஆட்டோ டீசல் மண்ணெண்ணெய் போன்ற துர்நாற்றத்தை வெளியிடுகிறது ,தனியார் பேருந்துகளுக்கு நேற்றும் முந்தியும் செலுத்தப்படும் ஆட்டோ டீசலின் தரத்தில் பிரச்சினை இருப்பதாக லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) இன்று தெரிவித்துள்ளது.
LPBOA தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, பேருந்துகளுக்கு செலுத்தப்படும் டீசல் மண்ணெண்ணெய் போன்ற வாசனையை வெளியிடுகிறது.
சமீபத்தில் ஊடகங்களுக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு டீசல் மாதிரிகளை காண்பிக்கும் போது, ஒரு மாதிரி மண்ணெண்ணெய் துர்நாற்றம் வீசுகிறது ஆனால் மற்றொன்று இல்லை என்று கூறினார்.
நாட்டிற்கு வழங்கப்பட்டு வரும் டீசலின் தரத்தில் கடுமையான சிக்கல் உள்ளது என்றார்.
மாதிரிகள் விசாரணைக்காக பொலிஸ் மா அதிபரிடம் (IGP) ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.