web log free
December 23, 2024
kumar

kumar

 

குருணாகலிலுள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டை சுற்றிவளைப்பதற்கு ஆயிரக்கணக்காக மக்கள் நேற்று முன்தினம் சென்ற போது அவர் ஒழிந்ததாக தெரியவந்துள்ளது.

குருநாகல் நகருக்குள் நுழைந்த மக்களை உள்ளே நுழைய விடாமல் பொலிஸார் வீதித்தடைகளை பயன்படுத்தினர்.

இந்த நிலையில் ஜோன்ஸ்டன் தனது பலத்தை காட்டுவதற்காக சிலரை அழைத்து வந்துள்ளதுடன், மக்களை தாக்குவதற்கும் தயாராக இருந்துள்ளார். எனினும் தான் தாக்கப்படலாம் என்ற அச்சத்திலும் இருந்த ஜோன்ஸ்டன் , கொழும்பு 02, யூனியன் பிளேஸில் உள்ள லிலீ ஸ்ட்ரீடில் அமைந்துள்ள ட்ரைஸ்டார் என்ற ஹோட்டலில் மறைந்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த ஹோட்டல் அவருக்கு சொந்தமானது என்ற போதிலும் அந்த தகவல் இதுவரையில் மறைக்கப்பட்டதாக உள்ளதென ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அமைச்சர் ஜோன்டன் மாத்திரமின்றி அமைச்சர்கள் மற்றும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஹோட்டல்களில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

பயணங்களின் போது பாதுகாவலர்கள் இன்றி சிறிய வாகனங்களில் முகங்களை மறைத்துக் கொண்டு செல்வதாகவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, நேற்று இரவு பந்துல குணவர்தனவின் வீட்டையும் மக்கள் சுற்றிவளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரை சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் இன்றைய தினம் கட்டளையிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோரே இவ்வாறு சபை அமர்விலிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது நிலையியற் கட்டளையை கோடிட்டு காட்டிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறித்த இரு எம்.பிக்களையும் வெளியேற்றுமாறு படைகல சே​விதர்களுக்கு பணித்துள்ளார்.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை வளாகத்திதை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் அவர்கள்

அலரிமாளிகைக்கு செல்லும் பகுதியானது இப்பொழுது வீதி தடைகள் போடப்பட்டு வழிமறிக்கப்பட்டுள்ளது ,தடுப்புகளை உடைக்க முற்பட்டதை அடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பெருமளவு இராணுவத்தினர், பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை குறிப்பிடத்தக்கது .

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 136(1)(ஏ) பிரிவின் பிரகாரம், தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டின் விசாரணைகளுக்கு அமையவே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை ஏப்ரல் 18ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவினால் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தயாராகி வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .

கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது .

இன்றைய நாட்களில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 180 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

பேக்கரி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலை 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தற்போது பல சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்
சில பேக்கரி உரிமையாளர்கள் மீன் ரொட்டியை 120 ரூபாய்க்கும், ஒரு சாண்ட்விச் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்வதால், பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ சீனியின் விலை 250 ஆகவும், ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் ரூ.1100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை விசேட பொது விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இது தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

இன்று தலவாக்கலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பில் நடைபெற்றது.

தலவாக்கலையில் திரண்ட மக்கள் வெள்ளம் ஆக்ரோஷ ங்களை அரசாங்கத்திற்கு எதிராக வெளிப்படுத்தினார். 

இன்று காலை 11 மணியளவில் தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியின் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பித்த பேரணி தலவாக்கலை நகரை அடைந்து பின்னர் நகரசபை மைதானம் வரை சென்று நிறைவு பெற்றது.

பண்டிகைக்கால முற்கொடுப்பனவு, சம்பளத்திற்காகவும்
ரூ.123 பில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த மாதத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்த மேலும் ரூ. 13 பில்லியன் இன்று விடுவிக்கப்படுவதாகவும் அலி சப்ரி தெரிவித்தார்.

தற்போதைய பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதுதான் ஒரே தீர்வு எனவும் ஆனால் இதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று நாட்டில் இருக்க வேண்டுமெனவும், எனவே எதிர்க்கட்சிகள் முன்வந்து அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்."

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்துக்கு சமூகமளித்தார் .

நாட்டின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தை அவதானிப்பதற்காக அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 

2022 பட்ஜெட்டில் ஆண்டுக்கான வரி விதிக்கக்கூடிய வருமானமான மிகைவரி சட்டமூலம் நாடாளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

வருடாந்தம் ரூ.2000 மில்லியன் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரே தடவையில் 25 சதவீத வரியை அறவிடும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.

மிகைவரி சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு திருத்தங்களுடன் மிகைவரி சட்டமூலம் வாக்கெடுப்பு இல்லாமல் இன்று காலை நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd