இந்திய உதவியின் கீழ் வழங்கப்படவுள்ள 270,000 மெட்ரிக் டன் எரிபொருட்களில் ஒரு பகுதி இன்று இலங்கையை வந்தடைந்தது .
கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியக் கடனுதவியின் கீழ் வழங்கப்பட்ட டீசல் பெற்றோல் மற்றும் சரக்குக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்ததக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
தலா 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அறியமுடிகின்றது .
நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலவும் காலத்தில் 79,200 லீற்றர் டீசல் கொண்ட மொத்தம் 12 பவுசர்கள் அம்பத்தளை நகரில் உள்ள CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது எனினும் இந்த டீசல் மக்களுக்கு விற்பனை செய்யப்படவில்லை என தெரியவருகின்றது .
மேலும் 36,000 லீற்றர் கொண்ட ஆறு பவுசர்கள் இன்று அதே எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக தெரியவருகின்றது.எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் அப் பகுதி மக்களால் பல புகார்கள் வந்ததை தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டது ,கடந்த ஏழெட்டு நாட்களாக டீசல் வரவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்
விசாரணையின் மூலம் புதிதாக திறக்கப்பட்டஇந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஜனாதிபதி செயலகத்தின் பிரத்தியேக செயலாளர் ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது என தெரியவந்தது . குறித்த பிரத்தியேக செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய எரிபொருள் இருப்புக்கள் அம்பத்தளை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரியவந்தது
புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல முன்னாள் அமைச்சர்களும் மீண்டும் நியமிக்கப்படுவார்கள், ஆனால் ராஜபக்ச குடும்பத்திற்கு மிகக் குறைந்த அளவிலான அமைச்சர்கள் மட்டுமே இருக்கும்.
இந்த அமைச்சரவைக்கு மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பிரதிநிதிகள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை கைவிட்டு அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை எனவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறுவதற்கான தீர்மானம் மாற்றப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன சந்திப்பின் பின்னர் தெரிவித்தார்.
நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது, நாட்டில் இன்று பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதனைத் தீர்ப்பதற்கு எல்லோரும் கட்சி பேதமின்றி செயற்படவேண்டியது அவசியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின்போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாம் தோற்றுவிடுவோம் என்றால் அது நாடாளுமன்றத்தின் தோல்வியாகவே கருதப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் தொடர்பில் உடனடியாக நாம் ஆராய வேண்டி உள்ளதாகவும், இல்லையேல் ஆயிரம் உயிர்கள் கொல்லப்படும் ஆபத்து உள்ளதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ஏன் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்ட்டது, எந்த காரணத்திற்காக நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது? சமூக வலைத்தளங்கள் நாட்டில் முடக்கப்பட்டமைக்கான காரணம் என்ன என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இன்று நாட்டில் நிதி அமைச்சர் இல்லை. புது நிதி அமைச்சர் பதவி ஏற்றார் பின்னர் அவரே விலகிச் சென்றார் இதற்கான காரணம் என்ன? இன்று நாட்டில் நிதி அமைச்சர் யார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
அமைதியான போராட்டத்தில் இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் தாங்கிய படையினர் வந்து செல்கின்றனர். யார் இவர்கள்? எதற்காக இப்படி வந்தார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்எனினும் இதுவரை சபைக்குள் சமூகமளிக்கவில்லை என தெரியவந்துள்ளது .
ஜனாதிபதி சபைக்குள் பிரவேசிக்கும் பட்சத்தில் அவரிடம் கேள்வி எழுப்ப எதிர்கட்சி தயாராகி வருகின்றது.
முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ நேற்று இரவு 10.25 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி சென்றதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது, இவர் ராஜபக்சக்களின் சகோதரி என்பது குறிப்பிடதக்கது.