web log free
December 22, 2024
kumar

kumar

மட்டக்களப்பு – கரடியனாறு, ஈரளக்குளம் குடாவெட்டை வயலில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

4 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று(14) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று(14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 20 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வென்னப்புவ – வயிக்கால பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் சமூக வலைத்தளத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகப்புத்தகத்தின் (Facebook) ஊடாக தெரிந்துகொண்ட குழுவினர் போதைப்பொருட்களுடன் விருந்துபசாரமொன்றை முன்னெடுப்பதாக வென்னப்புவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்குளி, கனேமுல்ல, நீர்கொழும்பு, அனுராதபுரம், வத்தளை மற்றும் மீரிகம உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்த 2 கிராம் 110 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், 5 கிராம் ஹஷீஸ் போதைப்பொருள், 27 கிராம் கஞ்சா மற்றும் 15 போதைவில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, நாளை மறுதினம்(16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாக்தாத்-ஈராக்கில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்நிலையில், நேற்று ஈரானின் அண்டை நாடான ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க துாதரகத்தை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.இது குறித்து, அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:வடக்கு ஈராக்கின் இர்பில் நகரில் அமைந்துள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது, 12க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

 
latest tamil news

இந்த ஏவுகணைகள், அண்டை நாடான ஈரானில் இருந்து ஏவப்பட்டுள்ளன.எனினும், இந்த தொடர் தாக்குதல்களில் யாருக்கும் எந்த பாதிப்பும்ஏற்படவில்லை; உயிரிழப்புகள் எதுவும் இல்லை. கட்டடங்கள் மட்டும் சேதமடைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தாக்குதலில், அமெரிக்க துாதரகத்திற்கு அருகில் உள்ள ஒரு 'டிவி' சேனல் அலுவலகமும் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு, அமெரிக்காவும் ஈராக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அனைத்து விபரங்களும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

மொனராகலை – எத்திமலே பகுதியில் பாடசாலையொன்றில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

டிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
 
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
 
சமீபத்தில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சியின் புதிய பெண் மேயர் பிரியா ராஜனை சந்தித்து பேசி எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலானது. இந்நிலையில், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படத்தில், நடிகை நயன்தாரா நெற்றியில் குங்குமத்துடன் இருப்பதை போன்று தெரிகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக பதிவிட்டு, சமூக வலைத்தளங்கில் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை படைத்துள்ளான்.

எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன் எனவும் மாணவன் தெரிவித்தார்.

2021 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

தலைமன்னார், பேசாலை பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மில்லியன் ரூபா பெறுமதியான 1.240 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, பேசாலை பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது, ​​குறித்த வீட்டில் உள்ள அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதுடன், 24 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஐஸ் போதைப் பொருள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்கு கடத்தி வரப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க தலைமன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று (14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டணம் அதிகரிக்கப்படும் விதம் குறித்து இன்றைய தினம் அறிவிக்கப்படும். 

நாளை (14) காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 5 மணிநேர மின்வெட்டும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணி நேர மின்வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd