web log free
March 08, 2026
kumar

kumar

உள்ளுர் தொழில் முயற்சியாண்மையாளர்களை உயர்ச்சியடையச் செய்தல் மற்றும் அவர்களுக்காக புதிய சந்தைகளைத் திறத்தல் என்பவற்றுக்கான அதனது அயராத அர்ப்பணிப்பின் தொடர்ச்சியாக, SDB சமீபத்தில் எப்.ஆர்.சேனநாயக்க மாவத்தையிலுள்ள கொழும்பு நகர சபைமண்டப வளாக முன்றலில், “SDB வியாபார பிரதீபா 2025” வர்த்தக சந்தை துவக்க விழாவினை பெருமையுடன் நடாத்தியது.

இந்நிகழ்வானது SDB வங்கியின் கிராமியஎழுச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நிகழ்வொன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன், அது மேல் மாகாண ஆளுநர், திரு. ஹனிப் யூசுப்; SDB வங்கியின் தவிசாளர், திருமதி டினிதிரத்நாயக்க; நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்றுஅதிகாரி, திரு. கபில ஆரியரத்ன மற்றும் SDB வங்கியின் பெருநிறுவன முகாமைத்துவ அணி என்பவற்றின் பங்கேற்பினால் சிறப்பிக்கப்பட்டிருந்தது.

இச்சந்தையானது பாரம்பரிய உணவு மற்றும் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சூழல் நேய உற்பத்திகள், கைவினைப்பொருட்கள், மற்றும் பத்திக் கைதறி ஆடைகள் போன்ற பல்வேறு உற்பத்திகளினை சிறப்பம்சமாக கொண்டிருந்ததுடன், 100 அதிசிறப்பான உள்ளுர் தொழில் முயற்சியாண்மையாளர்களின் பன்முக திறன்களை வெளிப்படுத்துவதாகவும் காணப்பட்டது. 

அதனது துவக்கம் முதலே, SDB வங்கியின் கிராமிய எழுச்சி நிகழ்ச்சி த்திட்டமானது இலங்கை முழுதுமான சுயதொழில் வாண்மையாளர்களை வலுப்படுத்துவதற்கான கருவியாகவே விளங்கிவந்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள், பிரதேச செயலகங்கள், மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடனான ஒருங்கிணைவினை வளர்ப்பதன் ஊடாக, நாடளாவிய ரீதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3000 இற்கும் மேற்பட்ட சுயதொழில் வாண்மையாளர்களுக்கு வெற்றிகரமாக பலனளித்துள்ளது.

இப்பயணத்தின் ஒரு அங்கமாக, SDB வங்கியானது உயர் தரத்திலான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதன் ஊடாக, குறிப்பிடத்தக்க வருமானம் மற்றும் அங்கீகரிக்கப்படும் நிலையை உருவாக்கி, வர்த்தக சந்தை அனுபவத்தினை பழக்கப்படுத்திக் கொள்ள இச்சுயதொழில்வாண்மையாளர்களுக்கு உதவ பல சிறிய அளவிலாள சந்தைகளை உருவாக்கியிருந்தது. SDB வங்கியினால் இச்சந்தையை ஒழுங்கமைப்பதன் மையநோக்கமாக, இவ்வடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டதாக, SDB வியாபார பிரதீபா 2025”, இச்சிறியவிலான உள்ளுர் சுயதொழில்வாண்மையாளர்களின் உற்பத்திகள் மற்றும்வர்த்தக நாமங்களிற்கான புதிய சந்தை வாய்ப்புக்களையும், புதிய வாடிக்கையாளர் பிரிவுகளையும் மற்றும் நல்ல அங்கீகாரத்தினையும் திறந்துள்ளது. 

இந்நிகழ்வின்போது, இவ்வுள்ளுர் சுயதொழில்வாண்மையாளர்களின் வியாபாரத்தினை மேலும்  விளம்பரப்படுத்துவதற்காக SDB வியாபார பிரதீபா மார்க்கெட்பிளேஸ் எனும் தலைப்பில் சந்தை வடிவில் முகநூல் சமுதாய குழுவொன்றையும் ஆரம்பித்துள்ளது. இப்புத்தாக்கமான மேடையானது அவர்களது அடைவுகளை விரிவுபடுத்துவதற்கும் தங்களது உற்பத்திகளை பரந்த வாடிக்கையாளர்களுக்கு விளம்பரப்படுத்துவதற்கும் ஆர்வமிகு வாயப்புக்களை வழங்குவதுடன், வளர்ச்சி மற்றும் அறியப்படுவதற்கான புதிய பாதைகளையும் உருவாக்கியுள்ளது. 

இந்நிகழ்வில் உரையாற்றும்போது, நிறைவேற்று பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. கபில ஆரியரத்ன அவர்கள், “எம்முடைய கிராமிய எழுச்சி நிகழ்ச்சித்திட்டமானது ஒருதுவக்கம் என்பதற்கும் அப்பாலானது; இது உள்ளுர் சுயதொழில்வாண்மையாளர்களை கிராமிய சமுதாய எழுச்சியூடாக வலுப்படுத்துவதற்கும், புத்தாக்கத்தினை முற்செலுத்தவும் மற்றும் எமது தேசத்தின் சுயதொழில்வாண்மையாளர்களது திறனுக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதற்குமான செயற்பாடாகும். எம்முடைய சொந்த சுயதொழில் வாண்மையாளர்களது திறன்களையும் புத்தாக்கத்தினையும் மதித்து வளர்க்கும் வங்கியொன்றாக, அவர்களது அனைத்து வகையான வியாபார நடவடிக்கைகளின் அபிவிருத்தியிலும் ஆதரவளிப்பதில் மிக்கபெருமிதம் கொள்கின்றோம்.” என்றார்.

இவ்வர்த்தக சந்தை மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சந்தை இடங்கள் என்பவற்றின் ஊடாக, SDB வங்கியானது இலங்கையின் அபிவிருத்தி வலு மையமாக விளங்கும் அதன் நோக்கத்தினை விரிவுபடுத்தியுள்ளது. வியாபரா வளர்ச்சிக்கான விலைமதிப்பற்ற மேடையொன்றினை உருவாக்கியிருப்பதன் ஊடாக, ஒரு நேரத்தில் ஒரு வியாபாரத்திற்காக சுயதொழில்வாண்மை கிடைப்பரப்பை நிலைமாற்றுவதனை தொடரும். 

SDB வங்கி:

வாடிக்கையாளர் மைய மற்றும் ஒவ்வொரு தனிநபரினதும்தேவைகளுக்கென நேர்த்தியாக்கப்பட்ட பொருத்தமானஆதரவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட, எதிர்காலத்திற்குதயாரான வங்கியொன்றாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதான பலகை மற்றும் BB +(lka) பிட்ச்ரேட்டிங்கிலான பட்டியலுடன், இலங்கை மத்திய வங்கியினால்ஒழுங்குப்படுத்தப்படுகின்ற அனுமதிப்பெற்றவிசேடத்துவப்படுத்தப்பட்ட வங்கியொன்றாகும். நாடளாவியரீதியில் 94 கிளைகளின்  வலையமைப்பினூடாக, வங்கியானது நாடுமுழுதும் அதனது சில்லறை, சிறிய மற்றும்நடுத்தர தொழில்முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வியாபாரவங்கியியல் வாடிக்கையார்களிற்கு நிதிச் சேவைகளின்பொருத்தமான வகைகளை வழங்குகின்றது. நிலைபேறானநடைமுறைகளின் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள் மற்றும்வியாபாரங்களை உயர்த்தும் துடிப்பான குவிமையத்துடனானசுற்றுச்சூழல், சமூக, மற்றும் ஆட்சி கோட்பாடுகள் SDB வங்கியின் நெறிமுறைகளில் ஆழப்பதிந்துள்ளன. வங்கியானதுஇலங்கையை புதிய உயரங்களிற்கு இட்டுச்செல்வதனைநோக்கமாகக்கொண்டு, பெண்களின் வலுப்படுத்தல், சிறியமற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் நிலைபேறானஅபிவிருத்தி மற்றும் எண்ணிய உள்ளடக்கம் என்பவற்றைமேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

 

நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தினார்.

இவ்வாறு அவரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர கால சட்டம் பொது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுயதாக உயர் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது.

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவதில் பிழையான தகவலை வழங்கிய சம்பவத்தில் அப்போது மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருபவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை CID யினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை பொலிசார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக அப்போது மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை சிஜடி யினர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சட்டத்துக்குப் புறம்பாக கடந்த அரசாங்கத்தில் வாகனப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளமை வெளிச்சத்துக்கு வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நிகழ்வில் உரை நிகழ்த்திய அமைச்சர்:

சமீப நாட்களாக சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை வைத்திருப்பவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.

இருவரும் பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஆட்சியிலிருந்ததால்,ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்காது சட்டத்துக்குப் புறம்பாக வாகனத்தை பரிமாறிக் கொண்டனர்.

இவ்வாறான ஊழல் தொடர்பில் முன்னரே ஏன் வெளிப்படுத்தப் படவில்லை எனக் கேட்க வேண்டாம். இரகசியமாக சட்டத்துக்குப் புறம்பாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வாகனங்கள் இவ்வாறு மரிமாறப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்தினர் தமது வியாபாரங்களுக்காக மாத்திரமே ஆட்சி செய்தனர். நாம் அவ்வாறில்லை. மக்களுக்காகவே எமது அரசாங்கம் செயற்படுகிறது.

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை இயங்கும் நேரத்தை முப்பது நிமிடங்கள் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மாதத்திற்கு இருபது நாட்கள் வேலை செய்வதைக் கருத்தில் கொண்டால், அது பத்து மணி நேரம் என்று இலங்கை சுயாதீன ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமல் விஜேரத்ன கூறுகிறார்.

அதன்படி, நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தில் அதிகரிப்பு இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை குறைக்கும் நோக்கில், 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டத்தைத் திருத்துவதற்கான வரைவு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம் இல. 1 ஆகியவற்றை ரத்து செய்யும் சட்டத்தை வரைவதற்கான கடந்த மாத அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து இது நடைபெற்றது.

இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் கொள்கை நிகழ்ச்சி நிரலான “வளமான நாடு அழகான வாழ்க்கை” இன் ஒரு பகுதியாகும், இது போன்ற உரிமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சீர்திருத்தத்தை ஆதரிக்கும் இரண்டு வரைவு சட்டமூலங்களைத் தயாரிக்க சட்ட வரைஞருக்கு அறிவுறுத்துவதற்கான நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சரின் முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்தது.

வாராந்திர அமைச்சரவை சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, உரிமைகளைக் குறைப்பதற்கான முன்மொழியப்பட்ட திருத்தம் எந்தவொரு தனிப்பட்ட முன்னாள் ஜனாதிபதியையும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

"முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட அனைத்து குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பு. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பும் உள்ளது, மேலும் சட்டத்தை உருவாக்கும் போது இந்த காரணிகள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டன," என்று அவர் கூறினார், குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

1986 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் கீழ் இயற்றப்பட்ட அசல் சட்டம், ஓய்வுபெறும் ஜனாதிபதிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகவும், வீட்டுவசதி மற்றும் பிற உரிமைகள் தொடர்பான தெளிவான விதிகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் நம்புவதாகக் கூறினார்.

புதிய சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயதிஸ்ஸ மேலும் கூறினார். 

ஐந்து வருட காத்திருப்பின் பின்னர் மாபெரும் வெற்றியினை உருவாக்கி, இலங்கையின் மிகமுக்கிய மோட்டார் பந்தயங்களில் ஒன்றாக மீளவும் வெற்றிபெற்றுள்ளது ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே வளவை சுபர்க்ரோஸ் 2025.

புத்துயிர்க்கப்பட்ட பரபரப்பான போட்டிகள் தனிச்சிறப்பான வெற்றிகள், மற்றும் வரலாற்றுச் சாதனை செய்த ரசிகர்களின் பங்கேற்பு என்பவற்றுடன், இந்நிகழ்வானது இலங்கையின் முதற்தர தன்னியக்க சுத்திகரிப்பு நிறப்பூச்சு வர்த்தக நாமமான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் பிரதான அனுசரணையினால் வலுவூட்டப்பெற்றிருந்தது.

முக்கியத்துவம் வாய்ந்த செவனகலயின் கிராப்ட்ஸ்மேன் ஒட்டோட்ரோமில் ஜுலை 12 மற்றும் 13  வார இறுதிகளில் இடம்பெற்ற வளவை சுபர்க்ரோஸானது 50,000 இற்கும் மேற்பட்ட உற்சாகமிக்க பார்வையாளர்களை ஈர்த்திருந்தது.

இந்நிகழ்வானது - 21 அதிர்ச்சிகரமான பந்தயங்கள், அதிநவீன பாதுகாப்பு உட்கட்டமைப்புக்கள், மற்றும் சமுதாயம்போட்டிப்பந்தயங்கள் மற்றும் புத்தாக்கத்தின் புதுப்பிக்கப்பட்ட ஆதர்சம் என ஒவ்வொரு முகப்பினையும் வெளிப்படுத்தியிருந்தது.

இலங்கையின் மிகவும் கொண்டாடப்பெற்ற மோட்டார் பந்தய வெற்றியாளரும், ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் நீண்டகால வர்த்தகநாம தூதுவரும், SL-GT 3500 பிரதான நிகழ்வினில் வெற்றியீட்டி, தன்னுடைய சாதனைமிக்க தொழில்வாழ்வில் மற்றொரு பதக்கத்தினைச் சூடிக்கொண்டவருமான அஷான் சில்வா மீது கவனம் வெகுவாக குவிந்திருந்தது.

இவ்வார இறுதியானது பந்தயம் என்பதனைத் தாண்டி உயிர்ப்பானதாக காணப்பட்டதுஎன்ற ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் இலங்கைக்கான தலைவர் திரு. வைத்தியலிங்கம் கிரிதரன் அவர்கள், மேலும் இலங்கையின் மோட்டார் பந்தயத்தில் இப்புதிய அத்தியாயத்திற்கு அனுசரணை வழங்கியதில் நாம் அளவிடமுடியாதளவு பெருமையடைகின்றோம். எம்முடைய தொடர்ச்சியான அனுசரணையானது நாட்டின் வாகன கைத்தொழிற்றுறைக்கான அதிநவீன நிறப்பூச்சு தொடக்கம் மோட்டார் பந்நதயங்கள் மற்றும் தொழிநுட்ப கல்வி வரை- எமது அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துகின்றது. எம்முடைய பங்குதாரர்கள் மற்றும் மோட்டார் பந்தய சமுதாயத்துடன் இணைந்து செயற்பாடு மற்றும் முன்னேற்றம் இரண்டையும் முற்கொண்டுசெல்ல நாம் உதவுகின்றோம்என்றார். 

வளவை சுபர்க்ரோஸிலான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் அனுசரணையானது உள்நாட்டு வாகன கைத்தொழிற்றுறையை உயர்த்துவதிலான பரந்த மூலோபாயத்தின் ஒரு அங்கமாகும். அதனது நம்பிக்கைமிகு தன்னியக்க நிறப்பூச்சு பிரிவுகள் முதல் தொழிற்பயிற்சி அதிகாரசபைகள் போன்ற நிறுவனங்களுடனான அதனது பங்குடைமை வரையில், ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது திறன் அபிவிருத்தி, தர மேம்பாடு மற்றும் நீண்டகால நிறுவன வளர்ச்சி என்பவற்றில் வினையூக்கத்துடன் முதலிட்டு வருகின்றது.

ஆசியாவின் மிகப்பெரியதும் மிகவும் மதிக்கப்படுவதுமான நிறப்பூச்சு கம்பெனிகளில் ஒன்றான - ஏசியன் பெயிண்ட்ஸ் குழுமத்தின் உறுப்பினராக, ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது 80 வருடங்களிற்கு மேற்பட்டதும், 15நாடுகளில் காணப்படுவதும், R&D கலையில் தனிச்சிறப்பானதும், உலகளவில் தனித்துவமான உற்பத்தி தரநிர்ணயமிக்கதும் தன்னியக்க அலங்காரகைத்தொழில்சார், மற்றும் பாதுகாப்புமிக்க நிறப்பூச்சுக்களின் பாரம்பரியத்தினை இலங்கைக்கு கொணர்கின்றது. இதனது தன்னியக்க நிறப்பூச்சு தீர்வுகளானவை ஒப்பற்ற நீடிப்பு,துல்லியமான பூரணத்துவம், மற்றும் தொழிநுட்ப புத்தாக்கங்கள் - உலகத்தரம்வாய்ந்த பெறுபேறுகளை வழங்க  பயிற்சிப்பட்டறைகள் திருத்தகங்கள், துறைசார் தொழில் வல்லுநர்களிற்கு உதவுதல் என்பவற்றுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வளவை சுபர்க்ரோஸ் 2025 ஆனது அதனது பரபரப்பான பந்தயங்களுக்காக மாத்திரமின்றி அதன் போராட்டக் குணம்பங்குடைமை மற்றும் பகிரப்பட்ட வேட்கை என்பவற்றுக்காகவும் நினைவிற்கொள்ளப்படும். இவ்வரலாற்று சிறப்புமிக்க மீள்வருகையில் ஒரு பாகமாக விளங்கியமைக்கு ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது பெருமையடைவதுடன் - இலங்கையின் தன்னியக்க அதியுன்னதத்தின் எதிர்காலத்தினை வலுவூட்டும் அதன் நோக்கத்திலும் திடமாக காணப்படும்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு வீடு என்பது ஒரு பெரிய கனவு. இருப்பினும், குறைந்த வருமானம் கொண்ட சாதாரண மக்கள் தங்கள் வீட்டுக் கனவை நனவாக்குவது கடினம்.

அதனால்தான் அரசாங்கம் இது தொடர்பாக ஒரு சிறப்பு முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, குறைந்த வருமானம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வீடற்றவர்களுக்கு வழங்கப்படும் வீட்டு உதவி ஆகஸ்ட் 1 முதல் ரூ. 700,000 முதல் 1,000,000 ரூபாய் அதிகரிக்கப்படும் என்று கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் உபாலி பன்னிலகே கூறுகிறார்.

மேலும், உதவித் தொகையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு புதுப்பிப்பதற்காக வழங்கப்படும் 3 லட்சம் ரூபாய் 5 லட்சமாக உயரும். 

அதன்படி, மாற்றுத்திறனாளிகளின் சுகாதார வசதிகளுக்காக கழிப்பறைகள் கட்டுவதற்கு வழங்கப்படும் ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகையை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, சமீபத்தில் ஒரு முட்டையின் விலையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஒரு சிவப்பு முட்டை - ரூ. 29 

ஒரு வெள்ளை முட்டை - ரூ. 27 

விலைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டு, விலைகள் மீண்டும் திருத்தப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. இதன்படி, முட்டை ஒன்றின் விலையை இரண்டு ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, முன்பு 26 ரூபாயாக இருந்த முட்டையின் விலை, தற்போது 24 ரூபாயாக உள்ளது. நேற்று (21) நடைபெற்ற குழு விவாதத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

பண்ணை முட்டை விலை வெள்ளை முட்டைகளுக்கு 24 ரூபாயாகவும், சிவப்பு முட்டைகளுக்கு 26 ரூபாயாகவும், மொத்த விலை வெள்ளை மற்றும் சிவப்பு முட்டைகளுக்கு 27 மற்றும் 29 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. 

இன்றைய தினத்துக்குள் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக மின்சார சபையின் சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் பிரபாத் பிரியந்த தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் ஊடாக மின்சார பாவனையாளர்களுக்கோ மின்சாரசபை ஊழியர்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. 

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம்  மின்சாரசபையை 6 பங்குகளாக பிரித்து, அடுத்துவரும் ஓர் இரண்டு வருடங்களில் இது தனியார் மயமாகும் வகையில்  25, 30 பங்குகளாக பிரிக்கப்படும். 

மின்சக்தி அமைச்சர், மின்சார சபை தொழிற்சங்கம்,  ஊழியர்களுக்கு முகம்கொடுப்பதில்லை, கலந்துரையாட இடமளிப்பதில்லை, கடிதங்களுக்கு பதிலளிக்காமல், வேறு சிலருக்கு இந்த நடவடிக்கையை கையளித்துவிட்டு மறைந்து செயற்படுகிறார்.

அதனால் மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுறை அறிவித்துவிட்டு இன்று கொழும்புக்கு வர தீர்மானித்திருக்கிறது. என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd