பாக்தாத்-ஈராக்கில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்நிலையில், நேற்று ஈரானின் அண்டை நாடான ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க துாதரகத்தை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.இது குறித்து, அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:வடக்கு ஈராக்கின் இர்பில் நகரில் அமைந்துள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது, 12க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
|
இந்த ஏவுகணைகள், அண்டை நாடான ஈரானில் இருந்து ஏவப்பட்டுள்ளன.எனினும், இந்த தொடர் தாக்குதல்களில் யாருக்கும் எந்த பாதிப்பும்ஏற்படவில்லை; உயிரிழப்புகள் எதுவும் இல்லை. கட்டடங்கள் மட்டும் சேதமடைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தாக்குதலில், அமெரிக்க துாதரகத்திற்கு அருகில் உள்ள ஒரு 'டிவி' சேனல் அலுவலகமும் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு, அமெரிக்காவும் ஈராக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அனைத்து விபரங்களும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மொனராகலை – எத்திமலே பகுதியில் பாடசாலையொன்றில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை படைத்துள்ளான்.
எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன் எனவும் மாணவன் தெரிவித்தார்.
2021 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
தலைமன்னார், பேசாலை பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மில்லியன் ரூபா பெறுமதியான 1.240 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, பேசாலை பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது, குறித்த வீட்டில் உள்ள அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதுடன், 24 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஐஸ் போதைப் பொருள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்கு கடத்தி வரப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க தலைமன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று (14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்டணம் அதிகரிக்கப்படும் விதம் குறித்து இன்றைய தினம் அறிவிக்கப்படும்.
நாளை (14) காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 5 மணிநேர மின்வெட்டும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணி நேர மின்வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற உள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளவென எதிர்வரும் 30ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மார்ச் 30 ஆம் திகதி கொழும்பு வரும் பிரதமர் மோடி, பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் மார்ச் 31 ம் திகதி யாழ்ப்பாணம் பயணம் செய்ய உள்ளார்.
பிரதமர் மோடி அங்கு ஈழத் தமிழர்களை சந்தித்து இந்திய அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தநிலையில் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதுகுறித்து ரஷியாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்காய் ரியப்கோவ் கூறியதாவது:-
அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ரஷிய படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏராளமான ஆயுதங்களை உக்ரைனில் குவித்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தான செயல்.
அதுபோன்று ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ரஷிய ராணுவத்தின் சட்டப்பூர்வ தாக்குதலுக்கு இலக்குகள் என்பதே மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
உக்ரைனுக்கு வெளிநாட்டு ஆயுதங்களை கொண்டு செல்லும் வாகனங்களும், ரஷிய ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும். ரஷியாவின் எச்சரிக்கையை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதனால் உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகள் இடையே எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்பட வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.