web log free
May 08, 2025
kumar

kumar

சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று (16) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி இன்று காலை 06.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், அத்தியாவசிய நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்க சுகாதார சங்கங்களும் தீர்மானித்துள்ளன.

எனினும் இன்று காலை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சுகாதார தொழிற்சங்கங்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை வழங்கினால், வேலை நிறுத்தம் தொடரும் என சுகாதார தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்கும் நோக்கில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் 'TIN' இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்தார்.

வெளிநாட்டில் உள்ள ஒருவர் இலங்கையில் இருந்து வருமானம் ஈட்டினால் (வட்டி வருமானம், வாடகை வருமானம் அல்லது வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை மூலம் வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள்) அவர்கள் கண்டிப்பாக TIN எண் வேண்டும் என்றும் அவர் கூறினார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

 TIN  எண் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், வாகனப் பதிவு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மோட்டார் வாகனத் திணைக்களத்துடன் கணினிகளை இணையப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலங்கை சுங்கத்துடன் கணனி வலையமைப்பினால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் திணைக்களம் பெற்றுக் கொள்கிறது என்றும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.

அனைத்து நிறுவனங்களுடனும் வலையமைப்பதன் மூலம் தலைமறைவாக இருக்கும் வரி ஏய்ப்பு செய்பவர்களை அடையாளம் காண முடியும் என்றார்.

நாட்டின் பல முக்கிய மாவட்டங்களில் காற்றின் தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளமை பாரதூரமான நிலைமை என மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காற்றின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக அந்த அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு, பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டை போன்ற மக்கள் செறிவான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற 105 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோன்று யாழ்ப்பாணத்தில் 100க்கு அண்மித்த காற்றின் தரச் சுட்டெண் மதிப்புகள் பதிவானது, இது ஆரோக்கியமற்ற காற்று நிலையைக் குறிக்கிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை முன்னிறுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று இந்துக்களால் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

பொங்கல் என்பது தமிழர்கள் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஆகும். வயல்களில் நல்ல விளைச்சல் கிடைக்க உதவி செய்த சூரியன், இயற்கை அன்னை, பண்ணை விலங்குகள் அனைத்துக்கும் நன்றி சொல்லும் கொண்டாட்டமாகப் பொங்கல் அமைகிறது.

நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும் பொங்கல், தை மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. தை மாதம் மங்களகரமான மாதமாகக் கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14 அல்லது 15 அன்று தை மாதம் பிறக்கும்.

பொங்கல் பண்டிகையின்போது சமைத்து சாப்பிடும் உணவின் பெயரும் பொங்கல். இது ஓர் இனிப்பு கலந்த சாதம். “பொங்கு” என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து “பொங்கல்” உருவானது.

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உர மூடை ஒன்றின் விலையை 8500 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது உர மூடையொன்று 12,000 முதல் 14,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இதன் காரணமாக தோட்ட உரிமையாளர்கள் தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவது குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் ஒரு ஏக்கரில் பறிக்கப்படும் தேயிலையின் நிறை 216 கிலோ கிராமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உரத்தின் விலையை குறைத்து விற்பனை செய்வதற்கு அரசுக்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சோமாலியாவில் அல்-ஷபாப் தீவிரவாதிகளின் கைகளில் இலங்கை விமானப்படை (SLAF) சிப்பந்திகள் வீழ்ந்ததாக கூறப்படுவதை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு கடுமையாக மறுத்துள்ளது. 

மேலும், மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் விளக்குகிறது.

அங்கு பயணித்த 5 பேர் கொண்ட குழுவினர் பத்திரமாக உள்ளதாக அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆபிரிக்காவில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளது.

MI வகையை சேர்ந்த குறித்த விமானம் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு விபத்திற்குள்ளாகியுள்ளது. 

எனினும், விமானப்படை வீரர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக விமானம் விபத்திற்குள்ளாகியதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கடற்படைத் தளபதியின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பொஹொட்டுவ பாராளுமன்ற உறுப்பினர்களை சமகி ஜன பலவேகவுடன் இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள சஜித் அணி எம்.பி.க்களில் பலர் இந்தச் செயல்முறைக்கு எதிரானவர்கள்.

இதனைத் தடுத்து நிறுத்தாவிட்டால் எம்.பி.க்கள் குழுவொன்று பாராளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி முரண்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு கட்சி தலைமை தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு கடன் சுறாக்கள் இலங்கைக்கு வந்து 300 வீத அதிக வட்டிக்கு கடன்களை வழங்கி இலங்கையர்களை கடன் வலையில் சிக்க வைக்கும் மோசடியை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடனை செலுத்துவதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டால், கடனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு குடும்பங்களை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுப்பதாக பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்து கடன் வலையில் சிக்கிய மக்களை அழைத்து வந்து கலந்துரையாடியதாகவும், ஆனால் சட்டத்தின் ஓட்டைகள் காரணமாக இதற்கான தீர்வுகளை வழங்க முடியாதுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

வங்குரோத்து நாட்டில் பணம் இல்லாத மக்களை சுரண்டவே வந்துள்ளனர் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இவ்வாறான இணையத்தில் கடன் வழங்கும் திட்டங்களில் கடன் பெற்ற எவரும் கடனை செலுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd