web log free
May 07, 2025
kumar

kumar

அனைத்து நிறுவனங்களும் ஒரே விலையில் அல்லது சிறிதளவு வித்தியாசத்தில் எரிபொருளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தில் வழங்கப்படும்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஒரே மதிப்பில் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கம் மேலும் கருத்து தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய கிடங்கு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார், மேலும் 14 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட மிகவும் சவாலான காலகட்டத்தில் பதவியை ஏற்ற அவரது அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக உவைஸ் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அமைச்சர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் முறைகேடுகளைக் குறைப்பதற்கும் முழு அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையின் ஊடாக நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

பிரதேச செயலகப் பிரிவுகள், பிரதேச சபைகள், மாநகர சபைகள், மாவட்டச் செயலக அலுவலகங்கள் உள்ளிட்ட ஒன்பது அரச நிறுவனங்கள் மற்றும் ஒன்பது முன்னோடித் திட்டங்களும் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கி நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அரச சேவையானது டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக வினைத்திறனுடையதாகவும் பலப்படுத்தப்படும் எனவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் “Digicon 2023-2030” வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார். 

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான காலநிலை தொடரும் எனவும், மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேற்கு சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் மி.மீ. 75க்கு மேல் கனமழை பெய்யும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நீதிமன்ற தீர்ப்பை திருத்துமாறு முல்லைத்தீவு நீதவானுக்கு யாராவது அழுத்தம் கொடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (03) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

நீதித்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும், அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்தி சட்டங்களை இயற்றுவதை மாத்திரமே மேற்கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.

முல்லைத்தீவு நீதவான் தனது முடிவை மாற்றுமாறு தமக்கு அழுத்தம் கொடுத்ததாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறியதன் பின்னர் அச்சுறுத்தல்கள் மற்றும் மன அழுத்தங்கள் காரணமாக பதவி விலகியதாக நீதவான் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“அவருக்கு தேவையற்ற அழுத்தம் இருந்தால், நாட்டை விட்டு வெளியேறி புகார் செய்யக்கூடாது. அரசியல் சட்டத்தின்படி, அவரைப் பாதித்த நபருக்கு நோட்டீஸ் அனுப்பவும், அவரை நீதிமன்றத்திற்கு வரவழைக்கவும் அல்லது கைது ஆணை பிறப்பிக்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது. அவர் ஒரு வழக்கை ஒதுக்கி குற்றவாளியை தண்டிக்கலாம், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பலாம். அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்றால், அதற்கான பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்” என்றார்.

நீதவான் தொடர்பான விடயத்தை விசாரணை செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், இந்த விடயத்தை கையாள்வதற்கான உரிய நிறுவனம் நீதிச்சேவை ஆணைக்குழு எனவும், இது தொடர்பில் யாருக்கேனும் பிரச்சினை இருந்தால் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

பொஹொட்டுவ தொழிற்சங்க வலையமைப்பின் தூணாக இருந்த வசந்தா ஹந்தபாங்கொட புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமல் லான்சா எம்.பி மற்றும் அந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களுடன் அவர் ஏற்கனவே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார் என்பதும் அறியப்படுகிறது.

இதேவேளை, பொஹொட்டுவ அரசியல் விவகாரங்களில் இருந்து விலகி புதிய கூட்டணியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மேலும் 10 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளதாக இராஜகிரியில் உள்ள கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கம், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் சங்கம், தொழிற்பயிற்சி அதிகார சபை ஊழியர் சங்கம், தபால் ஊழியர் சங்கம், தோட்டத் தொழிலாளர் சங்கம், மகாவலி தொழிலாளர் சங்கம், வலையமைப்புத் தொழிலாளர் சங்கம், நில அளவைத் தொழிலாளர் சங்கம், அரச அச்சகத் தொழிலாளர் சங்கம் மற்றும் கலாச்சார விவகாரங்கள் ஒன்றியம் ஆகியவை இதில் அடங்கும். 

நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் இருந்து 02 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு முற்றிய நிலையில் கணவன் மனைவியை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்றத்தினால் சிறைச்சாலை அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளக்கமம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனைக்கென மாதிரியுடன் வருகை தந்த வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபரான முருங்கன் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி தப்பியோடி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,

மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வங்காலையை சேர்ந்த சாரதி ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் நபர் ஒருவரும் ஐஸ் போதை பொருள் விற்பனைக்கு என 179 கிராம் எடை கொண்ட மாதிரி ஐஸ் போதைப்பொருள் பொதி ஒன்றை சனிக்கிழமை இரவு முருங்கன் பாடசாலைக்கு பின்புற மைதானத்தில் அரச அம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வந்த நிலையில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இரு நபர்களும் பொலிஸ் அதிகாரிக்கு கடித்து, தாக்கி தப்பிக்க முயன்ற நிலையில் பிரதான சந்தேக நபரான முருங்கன் (வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி சாரதி) தப்பி ஓடியுள்ளார்.

மற்றைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரச அம்புலன்ஸ் வாகனத்தில் போதை பொருள் கடத்தப்பட்டமை பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்புலன்ஸ் வண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் இரண்டாம் சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

குறித்த வங்காலையை சேர்ந்த முருங்கன்முன்னதாக பல்வேறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அம்புலன்ஸ் வண்டி பல தடவைகள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு சந்தேக நபர்களின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்று (03) கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் "22 கெரட்" தங்கத்தின் விலை 153,000 ரூபாவாக குறைந்துள்ளது.

இது, கடந்த வாரம் செவ்வாய்கிழமை 156,800 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இதனிடையே கடந்த செவ்வாய்கிழமை 169,500 ரூபாவாக காணப்பட்ட "24 கெரட்" தங்க பவுன் விலை இன்றைய தினம் 165,500 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்விற்காக இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட 26 இலட்சம் ரூபா மின் கட்டணத்தை நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இலங்கை மின்சார சபையின் பிரதான கிளையில் செலுத்தியுள்ளார்.

பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சனத் நிஷாந்த, தனது இறால் பண்ணையின் வருமானத்தில் இருந்து உரிய மின்சார கட்டணம் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்மூலம், நாட்டின் சாமானியர்களுக்காக உங்களுக்கு வருத்தம் இல்லையா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

நாட்டின் அனைத்து மக்களினதும் மின்சாரக் கட்டணத்தை தன்னால் செலுத்த முடியாது என சனத் நிஷாந்த தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd