முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கோரி கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காலிமுகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி சோசலிச இளைஞர் ஒன்றியம் (SYU) போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றது.
இம்மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற மோதலில் பெருமளவானோர் காயமடைந்துள்ளதுடன் மேலும் சிலர் மரணமடைந்தனர்.
நாட்டின் பொருளாதார நன்மைக்காக புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்க தயார் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதேவேளை எந்த அமைச்சரவை பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தின் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றால் ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரு முக்கிய பிரமுகர்கள் கட்சியின் தீர்மானத்திலிருந்து விலகி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார யுத்த அமைச்சரவையில் இணைய தீர்மானித்துள்ளனர் என கட்சிதகவல்கள் தெரிவித்தன என ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.
பொருளாதாரநெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான நியாயபூர்வமான முயற்சிகளை கட்சி தடுக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் எனவும் ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தாயின் கல்லறையை காப்பாற்ற முடியாவிட்டால் நாட்டை பாதுகாப்பாரா என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
மிக் விமானங்கள் கொள்வனவு தொடர்பான வழக்கு தொடர்ந்தால், தன்னை விட ஜனாதிபதிக்கே அதிக பிரச்சினைகள் ஏற்படும் என்றும்,இவற்றை வெளிப்படுத்திய பின்னர் தனக்கு வெள்ளை வான் அனுப்பி வைக்கப்படுமோ என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம்! ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி
இணைய சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
மக்களுடன் பேசாமல் அறைக்கதவை மூடியதே ஜனாதிபதியின் மிகப் பெரிய தவறு எனவும், அவ்வாறானவரினால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம்! ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி
மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்யவில்லை மாறாக பதவி விலக வைத்தார். ராஜபக்சக்களால் நிராகரிக்கப்பட்டவர் கோட்டாபய ராஜபக்ச
தீப்பிடிக்கும் பேருந்தை நிறுத்த முடியாத மனிதன் எப்படி நாட்டைக் காப்பான்? ஜனாதிபதியின் தாயாரின் கல்லறை தீப்பிடித்தால் நமக்கு என்ன பாதுகாப்பு?
மிக் பரிவர்த்தனை கோப்புகள் இழுக்கப்பட்டால் கோட்டாபயவுக்கு என்னை விட அதிகமான பிரச்சினைகள் வரும்.
கோட்டாபய ஒற்றைக் கருத்துடன் நாட்டை ஆட்சி செய்தார்.மக்களிடம் பேசாது அறைக் கதவை மூடிவிட்டு முடிவுகளை எடுப்பது பொருத்தமற்றது.
ஒருமுறை என்னையும் சிறையில் அடைக்க முயன்றார்கள், இப்போது இதனை சொல்லி வெள்ளை வான் அனுப்புவார்கள் என்றும் இதன்போது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில், மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.
இதன்படி இம்முறை அமைச்சரவை 20 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சி எம்பிக்களும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
பதவிப் பிரமாணத்தை தொடர்ந்து இன்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் முகநூல் பதிவு..
#மனோகணேசன் #இராணுவ_ஆட்சியா?
சற்றுமுன்;
திம்பிரிகஸ்யாய இராணுவ முகாமிலிருந்து
இராணுவத்தினர் "எனது பாதுகாப்புக்காக" என்று கூறி, எனது ஸ்ரீமகாவிஹார வீதி வீட்டுக்கு வந்தார்கள்.
சற்று முன்னுக்கு முன்;
வழமையான MSD பொலிஸ், மேலதிக மூவர் வந்தார்கள்.
இருதரப்பையும் "நன்றி தம்பிகளா, வேண்டாம்" என திருப்பி அனுப்பி விட்டேன்.
2005-2009, கொழும்பின் வெள்ளை வேன், கடத்தல், படுகொலை நெருக்கடி காலத்தியிலேயே என் இதே வீட்டில்தான் இப்படியே இருந்தேன்.
இனியென்ன, இப்படியே இருக்கும்வரை இருப்போம்.
உலகளவில் தங்கத்தின் விலை குறைந்து வருகின்றது. அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,810 அமெரிக்க டொலர்களாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. அதேசமயம், இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 185,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாளைய தினமும்(16) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்(PUCSL) தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
வெசாக் பூரணை தினமான இன்றும்(15) மின்வெட்டு அமுல்படுத்தப்படாமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தற்போது டீசல் துளி அளவும் கையிருப்பில் இல்லை என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் பாரிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கப்பலில் டீசல் இறங்கியதும், டீசல் விநியோகம் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
இன்று எரிபொருள் விநியோகம் இடம்பெறாது எனவும், வெசாக் விடுமுறை காரணமாக கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிக்கு வராததே இதற்குக் காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.