நாடளாவிய ரீதியில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை மின் வெட்டு தொடரும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
தெற்கு மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசம்பர் 1 ஆம் திகதி முதல் 1 மணித்தியால இரவு நேர மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 15 ஆம் திகதி நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 3 வது மின்பிறப்பாக்கியை தேசிய மின்வட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலம் அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும், இரவு வேளைகளில் மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாடளாவிய ரீதியில் இரவு நேர மின்வெட்டு 1 மணி நேரம் குறைக்கப்படும் என்றும் தெரவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை வடக்கு, வாலான பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் ஊடாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கலந்த இனிப்பு வகைகளை விற்பனை செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இனிப்பு பானம் மற்றும் லாலிபாப் போதைப்பொருள் கலந்து விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
23 மற்றும் 25 வயதுடைய சந்தேகநபர்கள் 54 இனிப்பு பான போத்தல்கள் மற்றும் 55 வகையான லாலிபாப்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இனிப்பு பானம் மற்றும் லாலிபாப்களுக்கு அடிமையான குழந்தைகளின் பெற்றோரின் புகார்கள் மற்றும் தனிநபரின் ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து சில காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த இனிப்பு வகைகளுக்கு அடிமையாகி பிள்ளைகளின் கல்வியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஏனையோரை கைது செய்வதற்கான விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (29) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நேற்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் டிசம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி எதிர்க்கட்சிக்கு சென்றவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வர வேண்டும் என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதலே பலர் கட்சியை விட்டு விலக தீர்மானித்துள்ளதாகவும் சிலர் அவ்வாறான தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் பசில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மைத்திரிபால சிறிசேனவை எடுத்துக் கொண்டால் அவர் நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியான பின்னர் எமது கட்சியில் இருந்து எம்.பி.யானார். அதனால்தான் மீண்டும் யோசியுங்கள் என்கிறேன். மொட்டுக்கு செல்பவர்கள் அனைவருக்கும் மிகவும் வசதியான இடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்சவுடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க விருப்பம் உள்ளதாகவும், இணைவது நாட்டுக்காக இருக்க வேண்டும் என்றும் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் வலியுறுத்திய அவர், மறுபக்கம் இருந்தால் நாட்டுக்கு நல்லது. அந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
22ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கோப்பையை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனங்கள் கணித்துள்ளது.
கத்தாரில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த லீக் சுற்றுகளில் ஒவ்வொரு குழுவிலும் முன்னணி உள்ள முதல் இரண்டு அணிகள் சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெறும்.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள லீக் சுற்றுக்களின் முடிவில் பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்த சூப்பர் 16 சுற்றில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கும், அதில் முன்னேறும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்று கோப்பை நோக்கி முன்னேறும்.
இறுதியாக தகுதி பெற்ற கடைசி இரண்டு அணிகள் டிசம்பர் 18ம் திகதி நடைபெறும் இறுதி போட்டியில் பலப்பரீட்சை செய்து உலக கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்வார்கள்.
இந்நிலையில் Opta/Stats Perform என்ற ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனங்கள் உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் செயல்பாட்டு திறன் அடிப்படையில் எந்தெந்த அணிகள் உலகக் கோப்பையை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை பட்டியலிட்டுள்ளது.
இந்த பட்டியலின் அடிப்படையில் பிரேசில் தெளிவான முதன்மை இடத்தை பிடித்து கோப்பையை வெல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும்,அதனை தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உள்ளன என்றும் தெரியவந்துள்ளது.
இன்று முதல் நாளாந்தம் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 3,740 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று நேற்றிரவு (30) நாட்டை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
திலினி பிரியமாலியின் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொரளை சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தனது 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கி, குழந்தையைப் பெற்றெடுக்க ஏற்பாடு செய்த நபருக்கு 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, சந்தேகநபருக்கு மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் தலா 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, சிறைத்தண்டனையை ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவருக்கு 1 மில்லியன் நட்டஈடு வழங்குமாறும் அதைச் செய்யத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அவரது சிறைத் தண்டனையுடன் சேர்க்கப்படும்.
மேலும் ரூ.100,000 அபராதம் விதித்தது. 100,000, அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் சந்தேக நபருக்கு மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி குறிப்பிட்டார்.
பொலன்னறுவை நிஸ்ஸங்கமல்லபுர பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர், 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தனது மகளை பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அரச துறையின் ஊழியர் தர அதிகாரிகளின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
புதிய சுற்றறிக்கையை வெளியிட்ட அமைச்சு, இதற்கு முன்னர் ஜூன் 2019 மற்றும் செப்டம்பர் 2022 இல் வெளியிடப்பட்ட இரண்டு சுற்றறிக்கைகள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இரண்டு சுற்றறிக்கைகளையும் மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்கள் சாதாரண மற்றும் பொருத்தமான உடையில் பணிக்கு வருவதற்கு சுற்றறிக்கைகள் அனுமதித்துள்ளன
தனது 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கி, குழந்தையைப் பெற்றெடுக்க ஏற்பாடு செய்த நபருக்கு 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, சந்தேகநபருக்கு மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் தலா 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, சிறைத்தண்டனையை ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை நிஸ்ஸங்கமல்லபுர பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர், 2015 முதல் தனது மகளை பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
21வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தமக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளதாகவும், தனது சில முக்கிய கடமைகளில் இருந்து விடுபட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாகவும், தனிப்பட்ட தீர்மானமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நாங்கள் ராஜபக்ஷ குடும்பத்திற்காக எழுக்கிறோம் என்பது எங்களிடம் உள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். மிகவும் உண்மை. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் மிகவும் ராஜபக்ஷவாதி. ஒரு குடும்பவாதி. அதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள முடிந்தது. இப்போது எனக்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் மட்டுமே தொடர்பு உள்ளது என பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
தேசிய பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் அரசியலுக்கு வரும் நம்பிக்கை உள்ளதா? என்ற கேள்விக்கு பசில் ராஜபக்ஷ பின்வருமாறு பதில் தெரிவித்திருந்தார்.
“உள்ளூராட்சி சபைகளில் மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படும் மொட்டு உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அதற்காக தீவிர அரசியல் செய்து வருகிறேன். கட்சியை ஆரம்பித்தவர்கள் அவர்கள். முதல் வெற்றியைக் கொடுத்தார்கள். அவர்களும் இங்கே எங்களுடன் இருந்தார்கள். எனவே அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். பதவி வகிக்க எனக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. இப்போது மீண்டும் வந்து நான் நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாக வேண்டும் என்பதற்காக உழைத்ததாக நான் குற்றம் சுமத்த முடியாது. என்னால் சட்டப்படி அதைச் செய்ய முடியாது."