web log free
March 24, 2023
kumar

kumar

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின், கொலன்னாவையில் உள்ள மொத்த களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக  முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் எரிபொருளைப் பெறுவதற்கு எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறிய அவர், இந்தியாவும் மிகவும் நம்பிக்கையான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பாதையில் தடுப்புகளை அமைத்த பாதுகாப்பு படையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிருணிகா பிரேமச்சந்திர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு தடுப்புகளை அமைக்க பொலிஸாருக்கு உரிமையில்லை எனவும் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் பல சுகாதார தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்போது சுகாதார நிபுணர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு ரூ. 1200 மற்றும் இந்த விகிதத்தில் உள்ள சிக்கல்களை நாங்கள் விவாதித்தோம். ஆனால் இதுவரை எந்த தீர்வும் எமக்கு கிடைக்கவில்லை

960 மணிநேரமே என் இலக்கு - முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்வேன்  என அமைச்சர் தம்மிக்க பெரேரா  தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறுகையில், 

"மக்கள் பட்டினியால் வாடினால், நாம் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. ஆக, சென்று எதையாவது செய் எனக்கூறியே - அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்.  

6 மாதங்களுக்குள் உங்களாலும் முடியாவிட்டால் - பதவி துறந்து வாருங்கள் என மனைவியும் அறிவுரை வழங்கியுள்ளார். அதேபோல 'தாத்தா கம் ஹோம்' (அப்பா வீட்டுக்கு வாங்க) - என பதாகை ஏந்தப்படும் என பிள்ளைகளும் அறிவித்துவிட்டனர்.   

அந்த வகையில் எனக்கான காலம் 6 மாதங்கள். அதாவது 960 மணித்தியாலங்களே எனக்கு வேலை செய்வதற்கான நேரம். அந்த காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்யாவிட்டால், 'தாத்தா கம் ஹோம்' எனக்கூறி பிள்ளைகள் எனது வீட்டுக்கு முன் வந்து விடுவார்கள். அப்போது எனக்கு வீடு செல்ல வேண்டிவரும்.   

என்னை போல் ஒருவருக்கு 6 மாதங்களுக்குள் மக்களுக்கு முன்னேற்றகரமான எதையாவது செய்ய முடியாவிட்டால், பதவி வகித்து என்ன பயன்? " 

இவ்வாறு இலங்கையில் உள்ள பிரபல கோடிஸ்வர வர்த்தகரும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரின் அனைத்து வீதிகளும் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன.
நேற்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததையடுத்து நாடு உத்தியோகபூர்வமற்ற முறையில் மூடப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் தனியார் வாகனங்கள் செல்வது குறைந்துள்ளதுடன், பொது போக்குவரத்து சேவைகள் முழுமையாக இயங்கவில்லை.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து 50%க்கும் குறைவாகவே குறைந்துள்ளது.

ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே நாட்டில் இயங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அடுத்த எரிபொருள் நாட்டிற்கு வரும் வரை இது தொடரும்.

எரிபொருள் தாங்கியை ஆர்டர் செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கு குறைந்த பட்சம் 08 நாட்கள் தேவைப்படுவதுடன் தற்போதைய உலக சூழ்நிலையில் அந்த வகையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது.

புகையிரத கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அக்குரஸ்ஸ, திப்பட்டுவ பிரதேசத்தில் வீடொன்றினுள் பூசாரி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் பலகாவல பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் (24) என்ற இளைஞர் ஆவார்.

சந்தேகநபர் நில்வல கங்கையில் வீசிச் சென்ற பூசாரியின் தலை மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகில் மோசமாகப் பழுதடைந்துள்ள இலங்கையின் நன்மதிப்பை மீட்டெடுக்காமல் எந்தவொரு நாட்டிலிருந்தும் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்யவுள்ளதாக நேற்று வெளியான செய்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச அரங்கில் இலங்கை தனது பிம்பத்தை மீட்டெடுக்கும் வரை உலகில் எங்கிருந்தும் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாது. ஊழலால் இமேஜ் கெட்டுவிட்டது என்று அவர் மேலும் கூறினார்