web log free
March 28, 2024
kumar

kumar

கடந்த வாரத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இந்த வாரத்தில் சில பின்னடைவுகளை சந்தித்துள்ளது.

இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கொள்வனவு விலை 320 ரூபாவாகவும் விற்பனை விலை 340 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

பொது மற்றும் தனியார் வங்கிகளில் இந்த விகிதங்களில் டாலர்கள் மாற்றப்படுகின்றன.

போயான தினத்தன்று பியர் குடித்த பிக்கு ஒருவர் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த பௌத்த பிக்குக்கு பியர் விற்பனைச் செய்த சம்பவம் தொடர்பில் கலால் திணைக்கள அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிவனொளிபாதமலைக்குள் செல்லும் நல்லத்தண்ணி நகரிலுள்ள சுற்றுலா சபையின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட சுற்று​லா ஹோட்டலிலேயே இவ்வாறு பிக்கு ஒருவருக்கு பியர் விற்பனைச் செய்யப்பட்டுள்ளது.  

சுற்றுலா ஹோட்டலுக்கு சுற்றுலா சபையின் ஊடாக வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரத்துக்கு முரணாக, அந்த ஹோட்டலின் உரிமையாளரால் கடந்த 6ஆம் திகதி போயா தினத்தன்று பிக்கு ஒருவருக்கு, அந்த ஹோட்டலிலேயே அமர்ந்திருந்து பியர் அருந்துவதற்கு அனுமதியளித்தமை தொடர்பில், பிரதேசவாசிகளால் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பியரை குடித்துக்கொண்டிருந்த பிக்கு, போதை தலைக்கேறியதும் அங்கிருந்த நபர்களை கடுமையான தூசனவார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளார். அத்துடன் நகரில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளார். இதுதொடர்பில் நல்லத்தண்ணி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த சுற்றுலா ஹோட்டலில் போயா தினத்தில் களவான முறையில் பியர் விற்பனைச் செய்யப்படுவதாகவும் பியரை கொள்வனவு செய்யும் நபர்கள் அந்த பியர் போத்தல்களை உடைத்து, ஷொப்பி பேக்கில் ஊற்றி, சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களாக வரும் இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பில் அறிவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாலோசித்து உரிய திகதி அறிவிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்

இதனிடையே, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அனைத்து அரச சொத்துக்களையும் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், அவற்றின் நிர்வாகம், மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு மாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தபால் சேவை தொடர்பில் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அரச கூட்டுத்தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கம் அல்லது அதன் கிளைகள் வழங்கும் சேவைகள் இன்றியமையாதவை என கருதி குறித்த வர்த்தமானி வெளியிடப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனூடாக இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும் அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்குமாறு அவர் இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ரூபாவின் பெறுமதி பலமடைந்துள்ளது என்று காண்பிக்கப்படுவது செயற்கையாக உருவாக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்துள்ளார்.

சில மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு செயற்படுவதில்லை என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும் விடைத்தாள் திருத்தும் பணி இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை மதிய உணவுத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்குடன் இன்று (13) மட்டக்குளி புனித ஜோன் மகா வித்தியாலயத்தின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சமூகம் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணைந்து பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து விடைத்தாள் திருத்தும் பணியை விரைவில் ஆரம்பிக்கும் என நம்புவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டொலரின் வீழ்ச்சியால் கடும் சரிவை சந்தித்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

கொழும்பு செட்டியார் வீதியில் இன்று 22 கெரட் தங்கம் ஒரு பவுன் விலை 160,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கடந்த வார இறுதியில் 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 134,000 ரூபாவாக இருந்தது.

கடந்த வாரம் 145,000 ஆக குறைந்திருந்த 24 காரட் தங்கம் ஒரு பவுன் இன்று 173,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. 

ஏப்ரலில் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றது.

மின்சார சபையின் உத்தேச மறுசீரமைப்பு வேலைத்திட்டம், கூட்டு உடன்படிக்கைகள், மின்சார கட்டண முறை மற்றும் அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள ட்வீட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் காற்று மாசுபாடு சற்று அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உணர்திறன் உடையவர்களின் உடல்நிலையைப் பாதிக்கக் கூடிய காலநிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முகமூடிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நிலைமையைத் தவிர்க்கலாம் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

அமெரிக்க காற்றின் தர சுட்டெண்ணின் படி, கொழும்பு நகரில் இந்த எண்ணிக்கை 149 %ஆக பதிவாகியுள்ளதுடன், கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், கொழும்பு நகரில் இருண்ட நிலை காணப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 83 % என்ற எண்ணிக்கை பதிவாகியுள்ள போதிலும், ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் 100%கும் அதிகமாகவும், புத்தளம் நகரில் 149% ஆகவும், காலி, கராப்பிட்டிய மற்றும் பொலன்னறுவை நகரங்களில் 143 % ஆகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றும் (12) மற்றும் முந்தினம் (11) வளி மாசடைதல் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் பதிவாகியுள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் நிலைமை குறையலாம் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் (சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு) பிரதிப் பணிப்பாளர் நாயகம் சஞ்சய் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த நிலைமையை சாதாரண அதிகரிப்பு என வர்ணிக்க முடியும் எனவும் இது அனேகமாக வேறு நாட்டிலிருந்து வந்த நிலையே தவிர இலங்கையில் உருவாகும் மாசடைந்த காற்றின் நிலை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டெல்லியில் மோசமான காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி த

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஒரு 150-200 மதிப்பை எட்டியதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் விமல் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்தபோது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக குருந்துவத்தை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அங்கு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகாததால், விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்துள்ளார்.