இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் பிரதான தலைப்பாக தற்போது கட்சித்தாவல் மாறியுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் அரசியல் செய்து பின்னர் பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சமர் அரசியல் நிகழ்ச்சியின் விவாதம் இறுதியில் கைகலப்பாக மாறியது.
எம்.வேலு குமார் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போற்கு கூட்டணியாக ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர்.
எனினும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலு குமார் தீர்மானித்தார்.
நியூஸ்ஃபெஸ்ட் சமர் நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற கட்சித்தாவல் தொடர்பிலான கருத்து மோதல் இறுதியில் கைகலப்பாக மாறியது.
திகாம்பரம் வேலு குமார பார் குமார் என்று கூற வேலு குமார் திகாம்பரத்தை குடு திகா என்று கூறினார். இதன் பின்னரே திகாம்பரம் எழுந்து வேலுகுமாரை தாக்கினார்.
மதிப்புமிக்க தேசிய வணிக விசேடத்துவ விருதுகள் (NBEA) 2024 இல் பொதுக் காப்புறுதி (General Insurance) பிரிவில் HNB பொதுக் காப்புறுதி (HNBGI) நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் NBEA விருது நிகழ்வானது, பெருநிறுவனங்களின் ஆளுகை, அவற்றின் செயற்றிறன் முகாமைத்துவம், சந்தை அணுகல், பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR), நிதி பெறுபேறுகள் உள்ளிட்ட
விடயங்களில் ஒப்பிட முடியாத சாதனைகளை வெளிப்படுத்தும் நிறுவனங்களைக் கௌரவித்து கொண்டாடுகிறது.
HNB பொதுக் காப்புறுதி, பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) சித்துமின ஜயசுந்தர இது தொடர்பில் தெரிவிக்கையில், "NBEA விருது நிகழ்வில் எமக்குக் கிடைத்த அங்கீகாரமானது, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட எமது அர்ப்பணிப்பை எடுத்துக் கூறுகின்றது. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும், சிறந்த காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதற்கான தொடர்ச்சியான முன்னேற்றத்தின் கலாசாரத்தை வளர்ப்பதற்கும் நாம் உறுதி
பூண்டுள்ளோம். எமது சமீபத்திய முதலீடுகள், நிர்வாகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும், தொழில்துறையின் முன்னணியில் எமது நிலையைத் தக்கவைப்பதிலும் நாம் கொண்டுள்ள கவனத்தை எடுத்துக் காட்டுகின்றது." என்றார்.
தனது 19ஆவது ஆண்டைக் கொண்டாடும் NBEA வழங்கியுள்ள இந்த அங்கீகாரமானது, HNBGI இன் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் சமூகப் பொருளாதார துறையில் அதன் முக்கிய பங்களிப்புகளை எடுத்துக் கூறுகின்றது. புத்தாக்கம், வாடிக்கையாளரை மையப்படுத்திய செயற்பாடுகள், செயற்பாட்டில் விசேடத்துவம் ஆகியவற்றினால் இயங்கும் காப்புறுதித் துறையில் HNBGI நிறுவனத்தின் முன்னணி நிலையை இந்த கௌரவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
சமீபத்திய வருடங்களில் HNBGI நிறுவனம், புத்தாக்கமான சேவை வழங்கல் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதில் முக்கியமான முன்னேற்றங்களை அடைந்துள்ளது. டிஜிட்டல் கொள்கை வெளியீடு, மேம்படுத்தப்பட்ட கட்டணத் தளங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி மூலம் செயற்படும் காப்புறுதி உரிமை கோரலுக்கான மதிப்பீடுகள் போன்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்த திட்டங்கள் யாவும், நெறிப்படுத்தப்பட்ட செயன்முறைகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களை உறுதி செய்து, போட்டிமிக்க காப்புறுதிச் சந்தையில் HNBGI நிறுவனத்தை தனித்துவமாக
எடுத்துக் காட்டுகிறது.
Azentio Software நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட Project Phoenix எனும் தனித்துவமான திட்டமானது, டிஜிட்டல் மாற்றத்திற்கான HNBGI இன் அர்ப்பணிப்பை
எடுத்துக்காட்டுகிறது. இந்த மாற்றத்தை வெளிப்படுத்தும் திட்டமானது, துல்லியம் மற்றும் செயற்பாட்டு செயல்திறனை மேம்படுத்தப்படுத்தும் அதிநவீன Core Insurance System கட்டமைப்பை செயற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி, புதிய Claimee Health திட்டத்தின் அறிமுகமானது, மருத்துவ காப்புறுதி உரிமைகோரலுக்கான முகாமைத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்துகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையற்ற மற்றும் திறனான காப்புறுதி உரிமைகோரல் செயற்பாட்டு அனுபவத்தை வழங்குகிறது. வாடிக்கையாளர் அழைப்பு மையம் மற்றும் காப்புறுதி உரிமைகோரல் செயலாக்க சேவைகள் போன்ற முக்கிய செயற்பாட்டு நிலையங்கள் தொடர்பான இறுக்கமான கருத்துக் கணிப்புகளை முன்னெடுத்து, வாடிக்கையாளர் திருப்தி தொடர்பில் வலுவான முக்கியத்துவத்தை HNBGI
வழங்குகிறது. இந்த முயற்சிகள் வாடிக்கையாளர் கேள்விகளுக்கு உடனடியான மற்றும் பயனுள்ள தீர்வை வழங்குவதோடு மாத்திரமன்றி, HNBGI இன் நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட நற்பெயரை வலுப்படுத்துகிறது.
HNB General Insurance பற்றி:
HNB பொதுக் காப்புறுதியானது, இலங்கை முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வாகனம் முதல் வாகனம் அல்லாத மற்றும் தக்காபுல் தீர்வுகள் வரை பல்வேறு வகையான காப்புறுதித் தேவைகளை பூர்த்தி செய்கின்ற அர்ப்பணிப்புள்ள பங்காளியாகும். HNB Assurance PLC இன் துணை நிறுவனமமும், HNB குழுமத்தின் ஒரு அங்கத்தவருமான HNB General Insurance ஆனது, பரந்த அளவிலான கிளை வலையமைப்பின் மூலம் செயற்படுவதன்
மூலம், நாடு முழுவதும் விரிவான சேவை வழங்கலை உறுதி செய்கிறது. Fitch Ratings Lanka Limited இன் ‘A- (lka)’ இன் காப்புறுதி நிதி வலிமை மதிப்பீட்டின் மூலம், புத்தாக்கம், சிறந்த உபசரிப்புடன், பங்குதாரர்களுக்கு நிலைபேறான மதிப்பை உருவாக்க HNB General Insurance உறுதி பூண்டுள்ளது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அல்லது Pafferal அமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பங்கேற்புடன் நேருக்கு நேர் விவாதமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி விவாதத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
6 பிரதான வேட்பாளர்கள் விவாதத்தில் பங்கேற்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷ, சர்வ ஜன பௌலவின் திலித் ஜயவீர மற்றும் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடும் அரிேந்திரன் ஆகியோர் இந்த விவாதத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 07 பிரதான இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் கிட்டத்தட்ட 200 சமூக ஊடக பக்கங்களில் இந்த விவாதம் நேரடியாக ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக Paffaral அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலம் கருதி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபையில் தம்மை ஆதரிக்க எடுத்த முடிவுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானை தொலைபேசியில் அழைத்து இ.தொ.காவிற்கு நன்றி தெரிவித்தார்.
கொட்டகலையில் இன்று இ.தொ.காவின் தேசிய சபை கூடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்தது. இந்நிலையில் இ.தொ.காவின் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைக்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மாகாணங்களில் அவ்வப்போது காற்று வீசுகிறது. 30-40 வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வேட்பாளர்கள் முன்வைத்த சட்டவிரோத கட்அவுட் சுவரொட்டிகள் உள்ளிட்ட சகல அலங்காரங்களையும் அகற்றும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்அவுட்கள், சுவரொட்டிகள் உள்ளிட்ட அனைத்து அலங்காரங்களையும் அகற்றும் பணியில் 1,500க்கும் மேற்பட்ட பொலிஸார் காவல் நிலைய அளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஒரு தலைமையக காவல் நிலையத்திற்கு நான்கு பணியாளர்களும், 1-1 காவல் நிலையத்திற்கு மூன்று பணியாளர்களும், மற்ற அனைத்து காவல் நிலையங்களுக்கு தலா இரண்டு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பணியமர்த்தப்படும் ஒரு பொலிஸுக்கு தினசரி உதவித்தொகையாக 1500 ரூபாய் வழங்கப்படும். மேலும் அவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுடன் சென்று காவல் துறையில் உள்ள சட்டவிரோத கட்அவுட்கள், பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் அலங்காரங்கள் அனைத்தையும் அகற்றுவார்கள்.
நாடளாவிய ரீதியில் இந்த விடயத்தை பக்கச்சார்பற்ற முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான தேர்தல்கள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட கூறுகிறார்.
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட உயரடுக்கு பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பில் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், மதிப்பீட்டின் பின்னர் கிடைக்கப்பெறும் அறிக்கையின் அடிப்படையில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் விசேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது. அந்த குழு பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளரால் நடத்தப்படுகிறது.
குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய, வேட்பாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்மூலம், அச்சுறுத்தலுக்கு உள்ளான வேட்பாளர்களின் வீடுகளுக்கும், அவர்கள் நடமாடும் போது அவர்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படும்.
அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களுக்கும் விசேட பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், ஏனைய கட்சிகள் தமது ஆதரவு நிலைப்பாட்டை அறித்துள்ளதையடுத்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடளுமன்ற உறுப்பினர், “கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் தேர்தலுக்கு அண்மித்த காலத்தில் தான் எமது நிலைப்பாட்டை அறிவித்தோம்.
இந்த தடவை அது ஒரு வித்தியாசமாக வரவேண்டும் என்ற எந்த தேவையும் கிடையாது. எல்லா வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கிறோம்.
அவர்களின் தேர்தல் அறிக்கையில் முழு நாட்டுக்கும் என்ன சொல்லியிருக்கிறார் என பார்த்து சரியான நேரத்தில் அறிவிப்போம் ” என மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிப்பதாக பொதுஜன பெரமுனவின், மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் "கருணாதாச கொடிதுவக்கு" அறிவித்தார்.
இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, இன்றும் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.