இந்த மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்து நாட்டின் இறையாண்மையைப் பறிக்கும் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போகிறார்.
ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. இந்தோ-இலங்கை ஒப்பந்தம், பத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுவதை தடுக்க இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும் தங்களின் சர்ச்சைகளை ஒதுக்கி வைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச இன்று (31) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் குழுவினருடன் சென்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
தற்போது பாராளுமன்றத்தில் உள்ள 92 உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதன் காரணமாக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த விஜேதாச ராஜபக்ஷவின் கீழிருந்த நீதித்துறை மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அமைச்சர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக புதிய அமைச்சர் எவரும் நியமிக்கப்படாத நிலையில், அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் கீழ் அதே பதவி வழங்கப்பட உள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு 2024 ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து தனியான வேட்பாளர் ஒருவரை முன்வைக்க தீர்மானித்துள்ளது.
இந்த யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர்கள் 11 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர்கள் 72 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து தனி வேட்பாளரை முன்வைக்க கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் யோசனை ஒன்றை முன்வைத்தார்.
இந்த யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் 61 உறுப்பினர்கள் ஆதரவும் 11 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எதிர்வரும் ஆகஸ்ட் 5 அல்லது 6ஆம் திகதி அறிவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தன்னுடைய நனோதொழிநுட்ப பயன்பாட்டிற்காக பெரிதும் கொண்டாடப்படும் முன்னணி அவுஸ்திரேலிய முடி சீர்ப்படுத்தல் சிகிச்சை நிலையமான, BKT நனோ புரோவானது, ஆடம்பரமான அறிமுக நிகழ்வுடன் இலங்கைச் சந்தையில் அதனது பிரம்மாண்ட வருகையை மேற்கொண்டுள்ளது. அழகுக்கலைத் துறை மற்றும் ஏனைய முக்கியமான புகழ்பெற்ற ஆளுமைகளது வருகையை ஈர்த்திருந்த ஒன்றுகூடலானது தகவல்களினதும் பொழுதுபோக்கு அம்சங்களினதும் கலவையாக காணப்பட்டது.
BKT நனோ புரோவானது அதனது பயனாளர் சினேக தன்மையிற்காகவும் அதிகூடிய வினைத்திறனுடனான செயலூக்கமான உள்ளடக்கங்களை வழங்கும், மயிர்கால்களில் ஆழமாக ஊடுருவும் நனோ கூறுகளது உள்ளடக்கத்திற்காகம் தனிச்சிறப்பானதாக விளங்குகின்றது. இப்புத்தாக்கமான தயாரிப்பானது பளபளப்பினை மேம்படுத்தவும் சேதங்களை சரிசெய்தும் நேர்த்தியான தோற்றத்தை அடைவதற்கும் சுருள் தன்மையினைக் குறைக்கவும் பல்வேறு முடி கரிசனங்களை நிவர்த்திக்க வடிவமைக்கப்பட்ட தனித்தன்மையான சூத்திரங்களை வழங்குகின்றது.
“பிரேசிலியன் கெரடின் டிரீட்மெண்ட், அல்லது BKT, என்பது பிரேசிலிய அழகுக்கலைத் துறையில் நன்கறியப்பட்ட நிபுணர்களால் ஈர்க்கப்பட்ட அவுஸ்திரேலிய முடி சீர்ப்படுத்தல் சிகிச்சை முறையொன்றாகும். முடி மாற்றத்தில் இலகுத்தன்மையும் வினைத்திறனுமான புதியதொரு மட்டத்தினை இலங்கை பெண்களிற்கு வழங்க, BKT நனோ புரோவினை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் உற்சாகமாக காணப்படுகின்றோம். எமது வெளியீட்டில் பங்குபெற்றவர்களின், குறிப்பாக சலூன் தொழில்வாண்மையாளர்களின் நேர்கணிய பின்னூட்டங்கள், வெற்றியின் கட்டியங்கூறும் அறிகுறியாகும்” என்றார் BKT ஸ்ரீ லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளர், இஷா குலதுங்க அவர்கள்.
BKT நனோ புரோவானது ஈரத்தன்மை, கடுங்குளிர், அல்லது வெப்பம் போன்ற கடுமையான காலநிலைகளிற்கு எதிராக முடி எதிர்ப்புத்தன்மையை அதன் வினைத்திறன் உருவாக்குவதனால், இலங்கை பெண்களிற்கு விசேடமாக பொருந்தக்கூடியதாகும். உற்பத்தியின் செறிவுகளானவை ஆரோக்கியத்தினையும் பளபளப்புத் தரங்களை ஊக்குவித்து முடிக்கு புத்திளமையையும் புத்துயிர்ப்பையும் வழங்குகின்றது.
இதன் சூத்திரமானது இயற்கை அமிலங்கள், சுருள்களை சீர்ப்படுத்தி அப்புறப்படுத்தும் அதேவேளை சேதமடைந்த முடிகளை மீட்டெடுக்க இணைந்து தொழிற்புரியும் ஒமேகா 3 மற்றும் பட்டுநூற்பிசின் அடங்கிய போஷாக்குமிகு ஆளிவிதை எண்ணெய் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. இது எட்டு மாதங்கள் வரையில் நீடிக்கக்கூடிய மென்மையானதும் பளபளப்பானதுமான முடிகளை உருவாக்குகின்றது. பாரம்பரிய கெரட்டின் சிகிச்சைகள் போலவன்றி, BKT நனோ புரோவின் வாசனையற்ற சூத்திரமானது போர்மல்டிஹைட், கார்போசிஸ்டெய்ன், குவானிடைன் மற்றும் ஹைட்ரோகசைட் போன்ற தீங்குமிகு இரசாயனங்கள் அற்றவொன்றாகும்.
இஷா குலதுங்க அவர்கள், “முடி சீர்ப்படுத்தல், சுருள் குறைப்போ அல்லது முடி சுருக்கநீக்கமோ எதுவாயினும் வாடிக்கையாளரின் விசேடமான தேவைகளிற்கு வடிவமைக்கப்படக்கூடியதான பன்முகப்பட்ட தயாரிப்பாக சலூன் அனுபவங்களை எளிமைப்படுத்தும் BKT நனோ புரோவானது சலூன் உரிமையாளர்களிற்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
இதனது முடி சிகிச்சை சூத்திரங்களிற்கு அப்பால், BKT ஆனது சுற்றுச்சூழல் நிலைபேண்தன்மையிலும் அர்ப்பணிப்புமிக்கதாக காணப்படுகின்றது. கழிவுகளை குறைக்கவும் அதனது சுற்றுச்சூழல் தாக்கங்களை இழிவளவாக்கவும் சூழல்நேய பொதியிடல் நடைமுறைகளை இவ்வுற்பத்தியானது கைக்கொண்டுள்ளது. முழுமையான முடி பராமரிப்பிற்கான BKT, இன் அர்ப்பணிப்பானது தனிநபர்களினதும் புவியினதும் நல்வாழ்வினை உள்ளடக்கியுள்ளது. நிலைப்பேண் பொதியிடல் ஊடாக, பசுமை மற்றும் சுற்றுசு;சுழல் நய எதிர்காலத்திற்கும் பங்களிக்க BKT நோக்கம்கொண்டுள்ளது.
BKT நனோ புரோவானது இதனது நன்மைகளை அனுபவிக்க ஆர்வங்கொண்டுள்ளவர்களது இலகுவான அணுகலை உறுதிப்படுத்தும் முகமாக, இலங்கை முழுவதுமான முன்னணி சலூன்களில் வெகுவிரைவில் கிடைக்கக்கூடியதாகவிருக்கும். ஆர்வமுடைய தனிநபர்கள் ூ61 433 523 283 எனும் வாட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (28) மாலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இது இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டுள்ளதுடன், அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் வெளியிடப்படவில்லை.
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் எட்டாயிரம் ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
புதிய மாணவர்களுக்கான உதவித்தொகையை செப்டெம்பர் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட பயிற்சி பெற்று தற்போது இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லை என நீண்ட காலமாக கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டு வந்த முறைப்பாடு அடிப்படையில் இந்த வருட ஆரம்பத்தில் கொடுப்பனவை மூவாயிரம் ரூபாவினால் அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அமைச்சரவையில் பிரேரணையை சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றிருந்த போதிலும், அமைச்சின் போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் இது வரை அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கிடைக்கும் பணத்தை நிர்வகித்து கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது ஒரு மாணவருக்கு ஒரு நாள் உணவுக்கு நூற்று அறுபது ரூபாய் கிடைப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தடையாக இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான பணிகள் இருப்பின், தேர்தலுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு செய்துகொள்ள முடியும் எனவும், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் எவ்வித தடைகளும் இல்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிடுகின்றார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்று காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிகவும் கடினமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்ததாகவும், அப்போது இருந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தன்னால் முடிந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.