web log free
September 20, 2024
kumar

kumar

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கட்சி யாப்பிற்கமையவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்கவிடம் வினவிய போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர், சட்டத்தரணியூடாக தமது ஆட்சேபனையை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

நாளை(18) இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பிலும் அதற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனை தொடர்பிலும் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.

மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெரும நேற்று (16) காலமானார்.

இறக்கும் போது 64 வயதான தெவரப்பெருவின் மரணத்திற்கு மின்சாரம் தாக்கியதே காரணம் என மருமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

1960 ஆம் ஆண்டு பிறந்த பாலித குமார தெவரப்பெரும இலங்கை அரசியலில் பேசப்பட்ட ஒரு புரட்சிகர பாத்திரம் ஆவார். 

முப்பது வருடங்களுக்கும் மேலாக உயிருக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த நிலையில் தமது உயிரைப் பாதுகாத்து வந்த 5 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்துப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அப்புறப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து உயிருக்கு மேலும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டமை வருத்தமளிப்பதாக மட்டக்களப்பு மங்கலாராமய அம்பிட்டியே சுமண தேரர் தெரிவித்துள்ளார். 

பெப்ரவரி 23, 2023 அன்று, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இருந்து தப்பினேன். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது,  பாதுகாத்த அனைத்து பாதுகாப்புப் பணியாளர்களையும் அகற்றிய பின்னர் எனது உயிருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், பின்னர் அனைத்து உயர் அதிகாரிகளும் அந்த நபர்களை நீக்கிய பாதுகாப்புப் படையினரே பொறுப்பேற்க வேண்டும் என சுமண தேரர் தெரிவித்துள்ளார்.

முப்பது வருட கொடூர யுத்தத்தின் போது எல்.ரீ.ரீ.ஈ. கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதிகளுடன் மோதுண்டு சிங்கள மக்களின் உயிரைக் காப்பாற்றிய தம்மைப் பாதுகாத்து வந்த சிவில் பாதுகாப்புப் படையினர் திடீரென அகற்றியமை தனது வாழ்வில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அம்பிட்டிய சுமண தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் காணிப்பிரச்சினைக்கு தாம் தலைமைப் பொறுப்பை ஏற்றது முதல் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களாலும், அரசியல் சதிகாரர்களாலும் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், பொலிஸில் எத்தனை முறைப்பாடுகள் செய்தாலும் பொருட்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வேளையில் தம்மைப் பாதுகாத்து வந்த உத்தியோகத்தர்களை நீக்குவது வேதனையான விடயம் எனவும், இது தொடர்பில் கவனம் செலுத்தி மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அம்பிட்டிய சுமண தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் காலமாகியுள்ளார்.

அவரது வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வழங்கப்பட்ட வரியில்லா அனுமதிப்பத்திரத்தை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வழங்க முடியாவிட்டால், குறைந்த விலையில் வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு சபாநாயகர் மற்றும் அரச அதிகாரிகளிடம் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது.

இப்பிரச்னையை விரைவில் பாராளுமன்ற சபை குழுவில் பேச, எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் தேர்தல்களின் போது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாகனங்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ள பாரிய சவாலை இரு அரசியல் பிரிவைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத் தலைவர்களிடம் எடுத்துரைத்துள்ளனர்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பலரிடம் வாகனங்கள் எதுவும் இல்லை என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த காலங்களில், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு, அவர்கள் கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனத்தை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், நாட்டின் பொருளாதார நிலைமைகள் காரணமாக, இந்த உரிமங்கள் வழங்குவது ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

கடைசியாக 2015 இல் வழங்கப்பட்டது. வரியில்லா வாகன உரிமம் கோரி எம்.பி.க்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதிலும், அரசாங்கம் முடிவெடுக்கவில்லை.

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பிடித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் பயணித்த கார் பண்டாரவளை ஹல்பே பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் அமைச்சருக்கோ, ஓட்டுனருக்கோ காயம் ஏற்படவில்லை.

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்ணே கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

கடந்த 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் நெடுஞ்சாலைகள் மூலம் பதினைந்து கோடியே தொண்ணூற்றெட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்புப் பிரிவின் பணிப்பாளர் ரி.ஐ.டி.கஹடபிட்டிய தெரிவித்தார்.

13ஆம் திகதி சனிக்கிழமையன்று நெடுஞ்சாலைகளின் வருவாய் இரண்டு கோடியே நாற்பத்தாறு லட்சத்து எழுபத்தாறாயிரத்து நானூறு என்று கூறினார். 

அக்காலப்பகுதியில் நெடுஞ்சாலைகளில் நாற்பத்து மூன்று இலட்சத்து ஐந்தாயிரத்து ஐம்பத்தொரு வாகனங்கள் செலுத்தப்பட்டதாக கஹடபிட்டிய குறிப்பிட்டார்.

2024 சிங்கள தமிழ் புத்தாண்டு 13ம் திகதி இரவு 9.05 மணிக்கு சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியுடன் உதயமானது. 

அதே சமயம் புத்தாண்டு ராசி பலன் விருச்சிக ராசி என்றும் அதன் கிரக நிலை நன்றாக இல்லை என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

மே 09 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் அறியப்பட்ட ஒரு அறிஞர் அல்லது புத்திஜீவி அல்லது சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்லது அரசியல்வாதி பற்றிய அமங்கல  செய்திகளை நீங்கள் பெறலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் குழுவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.