வடக்கு கிழக்கில் உள்ள பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்வைக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தென்னிலங்கையில் உள்ள பிரதான போட்டியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று அறிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமானதாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அபிவிருத்தி முன்னேற்றம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியிருந்தார்.
அத்துடன், பெருந்தோட்ட சம்பளப் பிரச்சினைக்கு விரைவான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் வரை அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாக இடைக்கால நிவாரணத்தை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு விசேட நடைமுறையொன்று தேவை எனவும், பொலிஸ் மா அதிபர் தொடர்பான நிலைமையை ஜனாதிபதியால் தீர்க்க முடியாது எனவும், தேவைப்பட்டால் நீதிமன்றில் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சபாநாயகரும் அரசியலமைப்பு பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.
அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உள்ளிட்ட தகவல்களை அறிவித்து நாளைய தினம் அதிவிசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி தேர்தல் திகதி, வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவுள்ள காலப்பகுதி உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு இந்த விசேட வர்த்தமானி நாளையதினம் (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தாம் களமிறங்கவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ இன்று(25) அறிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே நீதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவில் தனது முடிவைப் பகிரங்கப்படுத்தினார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.
76 ஆண்டுகளாக எங்களை திவாலான நிலைக்குத் தள்ளும் ஒரு பயனற்ற அரசியல் குழுவால் நாங்கள் வழிநடத்தப்பட்டுள்ளோம்.
இலங்கை வளர வேண்டுமானால் ஊழலை ஒழிக்க வேண்டும்.
வருமானத்தை பெருக்க நமது இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக இது எனது உத்தியோகபூர்வ அறிவிப்பு.
இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதில் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு ஒவ்வொரு இலங்கையரையும் நான் அழைக்கிறேன்.
தேசபந்து தென்னகோன் தொடர்பில் நேற்று (24ஆம் திகதி) காலை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் பொலிஸ் மா அதிபர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளது.
அதன்படி, அந்த பதவிக்கு உடனடியாக ஒருவரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய, சஞ்சீவ தர்மரத்ன, சஜீவ மெதவத்த, தமிந்த ஸ்ரீ ராஜித, கித்சிறி ஜயலத், ரன்மல் கொடித்துவக்கு மற்றும் அஜித் ரோஹன ஆகியோர் பொலிஸ் திணைக்களத்தில் இதற்கு தகுதியான நபர்கள் பட்டியலில் உள்ளனர்.
மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சாலை மறியலால் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளது.
அந்த மாவட்டங்களில் வெள்ளம், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சாலைத் தடைகள் காரணமாக அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து பணியிடத்திற்குச் செல்லும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் துண்டிக்கப்பட்டதால் பணிக்கு சமூகமளிக்க முடியாத அலுவலர்கள் தொடர்புடைய பேரழிவுகள் அல்லது இடப்பெயர்வு காரணமாக இந்த சிறப்பு விடுப்புக்கு உரிமை உண்டு.
இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அரச சேவை ஓய்வூதியர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் இது தொடர்பான யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சம்பள முரண்பாடு தீர்க்கப்படும் வரை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.