தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ராகம வைத்திய பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானதென கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் தாக்குதலுக்கு பொறுப்பை ஏற்று தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி விலக வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெனாண்டோவின் மகன் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதால் இராஜாங்க அமைச்சர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் சமீபத்தில் சிறந்த பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், ஆசியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை முதல் முறையாக முந்தியுள்ளார் கவுதம் அம்பானி என தெரிவித்துள்ளது.
கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 88.5 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியது. கிட்டதட்ட 12 பில்லியன் டாலர் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பானது இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.
முதலிடத்தில் நீடித்து வந்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டாலராகும்.
சமீப காலமாக அம்பானியை விட, அதானியின் சொத்து மதிப்பானது மிக வேகமாக அதிகரித்து வருகின்றது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மலையக தமிழ் மக்களின் அபிலாஷை ஆவண வரைபு மலையக விற்பன்னர்களின் பங்களிப்பில் . தயாரிக்கபட்டுள்ளதாகவும் , இன்று மாலை அது தொடர்பான மெய்நிகர் கலந்துரையாடல் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஆலோசனை சபை விற்பன்னர்-உறுப்பினர்கள் மத்தியில் நடைபெறும் எனவும் .
அடுத்த கட்டமாக, ஏனைய மலையக அரசியல், சிவில் தரப்புகளுடன் உரையாடப்பட்டு இறுதி செய்யப்படும். செய்யபட்டு இந்த மலையக அபிலாஷை ஆவண விண்ணப்பம், இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர், இலங்கை எதிர்க்கட்சி தலைவர் உட்பட அரசியல், சமூக தலைவர்கள், தமிழக முதல்வர், தமிழக கட்சிகள், பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச சமூக தரப்புகளிடம் கையளிக்க/சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் முகநூலில் தெரிவித்துள்ளார்
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை காலமானார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு விளையாட்டு நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூத்த பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இம்ரான் கான், “லதா மங்கேஷ்கரின் மறைவால் துணை கண்டம் உலகம் அறிந்த சிறந்த பாடகர்களில் ஒருவரை இழந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பலருக்கும் இவரது பாடல்களை கேட்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
அதேபோல் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச, “இசை என்பது உலகளாவிய மொழி என்ற வாக்கியத்திற்கு உயிர் கொடுத்து மக்களை பல ஆண்டுகள் எல்லை கடந்து மகிழ்வித்ததற்காக லதா மங்கேஷ்கருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்களுக்கும், லதா மங்கேஷ்கர் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, “லதா மங்கேஷ்கர் இசைக்கு அளித்த பங்களிப்பின் மூலம் இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் மனதில் எப்போதும் வாழ்வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
உங்கள் ராசிபலனில் சுற்றி வரும் கிரகங்களின் தொடரில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தொழில்முறை முடிவுகளை எடுக்க இது ஒரு சரியான தருணம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் உங்களுக்காக சிறிது கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நபர், குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி உங்களைக் குறைத்து மதிப்பிடுவதைப் பற்றி மிகவும் நுண்ணுணர்வு கொண்டவர். இருப்பினும், இன்று சந்திரன் மிகவும் செல்வாக்கு செலுத்துவதால், நீங்கள் உறுதியாக நின்று உங்களை நம்ப வேண்டும். இறுதியில் மற்றவர்களும் உங்களை நம்புவார்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
இது செயல்படுவதற்கும் வளர்ச்சிக்குமான நேரம். ஆனால், முரண்பாடாக, அது நீங்கள் சந்திக்கும் தாமதங்கள், ஏமாற்றங்கள், கட்டுப்பாடுகளுக்கு உங்களுடைய எதிர்வினையைப் பொறுத்து இருக்கும். கற்பனையான தடைகளால் உங்களுடைய அற்புதமான வாய்ப்புகளை மறைக்க விடாதீர்கள். ஒரு பெரிய சிக்கலைப் எதிர்பாருங்கள். நீங்கள் அது எவ்வளவு வேகமாக காணாமல் போகிறது என்பதையும் பார்ப்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
இன்று ஆதிக்கம் செலுத்தும் கிரக அம்சம் அடுத்த வாரத்திற்கான உங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது. ஒத்துழைப்பை முன்னிலைப்படுத்துவதே உங்களுக்கான ஆலோசனை. ஆனால், மற்றவர்கள் உங்கள் யோசனைகளையும் திட்டங்களையும் தலைகீழாகப் பின்பற்றுவதைவிட வலியுறுத்த வேண்டும். இப்படி பின்பற்றுவது அடிக்கடி நடக்கிறது. இதற்குத் தேவை உங்கள் மென்மையான, வற்புறுத்தும் வசீகரம்தான் முக்கியம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
உங்கள் ராசியில் தொழில்முறை தாக்கங்கள் வார இறுதியில் முடிவடையும் முன் சிறிது தீவிரமடைகின்றன. உங்களின் அக்கறை, இரக்க குணம் ஆகியவற்றால் சக ஊழியர்கள் ஈர்க்கப்படுவார்கள். மேலும், உணர்ச்சிவசப்படுவதும் சீராக குறையும். நீங்கள் உண்மையிலேயே அவர்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதைக் கண்டு மற்றவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
இன்று சந்திரன், முதலில் உங்கள் ராசிக்கட்டத்தில் ஆழ்ந்த சாதகமான நிலையில் இருக்கிறது. மேலும், உங்கள் உணர்ச்சிகளை உறுதிப்படுத்தவும், உங்களை திருப்தியான மனநிலையில் வைத்திருக்கவும் உதவும். நீங்கள் ஒரு சிறிய இடைவெளியை எடுக்கவில்லை என்றால், இப்போதே செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே, திட்டமிட்டிருந்தால் விவரமாக செயல்படுவதற்கான நேரம் இது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
கடந்த காலத்தில் உங்கள் முயற்சிகளும் தியாகங்களும் எல்லாமே வீண் என்று நீங்கள் கற்பனை செய்யலாம். இருப்பினும், தவறான காரணங்களுக்காக இருந்தாலும், சில நாட்களுக்குள் நீங்கள் சரியானதைச் செய்தீர்கள் என்பதை பார்ப்பீர்கள். குறைந்த பட்சம் அடுத்தமுறை அதே பிரச்சனையை எப்படி சமாளிக்கலாம் என்பதை அறிந்து கொள்வதில் ஓரளவு திருப்தி இருக்கும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
இந்த நேரத்தில் நீங்கள் உண்மையில் மிகவும் பிரகாசமாக இருக்கிறீர்கள். உங்களைவிட புத்திசாலிகள் என்று கற்பனை செய்யும் நபர்களால் கடந்த காலத்தில் நீங்கள் எப்படி தாழ்த்தப்பட்டிருந்தாலும், இப்போது நீங்கள் உங்கள் யோசனைகளை முன்வைத்து ஊக்குவிக்க வேண்டும். நீங்கள் முதலில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வேறு யாரும் செய்ய மாட்டார்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
இன்று புதனின் ராசி மண்டல உறவுகள் நீங்கள் மிகவும் விரும்பக்கூடியது, அசாதாரணமானது, தூண்டிவிடுவது, சாகசமானது அதே நேரத்தில் சுதந்திரமானது. நீங்கள் கற்பனை செய்த ஒரு திட்டம் அல்லது புராஜெக்ட் நிச்சயமாக வெற்றி பெறும், எனவே முழுமையாக பரிசீலனை செய்வது பயனளிக்கும். எல்லாமே பிடித்துப் போகிறது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
பல மகர ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி புகார் செய்கிறார்கள். உங்கள் எல்லா பிரச்சனைகளும் உங்கள் மனப்பான்மையை மாற்றுவதன் மூலம் தீர்க்கப்படலாம். ஒரு அளவிற்கு, உங்கள் யோசனைகள் இப்போது காலாவதியானவையாக உள்ளன. அவை காலம் தாழ்ந்து உள்ளன. அவை இறுதியில் விரைவாக நிகழ்காலத்துக்கு திரும்பும். ஆனால், இன்னும் திரும்பவில்லை.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
உங்களிடம் தவறான புரிதல்கள், தவறுகள் அல்லது தவறுகளுக்கான உண்மையான வாய்ப்புகள் எதுவும் தெரியவில்லை. மாறாக, உங்கள் ராசி ஒரு பிரகாசமான வாய்ப்பைப் பெறுகிறது. இது சிறந்த குடும்பம் மற்றும் தனிப்பட்ட உறவுகளை அதிகம் பயன்படுத்த உதவுகிறது. உங்களுக்கு தொழில்முறை நன்மைகள் கூட இருக்கலாம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
தற்போதைய சந்திரனின் அமைப்பு மீன ராசியினருக்கு ஆதரவாக உள்ளது. ஏனெனில், இது உங்கள் பரவலான உணர்ச்சிகளை உறுதிப்படுத்த உதவுகிறது. இருப்பினும், நீங்கள் விட்டுவிட விரும்பும் சில நடைமுறைப் பணிகளைக் கையாள்வது அல்லது விவாதிக்க வேண்டியதன் அவசியத்தையும் இது உங்களுக்கு நினைவூட்டும்!
நாட்டில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் தற்போது குடிநீர் போத்தல்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் போத்தல்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்கி கடந்த மாதம் 29ம் திகதி அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் விடுத்த பின் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் விலை அதிகரிப்பு செய்துள்ளன.
அதன்படி புதிய விலை வருமாறு,
500 மில்லி லீட்டர் குடிநீர் போத்தல் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 50 ரூபா
ஒரு லீட்டர் குடிநீர் போத்தல் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 70 ரூபா
ஒன்றரை லீட்டர் குடிநீர் போத்தல் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 90 ரூபா
5 லீட்டர் குடிநீர் போத்தல் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 200 ரூபா
7 லீட்டர் குடிநீர் போத்தல் 70 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 240 ரூபா
கடந்த வாரம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து 2 படகுகளில் கடலுக்கு சென்ற 21 மீனவர்கள் கச்சத் தீவு அருகே இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பீரீஸ் டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 16 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உரையின் ஊடாக அமைச்சர் தனது பதவி இராஜினாமா அறிவிப்பை வௌியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வௌியிட்டதால் கம்மன்பில விரக்தியுடன் வௌியேறியதாக அறியமுடிகிறது.
மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினை மற்றும் அதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கம்மன்பில கூறியுள்ளார்.
அடுத்த இரண்டு வருடங்களுக்கு தொழில் வழங்குவதற்கு வழியில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெலியத்த பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நிதி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் தமிழ்,சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 10 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று டெல்லியில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பேசப்பட்டது.
கடுமையான அந்நிய செலாவணி மற்றும் எரிசக்தி நெருக்கடியில் தத்தளித்து வரும் இலங்கைக்கு, இந்தியா 500 மில்லியன் டொலர் கடன் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2ம் திகதி கையெழுத்திட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பீரிஸை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பீரிஸின் சுற்றுப்பயணத்தின்போது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.