இந்த புனித உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நபரிடமும் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். இந்த பிரபஞ்சத்தில் காதலை ஒரு முறையாவது அனுபவிக்காத உயிரினமே இருக்காது.
உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த காதலர்களும் காத்திருக்கும் ஒரு நாள் இந்த காதலர் தினம். காதலர் தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி மட்டும் அவர்களுக்கு கொண்டாட்டம் இல்லை அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது.
பிப்ரவரி 7 - ரோஜாக்கள் தினம் : Rose Day
அழகாகப் பூத்திருக்கம் ரோஜாப் பூக்களை விட உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வேறு பரிசுப் பொருள் இருக்கவே முடியாது என்கிறார்கள் காதலில் திளைத்தவர்கள். எனவே, காதலர் தினத்தை பிரம்மாண்டமாகக் கொண்டாட நினைக்கும் காதலர்கள், பிப்ரவரி 7ம் தேதி தனது இணையருக்கு இந்த நாளில் ரோஜா மலரைப் பரிசளிக்கிறார்கள்.
பிப்ரவரி 8 - காதலைச் சொல்லும் தினம் : Propose Day
காதலைச் சொன்னவர்களும் சரி, சொல்லாதவர்களும் சரி இன்று உங்கள் இணையரிடம் நீங்கள் கொண்ட காதலை மிக அழகாக வெளிப்படுத்தலாம்.
பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்: Choclate day
உங்கள் உறவில் ஒரு இனிமையை ஏற்படுத்தும் வகையில், இணையருக்கு சாக்லேட்டை பரிசளிக்கும் தினம் இது. இப்போதுதான் இதய வடிவில் சாக்லேட் பாக்ஸ் முதல் இதய வடிவ சாக்லேட்டுகளும் விற்பனைக்கு வருகின்றனவே.
பிப்ரவரி 10 - டெட்டி டே :teddy Day
பெண்களுக்குப் பிடித்த பொம்மையாக கரடி பொம்மைகள் (டெட்டி பியர்) விளங்குகின்றன. அவற்றை பரிசளித்து மகிழலாம்.
பிப்ரவரி 11 - Promise Day வாக்குறுதி தினம் : இருவரும் காதலில் இணைந்து இணை பிரியாமல் வாழ்வோம் என்று வாக்குறுதி அளிக்கும் தினமாக இது அமைந்துள்ளது.
பிப்ரவரி 12 - முத்த தினம் : kiss Day
காதலின் அழகிய உணர்வை மிக மென்மையாக வெளிப்படுத்தும் வகையில் இந்த தினத்தை காதலர்கள் முத்தமிட்டு வெளிப்படுத்துகிறார்கள்.
பிப்ரவரி 13 - அணைத்தல் தினம் : Hug Day
தங்களுக்குள் இருக்கும் எந்த வலியையும் எந்தக் கவலையையும் மறக்கச் செய்யும் ஆற்றல் அணைத்தலுக்கு உள்ளது. அதைத்தானே வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலும் கட்டிப்பிடி வைத்தியம் என்று சொல்லியிருக்கிறார். அதைக் கொண்டாடும் தினம் தான் இது.
பிப்ரவரி 14 - காதலர் தினம் : Valantiens Day
இன்றைய தினம் எல்லாவற்றுக்கும் மேலான காதலர் தினம். இதைத்தான் இன்று உலகமே மிக உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது. காதலிப்பவர்கள் மட்டுமல்ல, தம்பதியரும் கூட தற்போது காதலர் தினத்தை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார்கள்
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு காரணமாக எரிபொருள் விற்பனையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய நட்டம் ஏற்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கடந்த மாத கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பிடும் போது ஒரு லீற்றர் டீசல் 35 ரூபாவிற்கும் ஒரு லீற்றர் பெற்றோல் 07 ரூபாவிற்கும் நஷ்டம் அடைவதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் கூட்டுத்தாபனம் இன்னும் முடிவு செய்யவில்லை எனவும், இதனை முடிந்தவரை தாங்கிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் இசைக்குயில் என்று புகழப்பெற்ற பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.
இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர் 36 மொழிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
லதா மங்கேஷ்கர் தமிழில் பாடல்கள் பாடியுள்ளார். 1952-ம் ஆண்டு வெளியான இந்தி படமான ‘ஆன்’ தமிழில் ‘ஆன் முரட்டு அடியாள்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதில் லதாமங்கேஷ்கர் 4 பாடல்களை பாடி இருந்தார். 1955-ம் ஆண்டு இந்தி படமான ‘உரன் கடோலா’ தமிழில் ‘வன ரதம்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதில் ‘எந்தன் கண்ணாளன்’ என்ற பாடலை பாடி இருந்தார்.
அதன்பின் 1987-ம் ஆண்டு லதா மங்கேஷ்கர் நேரடியாக தமிழ் படத்தில் பாடல்கள் பாடினார். இளையராஜா இசையில் பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்தில் ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலை பாடினார். இந்த பாடல் பிரபலமானது. 1988-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ படத்தில் ‘வளையோசை....கலகலவென’ பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியனுடன் இணைந்து பாடினார். அதே ஆண்டு கார்த்திக் நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற பாடலை பாடகர் மனோவுடன் இணைந்து பாடி இருந்தார்.
தமிழில் லதா மங்கேஷ்கர் நேரடியாக பாடிய பாடல்களுக்கு இளையராஜா தான் இசை அமைத்துள்ளார். இந்தியில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பல்வேறு படங்களில் லதா மங்கேஷ்கர் பாடி உள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெற்றோல் 184 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன் ஒரு லீட்டர் டீசலின் விலையும் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 124 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான பரீட்சார்த்திகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தலை பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை கொவிட் சிகிச்சை மையங்களுடன் இணைந்து மாவட்ட அளவில் குறித்த பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தகைய விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்பட்ட சிறப்பு பரீட்சை மையங்களில் தங்கியிருந்து தேர்வு எழுத வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் நினைவாக இரண்டு நாட்கள் தேசிய துக்கம் தினம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. தேசியக் கொடி இரண்டு நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் மற்றும் பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஸ்கர் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது
நாடு முழுவதும் இருந்து அஞ்சலிகள் குவித்தவாறு உள்ளன . ட்வீட்டில் புகழ்பெற்ற பாடகியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். "நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறேன். அன்பான மற்றும் அக்கறையுள்ள லதா திதி நம்மை விட்டுப் பிரிந்தார். அவள் நம் நாட்டில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்கிறாள். வரும் தலைமுறையினர் அவரை இந்திய கலாசாரத்தின் தலைசிறந்த வீராங்கனையாக நினைவு கூர்வார்கள், அவரது மெல்லிசை குரல் மக்களை மயக்கும் இணையற்ற திறனைக் கொண்டிருந்தது,” அவர் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிடம் இருந்து 221 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முக்கியமாக பருப்பு மற்றும் பார்லி கொள்வனவு செய்ய கடனைப் பெறுவதாக கூறிய அவர், மீதமுள்ளவை மற்ற அத்தியாவசியப் பொருட்களுக்குப் பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.
எதிர்வரும் புத்தாண்டு காலம் உட்பட அடுத்த சில மாதங்களுக்கு இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்தியாவினால் ஒரு பில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தத் தொகை போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சீனாவிடம் இருந்து ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி கோரப்பட்டுள்ளதாகவும், அதற்கு சீனா இணங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். மத்திய மந்திரி நிதின் கட்காரி அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார். லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் லதா மங்கேஷ்கர் காலமானதாக தெரிவிக்கப்பட்டது. லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
எதிர்காலத்தில் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் பல கட்சிகளுடன் கலந்துரையாடி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிடும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், அரசாங்கத்தில் இருந்து விலக தாம் தயாரில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.