web log free
December 25, 2024
kumar

kumar

இன்று (27ம் திகதி) பல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து, 'ஒன்றுபடும் நாடு - மகிழ்ச்சி நிறைந்த தேசம்' என்ற தொனிப்பொருளில் 'சர்வ ஜன பௌல' என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளது.

அதற்காக மௌபிம ஜனதா கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, துடுகாம தேசிய உரையாடல் வட்டம், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தலைமையிலான சுயேட்சை உறுப்பினர் மன்றம் என்பன உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

அதன்படி, தொடர்புடைய அரசியல் இயக்கத்தை நிறுவுவதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை சரியான பாதையில் வழிநடத்தி அதற்கு மகுடம் சூடியவரே அமரர் ஆறுமுகன் தொண்டமான் என இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் விடுத்துள்ள சிரார்த்த தின செய்தியில் தெரிவித்துள்ளார். 

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 4ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு செந்தில் தொண்டமான் விடுத்துள்ள சிரார்த்த தின செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது, 

அமரர் ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களுக்கும் முழு மலையகத்துக்கும் பாதுகாப்பாக திகழ்ந்தவர். சமரசமின்றி மலையக மக்களிக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த மகத்தான தலைவர்.

சம்பள பேச்சுவார்த்தை முதல் மக்களின் உரிமைகளை வென்றுக்கொடுப்பதில் ஆளும் அரசாங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் கடுமையான அழுத்தங்களை கொடுத்ததுடன், அடிப்பணியாது செயல்பட்டார். 

அவரது இழப்பை எவராலும் ஈடுசெய்ய முடியாது. அமரர் ஆறுமுகன் தொண்டமான் காட்டிய வழியில் இ.தொ.கா தமது பயணத்தை தொடரும் என்றும் செந்தில் தொண்டமான் தமது சிரார்த்ததின செய்தியில் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் பல பிராந்திய அமைப்பாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து சமகி ஜன பலவேகயவில் இணைந்துகொண்டனர்.

சமகி ஜன பலவேகவினால் அமுல்படுத்தப்படும் மக்கள் சக்தி வேலைத்திட்டத்தின் பொலன்னறுவை மாவட்டக் கூட்டம் இடம்பெற்ற   போது அமைச்சராக இருந்த நந்தசேன ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சமகி ஜன பலவேகயவில் இணைந்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான திலக், இது தவிர, மக்கள் விடுதலை முன்னணியின் பொலன்னறுவை நகர சபையின் வேட்பாளராக இருந்த எச். சமந்த பண்டாரவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுஜன பெரமுன நடத்தும் முதலாவது தொகுதி மாநாடு நாளை பிற்பகல் அனுராதபுரம் தலாவையில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார். 

இந்நிகழ்வில் அனுராதபுரம் மாவட்ட தலைவர் முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, வடமத்திய முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், பொஹொட்டுவே தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர்.

இத்தொகுதி மாநாட்டின் பின்னர் பொஹொட்டுவவில் தேர்தல் பிரச்சார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் நாடளாவிய ரீதியில் தொகுதி மாநாடுகள் நடத்தப்படும் எனவும் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட மாநாடு, நாளை எட்டியாந்தோட்டை நகரில், ஸ்ரீ விநாயகர் ஆலயத்துக்கு எதிரே, கே.ஜி .எல். குணவர்த்தன மண்டபத்தில், கட்சி தலைவர், கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்.

கூட்டணியின் பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம் எம்பி, வே. இராதாகிருஷ்ணன் எம்பி, கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பிரமுகர்கள் கபீர் ஹசீம் எம்பி, சுஜித் சஞ்சய் பெரேரா எம்பி, ஜனநாயக மக்கள் முன்னணி பிரதி தலைவர் வேலு குமார் எம்பி  ஆகியோர் உட்பட கட்சி, கூட்டணி அரசியல் குழு உறுப்பினர்களும், விசேட அழைப்பாளர்கள், மாவட்ட கட்சி அங்கத்தவர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணீதரன் முருகேசு பொறுப்பெற்றுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக வலய, தோட்ட பிரிவு வலய, நகர வலய அமைப்பாளர்களின் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய முழு மாவட்டம் தழுவிய கட்டமைப்பு மாநாடாக இந்நிகழ்வு, “ஒன்றிணைந்து வெல்வோம்! தேசிய அரங்கில் இடம்பெறுவோம்!” என்ற தொனிபொருளில்  நடைபெறும் என  பரணீதரன் முருகேசு தெரிவித்துள்ளார்.      

எதிர்வரும் 15ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்ற கதை தமக்கு தெரியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் கருத்து தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் வினவியபோதே பசில் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கை தொடர்பில் உதயங்க வீரதுங்கவிடம் கேட்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் தனது கருத்தை கலந்துரையாடியதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

எச்.ஐ.வி வைரஸை பலவீனப்படுத்தும் புதிய தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்க விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசி உடலில் நுழையும் எச்.ஐ.வி வைரஸை குறிவைத்து பலவீனப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த தடுப்பூசி மூலம் உடலில் புதிய ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுவதுடன், புதிதாக உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகள் எச்ஐவி வைரஸை பலவீனப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தடுப்பூசி எய்ட்ஸ் நோயாளிகளிடம் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சோதனைகள் வெற்றிகரமான முடிவுகளை அளித்ததாக தொடர்புடைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

இன்று பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் செயற்படும் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (25ம் திகதி) அதிகாலை 5.30 மணிக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடல் அருகே புயலாக உருவாகலாம்.

இது இன்று இரவு 11.30 மணிக்கு மேலும் சூறாவளி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும், வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்யக்கூடும்.

எவ்வாறாயினும், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர திஸாநாயக்கவை முன்னிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதிக்கும் அநுர திஸாநாயக்கவுக்கும் இடையில் ஒரு சிறந்த உறவு கட்டியெழுப்பப்பட்டதாகவும், மே தினத்தை ஏற்பாடு செய்வதில் அரசாங்கத்தின் ஆதரவை நன்கு பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.

மே தினக் கூட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி அமைப்பு கோரிய இடத்தை அரசாங்கம் வழங்கியதாகவும், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி  முதலில் இடம் கோரிய போதும் அதனை வழங்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் மூலம் ஜனாதிபதி திஸாநாயக்கவுக்கு உதவுவதுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக பாகுபாடு காட்டுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர, எதிர்வரும் 6ஆம் திகதி முன்மொழியப்பட்ட விவாதத்திற்காக சஜித் பிரேமதாசவை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் அவர் அப்பாவி எனவும் தெரிவித்தார்.

அநுரகுமார திஸாநாயக்கவுடன் விவாதிக்க தான் விரும்புவதாகவும், சஜித் வராத விவாதத்தில் திலித் ஜயவீர பங்கேற்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அநுரகுமார திஸாநாயக்கவிடம் கடினமான கேள்விகள் எதுவும் கேட்கவில்லை என்றும், பாம்பு, தேன், ஆன்டிஜென் பற்றி எந்தக் கேள்வியும் அநுர நிபந்தனையின்றி கேட்கலாம் என்றும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd