web log free
September 20, 2024
kumar

kumar

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பயணித்த காரை தங்காலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று துரத்திச் சென்ற போது, சந்தேக நபர் காரை தும்மலசூரிய புறநகர் பகுதியிலுள்ள துந்தோட்ட பாலத்திற்கு அருகில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகநபர் இருந்த போது தங்கல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்ய முற்பட்ட போது காரில் இருந்து தப்பிச் சென்றதாகவும் பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க முடியாத நிலையில் காரை துந்தோட்டைக்கு அருகில் விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த கார் தற்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை ஏற்கனவே தும்மலசூரிய பொலிஸாரின் ஆதரவுடன் தங்காலை பொலிஸ் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகமாக அனுர பிரியதர்ஷன யாப்பாவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த நியமனம் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும், பின்னர் புதிய கூட்டணியின் ஒற்றுமையுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

நிமல் லான்சா மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுஜன ஐக்கிய பெரமுன அமைக்கப்படவுள்ளதுடன், அதன் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஐக்கிய முன்னணியின் அரசியலமைப்பின் பல சரத்துக்கள் திருத்தப்பட உள்ளன. 

கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளதையடுத்து, கொழும்பு மக்கள் 15 மணித்தியால நீர்வெட்டு அனுபவிக்க உள்ளனர்.

கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (11) காலை 8 மணியுடன் முடிவடையும் என NWSDB தெரிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் வழங்கல் முறைமை மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக நீர் வெட்டு அவசியமானது என நீர்வள சபை தெரிவித்துள்ளது.

நீர் வெட்டுக் காலத்தில் நீரைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு NWSDB அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நீர் வெட்டுக் காலத்திலும் அதற்குப் பின்னரும் தண்ணீரைச் சேமிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை NWS&DB கேட்டுக் கொண்டுள்ளது.

கட்சியின் தலைமையை விமர்சிக்கும் மற்றும் கட்சியின் கூட்டு முடிவுகளை மீறும் எந்தவொரு நபருக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சமகி ஜன பலவேக தீர்மானித்துள்ளது.

அவ்வாறு இல்லாவிட்டால் கட்சியின் ஒழுக்கம் சீர்குலைந்து விடும் என கட்சித் தலைமை கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போது முழு குழுவும் சபையை விட்டு வெளியேறும் தீர்மானத்தை எடுத்தபோது, அதை புறக்கணித்து ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தங்கினர்.

இவ்வாறு குழுவாக தீர்மானங்களை எடுக்கத் தவறும் எம்.பி.க்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கட்சியின் தலைமைத்துவம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை நேசிப்பதையும் ஜனாதிபதி அவர்களை நேசிப்பதையும் கண்டு பொறாமை இல்லை என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதியை சந்தித்து அனைத்து பேசும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களையும் வேலை செய்ய வைப்பதாக கூறியதாக தெரிவித்த தசநாயக்க அனைவரையும் பற்றி தனக்கு தெரியும் எனவும் தெரிவித்தார்.

ஆளும் கட்சியில் எவருக்கும் வழங்கப்படாத சலுகைகளை ஜனாதிபதியிடமிருந்து சமகி ஜன பலவேகவில் உள்ளவர்கள் இரகசியமாக பெற்று வருவதாகவும் சாமர சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உறுப்பினர்களை மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றி வருவதாகவும் தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளையும் இணைத்துக்கொண்டு களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றியை பதிவு செய்து, அரியணையேறியது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தையும் இழந்தது.

எனினும், 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்த வெற்றியின் பின்னரே இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையுடன் புதிய அரசமைப்பு இயற்றப்பட்டது. 

அதன்பின்னர் 1982 இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி நடைபோட்டது. 

சு.க. ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் ஐதேகவின் அரசியல் பலம் உள்ளிட்ட காரணிகளால் சுதந்திரக் கட்சியால் மீண்டெழ முடியுமா என அரசியல் ரீதியில் அச்சம் ஏற்பட்டது. 1988 இல் நடைபெற்ற 2 ஆவது ஜனாதிபதி தேர்தலிலும் கை சின்னத்தில் களமிறங்கிய சுதந்திரக்கட்சி பின்னடைவை சந்தித்தது.  

1977 இற்கு பின்னர் 1989 இலேயே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. (சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நாடாளுமன்ற ஆட்சிகாலத்தை மேலும் ஒரு தவணைக்கு நீடித்துக்கொள்வதற்கு ஜே.ஆர். ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.)

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் கூட்டணியாக கதிரை சின்னத்தில் களமிறங்கியது. ( அதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் கை சின்னத்திலேயே அக்கட்சி தனித்து - கூட்டணியாக களமிறங்கியது)

இத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது, ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டு, சுதந்திரக்கட்சி மீண்டும் தலைதூக்கியது.   

மக்கள் கூட்டணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கிய அதன் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 4 இலட்சத்து 64 ஆயிரத்து 58 விருப்பு வாக்குகளைப்பெற்று வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.

இலங்கையில் விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இது அமைந்திருந்தது. (2015 இல் இச்சாதனையை கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க முறியடித்தார்.)

அதே ஆண்டு அதாவது 1994 நவம்பர் 9 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் கதிரை சின்னத்திலேயே சுதந்திரக்கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வெற்றியும் பெற்றது. இலங்கையில் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியை உருவாக்கிய தேர்தல் அது.

அதன்பின்னர் 2000, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் கதிரை சின்னமே சுதந்திரக்கட்சிக்காக களத்துக்கு வந்தது. 

அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கதிரை சின்னம் களத்துக்கு வரவில்லை. மக்கள் கூட்டணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக உதயமானது. வெற்றிலை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.  

2004 இற்கு பின்னர் அனைத்து தேர்தல்களிலும் சுதந்திரக்கட்சி வெற்றிலை சின்னத்திலேயே கூட்டணி அமைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக களமிறங்கியது. 

2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது. இதனால் அக்கட்சியின் வெற்றிலை சின்னமும் மாயமானது. மொட்டு சின்னம் ஆதிக்கம் செலுத்தியது. 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதும் மொட்டு கூட்டணியில் சுதந்திரக்கட்சி களமிறங்கினாலும் சில மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டியிட்டது. 

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சுமார் 23 ஆண்டுகளுக்கு பின்னர் ‘கதிரை’ சின்னத்துக்கு புத்துயிர் கொடுத்து களமிறக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. மக்கள் கூட்டணி தற்போதும் சுதந்திரக்கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணியாக செயற்படுகின்றது.

முன்னணியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவும், செயலாளராக லசந்த அழகியவண்ணவும் செயற்படுகின்றனர். முன்னணியின் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. தலைமைத்துவ சபையொன்றை உருவாக்கி அச்சபையின் தலைமைப்பதவியை சந்திரிக்கா அம்மையாருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், இக்கூட்டணி தொடர்பில் சந்திரிக்கா அம்மையார் இன்னும் எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி - ஆர் சனத்)

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் சந்தேகத்திற்குரிய இடங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் சாமரி பிரியங்கா முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மரணம் தொடர்பில் பல குறிப்பிட்ட உண்மைகளை முன்வைத்து சுமார் ஐந்து பக்கங்கள் கொண்ட விபரங்களுடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா நேற்று (07) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு ஜீப், கன்டெய்னர் ட்ரக் வண்டியுடன் ஜனவரி (25) மோதியதில் இராஜாங்க அமைச்சரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் உயிரிழந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று காலை பாராளுமன்றத்தின் புதிய அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிம்மாசன உரையை கேட்பதில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஏனைய நாட்களில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டேன் என அவர் கூறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்படும் போது அவர்களை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வைப்பது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பொதுவான நடைமுறையாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளையும் தமது கட்சி கடுமையாக விமர்சிக்கும் வேளையில், ஜனாதிபதி இருக்கும் மேடையில் கயந்த கருணாதிலக்க ஏறுவது பாதகமானது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று குற்றம் சுமத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தலைமைத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் எப்போதும் கருத்து வெளியிடும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் நிகழ்ச்சி ஒன்றில் இணைவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ அழைப்பாக இருந்தாலும் இந்நேரத்தில் கலந்துகொண்டிருக்கக் கூடாது என்பதை வலியுறுத்த சீனியர்கள் குழுவினர் கேட்டுக் கொண்டதை அவர்கள் அறிந்திருக்கலாம்.

தம்புள்ளையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் கயந்த கருணாதிலக்கவும் இணைந்து கொண்டதாக சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது. 

சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

இந்த செய்தி தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.