web log free
September 20, 2024
kumar

kumar

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான முகாமைத்துவக் குழுவில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். எதிர்வரும் 13ஆம் திகதி காலியில் இருந்து தனது பிரச்சார வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்தி அதன் பின்னர் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று (09) இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பதவி விலகுவதாக அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தினால் தான் இந்த தீர்மானத்திற்கு வரவில்லை என்றும், சஜித் பிரேமதாசவுடன் தான் எப்போதும் இருப்பேன் என்றும், தமக்கு ஐக்கிய மக்கள் சக்தியை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி வலியுறுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அரசியலில் இருந்து விலகும் தீர்மானத்திற்கு அவரது தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் கட்சியின் உள்ளக அரசியல் தீர்மானங்கள் தாக்கம் செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் சமிந்த விஜேசிறி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (09) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

எதிர்வரும் 12ம் திகதி வரை சபை அமர்வு நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்ததையும் காணமுடிந்தது.

வட் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இவர்கள் வந்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சித் தாவிய எம்.பி.க்கள் எவரினதும் பாராளுமன்ற ஆசனங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என பாராளுமன்ற பிரதம படைக்களச்சேவிதர் நரேன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் அரசியல் ரீதியில் தீர்மானம் எடுத்திருப்பதால், உரிய குழுவுக்கு ஆசனங்களை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கூற வேண்டும் என்றும் அதன் பின்னரே சபாநாயகர் அது குறித்து அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

ஆனால், இதுவரை கட்சித் தாவியதாக கூறப்படும் எம்.பி.க்கள் எவரிடமிருந்தும் அத்தகைய கோரிக்கை வரவில்லை என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செங்கடல் ஊடாக இலங்கைக்கு வரும் சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கொழும்பு உள்ளிட்ட இலங்கை துறைமுகங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின் பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதற்காக இலங்கையில் இருந்து கப்பல்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

நேற்று (08) முற்பகல் அமைச்சர்கள் சிலரைச் சந்தித்தபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள் குழு இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

செங்கடலைப் பாதுகாக்க கப்பல்களை அனுப்புவது பற்றி சமூக வலைத்தளங்களில் பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன.

இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தலாட் தீவுகளுக்கு அருகில் உள்ள கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இதுவரை சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்தோனேசியாவில் கடந்த வாரமும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மருத்துவர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு மற்றும் இடையூறு கொடுப்பனவை (DAT) இரட்டிப்பாக்க ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 35,000 முதல் ரூ. 70,000.ரூபாவால் அதிகரிக்கவும் மேலும், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அவர்களின் ஆய்வு கொடுப்பனவில் 25% அதிகரிப்பு செய்யப்பட்டு, அவர்களின் ஜனவரி சம்பளத்தில் சேர்க்கப்படும் .

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

கடந்த வாரம் நெலும் மாவத்தை மொட்டுக் கட்சி காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடையே தகாத வார்த்தை மோதல் ஏற்பட்டு சண்டையில் இருந்து தப்பியது.

குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் எனவும் அவர்களில் ஒருவர் கட்சியின் உயர் பதவியில் இருப்பவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“கட்சிக்கு என்ன செய்தீர்கள்?” என்று ஒரு எம்.பி.யும், “நீ அதைச் செய்தாயா இல்லையா?” என்று மற்றொரு எம்.பியும் கேள்வி எழுப்பிக் கொண்டனர். 

அத்தோடு நிற்காத எம்.பி.க்கள் பலத்த வாய் வார்த்தை மோதலுக்கு மத்தியில் உரத்த குரலில் திட்டிக் கொண்டதாக அறியமுடிகின்றது.

அப்போது கட்சி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் குழு வந்து இரண்டு எம்.பி.க்களையும் பிரித்து மோதலை சமரசம் செய்தனர். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய செங்கடல் மற்றும் அதனை அண்மித்த பிராந்தியத்திற்கு இலங்கை கடற்படையின் கப்பல்களை அனுப்பிவைக்க தயார் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த கப்பல்கள் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் Prosperity Guardian நடவடிக்கையில் இணைக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

கப்பலை அனுப்பிவைக்க வேண்டிய திகதி தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

செங்கடலை அண்மித்த அரபுக்கடல், கல்ஃப் கடல் உள்ளிட்ட பிராந்தியம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் Prosperity Guardian நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு சமகி ஜன பலவேகவின் பலமான உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும், நெருக்கடியான நேரத்தில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வடமேற்கு மாகாணம், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அறியமுடிகிறது.

இதேவேளை, அண்மைய நாட்களில், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சமகி ஜன பலவேகயவில் இணைந்து கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக சமகி ஜன பலவேகய உறுப்பினர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய எம்.பி.க்கள் சேர்க்கையால் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் போட்டி வலுத்துள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.