அடுத்த ஆண்டு நாட்டின் சுகாதார அமைப்பில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான சரியான கொள்முதல் நடைமுறையை பின்பற்றாததன் காரணமாக இந்த நிலை ஏற்படக்கூடும் என அதன் செயலாளர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தி பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் செயலாற்றிவருவதாகத் தெரிவித்திருக்கும் அந்நாட்டு இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட், எதிர்வருங்காலத்தில் தடை விதிக்கப்படக்கூடிய பதவிகள் குறித்த யூகங்களை வெளியிடுவதானது, அத்தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துவிடும் என சுட்டிக்காட்டியிருக்கிறார்.
பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் வெற்றியை அடுத்து, புதிய பிரதமராகத் தெரிவான கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்துத்தெரிவித்து பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தது. அக்கடிதத்தில், ‘எதிர்வரும் செப்டெம்பர்மாத (நடைபெற்றுமுடிந்த) ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான முன்னைய தீர்மானம் மேலும் இருவருடங்களுக்கு நீடிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்திச்செல்வதற்கும் அவசியமான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.
அக்கடிதத்துக்குப் பதிலளித்து பிரிட்டனின் இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட் கடந்த 4 ஆம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவைக்கு பதில் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளடங்கலாக மனித உரிமைகளுடன் தொடர்புடைய பரந்துபட்ட கரிசனைகள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பிரிட்டன் தொடர்ச்சியாக இணைந்து செயற்பட்டுவருகிறது. செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிக்கையிலும் எமது கரிசனைகள் குறித்து தெளிவாக வெளிப்படுத்தியிருந்தோம்.
மேலும் தடைகளை விதிப்பது என்பது மிகமோசமான மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்கான ஏனைய பல இராஜதந்திர உத்திகளில் ஒன்றாகும். எதிர்வருங்காலத்தில் தடை விதிக்கப்படக்கூடிய பதவிகள் குறித்த யூகங்களை வெளியிடுவதானது, அத்தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கும் என்பதால், அவ்விபரங்களை வெளியிடுவது பொருத்தமானதாக அமையாது என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த நாட்களில் வாகன இறக்குமதி குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. கார் கனவு காணும் அனைவரும் எப்பொழுது கார் வாங்க முடியும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே தொடர்ந்து கவனம் செலுத்தும் உங்களுக்காகவே இந்த செய்தி.
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு அதிகாரியோ இதுவரையில் குறிப்பிட்ட திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேருந்துகள் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு டிசம்பர் இறுதி அல்லது எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என நம்பப்படுகிறது என அதன் தலைவர் பிரசாத் மானகே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உள்ளுராட்சி மன்ற தேர்தல் விரைவில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.
தற்போதுள்ள கட்டணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.
தற்போதுள்ள கட்டணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது பட்டப்படிப்பை முடித்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு செய்யத் தவறினால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என முகநூல் பதிவில் தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் பதிலளிக்கத் தவறினால், NPP நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் இன்று (06) வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு கடந்த 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைய, நேற்றைய தினமும் (05) இன்றையதினமும் (06) மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதம் நடைபெற்றது. இன்றைய தினம் விவாதம் முடிவடைந்ததும் குறித்த தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரம் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போதே கவனத்தில்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது தமிழரசுக் கட்சி எம்.பிக்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர்.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன் குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி சிறிநாத், துரைராசா ரவிகரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இது குறித்து சிறீதரன் எம்.பி. ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,
"இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போதே கவனத்தில்கொள்ள முடியும் என அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருட இறுதிக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எம்மிடம் உறுதியளித்தார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் அவர் எம்மிடம் எதுவும் கூறவில்லை.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நீதிமன்ற உத்தரவின்படி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
காணாமல்போனோர் விடயத்தில் தம்மால் உடனடியாக எதுவும் செய்ய இயலாது என்றும், படிப்படியாக அந்த விடயத்துக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என்பவற்றின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காணிகள் விடுவிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்." - என்றார்.