பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு அரசியல் அமைப்பு சபை எவ்வாறு அங்கீகாரம் வழங்கியது என்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெளிவாக தோற்கடிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கூறுவது சட்டவிரோதமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம் உன்னிப்பாக கவனம் செலுத்தும் என அக்கட்சியின் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இதேவேளை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நாளைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (04) அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்திற்குரிய அளவில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலாடிய இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்மலானை மற்றும் கல்கிஸ்ஸ புனித ரீட்டா பரா பிரதேசங்களில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த 02 விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்து நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த இடத்தை நிர்வகித்த இரு பெண்களும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 32, 34 மற்றும் 35 வயதுடைய பலுகஸ்வெவ, பிடபெத்தர, அத்தகிரிய மற்றும் இரத்மலானை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எரிபொருட்களின் விலைகள் இன்று (04) இரவு திருத்தப்படவுள்ளது.
பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், அது இன்று இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்று எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கடந்த ஜனவரி 31ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு, ஒக்டேன் 92 பெற்றோல், ஒக்டேன் 95 பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
உலகெங்கிலும் உள்ள 220 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, மேலும் 1990 முதல் 2022 வரை பருமனானவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
05 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் முன்பு பணக்கார நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் தற்போது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் இருந்தும் இது பதிவாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
வெளிக் களத்தில் கடமையாற்றும் குழுக்கள் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டுமென சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதார திணைக்களத்தின் நிபுணர் டொக்டர் இனோகா சுரவீர தெரிவித்தார்.
அதன்படி காலை 11.00 மணி முதல் பிற்பகல் 02.30 மணி வரையிலான காலப்பகுதியை அபாய காலம் எனலாம்.
இதனால், கட்டுமான தொழிலில் ஈடுபடும் மக்கள், திறந்த வெளியில் வியாபாரம் செய்பவர்கள், தொழிலாளர்கள், பாதுகாப்பு துறை அதிகாரிகள் இது குறித்து அக்கறையுடன் இருக்க வேண்டும்.
அத்தகையவர்கள் முடிந்தவரை சூரிய ஒளியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம்.
மேலும், அந்த நேரத்தை தவிர்த்து பணி அட்டவணையை தயார் செய்வது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டது.
இதுபோன்ற வேலைகளைச் செய்பவர்கள் வெளிர் நிற ஆடைகளை அணிவதும், முடிந்தவரை தண்ணீர் உள்ளிட்ட இயற்கையான திரவங்களை அருந்துவதும் மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.
இந்த நாட்டில் தேடப்பட்டு வரும் மேலும் பல குற்றவாளிகள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்றும் தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் பொதுக் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விக்கிரமசிங்க பல கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பொது வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் மாத இறுதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.
காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு பதில் நீதவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (1) மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
காத்தான்குடி பாலமுனை பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடாத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான ஸஹ்ரான் காசிமின் சகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை (01) அதிகாலையில் பொலிசார் கைது செய்துள்ளதுடன் 23 மோட்டார் சைக்கிள்கள் ஆட்டோ ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு பொலிசார் சென்று விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையடுத்து பிரதேசத்தில் பெரும் பரபரப்பு எற்பட்டது.
இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இவர்களை வெள்ளிக்கிழமை (1) மாலையில் மட்டக்களப்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற விவகாரக் குழுவில் இது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 5ம் திகதி காலை 10.30 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம் நடக்கிறது. அதற்கு மத்திய வங்கி அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.