சுகாதார அமைச்சுடன் இணைந்து பாலர் பாடசாலை முதல் உயர்நிலைப் பாடசாலை வரையிலான குழந்தைகளுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை மார்ச் 7ஆம் திகதி முதல் தொடங்குவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள குழந்தைகளுக்கான மன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு கல்வி அமைச்சினை ஒருங்கிணைக்க வேண்டியது இன்றியமையாததாக இருந்தாலும், குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் புத்தகங்களை தயாரித்து முடிக்க முடியாத நிலையே மேற்கண்ட முடிவை எடுத்துள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு பாடத்திட்டத்தை தயாரித்துள்ளதுடன், பாடத்திட்டத்திற்கு அமைய புத்தகங்களை தயாரிக்கும் பணியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
அந்தப் பொறுப்பை அமைச்சு இதுவரை நிறைவேற்றாததால், சுகாதார அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக மன்றத்தின் தலைவி, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
பாடத்திட்டத்தின்படி சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட வரைகலை வடிவமைப்பு அன்றைய தினம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அவைத்தலைவர் தெரிவித்தார்.
பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் குற்றச் சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. மேலும் அவர்களைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.
கூரகல விகாரை தொடர்பில் தாம் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களால் முஸ்லிம் மக்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதுடன் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல்கொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் கூண்டில் இருந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பான வழக்கின் சாட்சிய விசாரணை முடிவடைந்த பின்னர், வழக்கின் தீர்ப்பு மார்ச் 28ஆம் திகதி வழங்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூரகல விகாரை தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தேசிய மற்றும் மத அமைப்புகளுக்கு தீங்கானது என கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (17) மாலை 5 மணி முதல் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இன்று (17) மாலை 05 மணி முதல் நாளை (18) காலை 09 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தலை நீர் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என சில கட்சிகள் போலியான கருத்துக்கணிப்புகளை முன்வைத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இதனைத் தெரிவித்தார்.
சமூகவலைத்தளங்களில் எப்போதுமே அந்தக் கட்சியே வெற்றி பெறும் என்றும், ஆனால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடகங்களில் காளான்கள் போல் கணக்கெடுப்பு அறிக்கைகள் வெளிவருவதாகவும், அந்த தரவுகள் பொய்யானவை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
ஆய்வு அறிக்கைகளில் காட்டப்பட்டுள்ள அறிக்கை தரவுகளிலிருந்து மாதிரிகள் மற்றும் தகவல்களை எவ்வாறு எடுப்பது என்பது தெளிவாக இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
சமகி ஜன பலவேக கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அப் பதவியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சித் தலைமையையும் கட்சியையும் பகிரங்கமாக விமர்சித்ததற்காக கட்சியின் தவிசாளர் சரத் பொன்சேகாவை பதவியில் இருந்து நீக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் பல மூத்த தலைவர்கள் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்படி, கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா மிக விரைவில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெய் தேவை 24,0000 மெற்றிக் தொன் எனவும், அந்த தேவையை பூர்த்தி செய்ய உள்ளுர் உற்பத்தி போதுமானதாக இல்லை எனவும் மினுவாங்கொடை பிரதேச நடுத்தர மற்றும் சிறிய அளவிலான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிட்டு பற்றாக்குறையை மட்டும் இறக்குமதி செய்து சமநிலையை பராமரிக்காவிட்டால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சியடையும் என்றும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தற்போது நாட்டின் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2800-3200 மில்லியன் தேங்காய்களாகவும், உள்நாட்டு நுகர்வுக்கு எடுத்துக் கொண்டால் 70% ஆகவும் உள்ளது.
மேலும், ஒரு தேங்காய் 70 ரூபாவுக்கு உற்பத்தியாளரிடம் இருந்து கொள்வனவு செய்து எண்ணெயாக மாற்றினால், ஒரு போத்தல் எண்ணெய் 600 ரூபாவாகும் எனவும், தற்போது சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் 400 – 450 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 9,434 முறைப்பாடுகள் கடந்த 2023 ஜனவரி (01) முதல் டிசம்பர் (31) வரை கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவற்றில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகள், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 முறைப்பாடுகள், மிருகத்தனம் தொடர்பான 2242 முறைப்பாடுகள், சிறுமிகளை கற்பழிப்பு தொடர்பான 51 முறைப்பாடுகள் மற்றும் சிறுவர்களை ஆபாசமான செயல்களில் பயன்படுத்தியமை தொடர்பான 06 முறைப்பாடுகள் உள்ளன.
போதைப்பொருள் கடத்தலுக்கு குழந்தைகளை பயன்படுத்துதல், தொழிலாளர்களாக பயன்படுத்துதல், குடும்ப வன்முறையால் ஒடுக்குதல், புறக்கணிப்பு, கடத்தல், காயப்படுத்துதல், குழந்தைகளை விற்பனை செய்தல், பாடசாலை கல்வி வழங்காமை போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தலைவர் குறிப்பிடுகின்றார்.
குறித்த முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க தற்போதுள்ள சில சட்டங்களை திருத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான 'குடு சலிந்து' என்பவரின் உதவியாளர் ஒருவர் துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
பியுமி ஹஸ்திக எனும் குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகராக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள குடு சலிந்துவுடன் இணைந்து சந்தேகநபர் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குடு சலிந்து அண்மையில் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.