web log free
February 24, 2024
kumar

kumar

நாளை (07) பொது விடுமுறை என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது எனினும் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் திறந்திருக்கும்.

இதேவேளை, தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானசாலைகள் மூடப்படும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

சில தினங்களுக்கு முன்னர் ஹோமாகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியும் (IRC) பாதாள உலக குழு நபரான அங்கொட லொக்காவின் கூட்டாளியுமான "அத்துருகிரியே ஜெரோம்" விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் அத்துருகிரியவில் உள்ள மில்லினியம் சிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துருகிரியவில் இடம்பெற்ற வழக்கு தொடர்பில் சந்தேகநபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அதுருகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு, தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பண்டாரகமவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் 2015ஆம் ஆண்டே முதன்முறையாக அமைச்சரானார். நாங்கள் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் வந்ததன் காரணமாகவே இந்த மாறுதல் ஏற்பட்டது. இல்லையேல் அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருக்காது என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எப்பொழுதும் அரசியல் சார்ந்துதான் முடிவெடுப்பதனால் தான் மக்கள் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தால் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அரசு திட்டங்களை செயல்படுத்தி பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்கினால் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அரசுக்கு முழு ஆதரவை வழங்க தயாராக உள்ளோம் என்றார்.

பாராளுமன்றத்தில் பல சட்டமூலங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சுவையூட்டும் பாலை பருகிய 12 சிறுவர்கள் சுகவீனம் காரணமாக நேற்று (04) பிற்பகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

பாரதிபுரம் பிரதேசத்தில் முன்பள்ளிச் சிறார்களுக்கான நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட சுவையூட்டும் திரவப் பாலை அருந்தி மயக்கம், வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு ஒவ்வாமை நிலைமைகள் ஏற்பட்டதையடுத்து பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர்கள் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதனிடையே, குழந்தைகள் அருந்திய சுவையூட்டப்பட்ட திரவ பால் பொதிகளை பரிசோதிக்க, அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் மூலம் கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற ரீதியில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக  ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முன்வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், அமைச்சர் ஒருவர் தனிப்பட்ட கருத்தைக் கூறலாம்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியானவர்கள் பொதுஜன பெரமுனவில் உள்ளதா என ஊடகவியலாளர்கள் வினவிய போது, ​​அதற்கு தகுதியானவர்கள் கட்சியில் இருப்பதாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று (04) நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு (Laugfs Gas) சிலிண்டரின் விலையும் குறைக்கப்படவுள்ளது.

12.5 கிலோகிராம் எடையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 1290 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3990 ரூபாவாக அமைந்துள்ளது.

5 கிலோகிராம் எடையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 516 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1596 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலைகளும் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவாலும் 2.3 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 183 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 

அதன்படி அதிகரிக்கும் ஒதுக்கீடுகள் வருமாறு 

 

முச்சக்கர வண்டி 5 லீ  இருந்து 8 லீ

 

மோட்டார் சைக்கிள் 4லீ இருந்து 7லீ

 

பேருந்துகள் 40லீ இருந்து 60லீ

 

கார்கள் 20லீ இருந்து 30லீ 

 

லேன்ட் வாகனங்கள் 15லீ இருந்து 25லீ

 

லொறிகள் 50லீ இருந்து 75லீ

 

quadric cycle from 4L to 6L

 

விசேட தேவை வாகனங்கள்  20லீ இருந்து 30லீ

 

வேன் 20லீ இருந்து 30லீ

ஜனாதிபதிப் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்வு செய்துகொள்வதற்காக 2022.07.20 ஆம் திகதி நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின்போது உபயோகிக்கப்பட்ட வாக்களிப்புச் சீட்டுக்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் இன்று (04) அறிவித்தார்.

1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் 18 ஆம் வாசகத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், 2023.03.24ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அவர்களால் வாக்களிப்புச் சீட்டுக்கள் அழிக்கப்பட்டதாக சபாநாயகர் தனது அறிவிப்பில் தெரிவித்தார். 

லிட்ரோ 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 1005 ரூபாவாலும், 5 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 402 ரூபாவாலும், 2.3 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 183 ரூபாவாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை விபரங்கள்

01.12.5KG :- 3,738.00

02.5KG :- 1,502.00

03.2.3KG :- 700.00