குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு தலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் முன்னோடித் திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தயாராகி வருகிறது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இ.தொ.கா வலியுறுத்தியுள்ளது.
தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இ.தொ.கா, நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டே தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
தோட்ட தொழிலாளர்கள் வருடம் முழுவதும் கம்பனிக்கு வருவாய் ஈட்டி கொடுக்கும் வகையில் கடினமாக உழைக்கின்றனர்.
அவர்கள் வருடத்தில் தைப்பொங்கல்,தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை கொண்டாடிவரும் நிலையில், வருடம் முழுவதும் கம்பனிக்காக உழைக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் இவ்விடயத்தில் இ.தொ.கா பின்வாங்காது எனவும் தெரிவித்துள்ளது.
தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்குவது குறித்து இன்றைய தினம் அறிவிப்பதாக கம்பெனிகள் தெரிவித்துள்ளன.
சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.
இதன்படி விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் பதவி மகிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர், விவசாய அமைச்சராக மகிந்த அமரவீரவும், சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் பணியாற்றினர்.
இதேவேளை, சுகாதார அமைச்சராக டொக்டர் ரொமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டார்.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டமையே இதற்குக் காரணம்.
ரயில்கள் ஒரு பாதையில் மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் செயற்பாட்டு அத்தியட்சகர் எம்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
இதனால் அனைத்து ரயில் பயணங்களும் 30 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக நேரிடும் என்று அவர் கூறுகிறார்.
மழை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நில்வளா மற்றும் ஜிங் கங்கை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கொட்டபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அதுரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் கால்வாய்கள் நிரம்பி வழிவதால் நேற்று இரவு முதல் பல பகுதிகளில் உள்ள புறவழிச்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் தெனியாய வலயக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (23) மூடப்படும் என தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.
மாத்தறை மாவட்டத்தின் ஏனைய வலயங்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இதுவரை பாடசாலைகளை நடத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ. 75 சுற்றிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் தயவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவசர அமைச்சரவை மாற்றம் இன்று காலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுற்றாடல், சுகாதாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சுக்கள் தொடர்பில் இந்த அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோய்னுடன் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல நாள் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. தெய்வேந்திர முனையில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் இணைந்து மேற்கொண்ட ஆழ்கடல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல் மீன்பிடி துறைமுகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (22) கொண்டுவரப்பட்டது. படகில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றபபட்டுள்ளது என்றும் கடற்படை அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
லெபனானில் கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண் மாத்தறை பகுதியைச் சேர்ந்த பிரேமலதா என்ற 65 வயது மூதாட்டி என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் ராணி என அழைக்கப்படும் பெண்ணொருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சபுகஸ்கந்த மாகொல தெற்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒன்றரை மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருள், ஐநூறு கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் உள்ளிட்ட சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் வசம் இருந்து நம்பர் பிளேட் மாற்றப்பட்ட இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.