web log free
July 15, 2024
kumar

kumar

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.

இந்த விஜயத்தின் போது பல துறைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மேலும், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

மல்லாவி, பாலிநகர் பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

23 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது வீட்டிற்குள் நுழைந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் குருநாகல் வீதியின் அம்பன்பொல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் மீது தனியார் பேருந்து பின்னால் இருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மேலும் இருபத்தி ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ்ஸொன்று மனம்பிட்டிய கொடலீய பாலத்தில் இருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலன்னறுவை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். 

பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய C.D.விக்ரமரத்னவின் சேவைக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இன்று(09) முதல் அமுலாகும் வகையில் சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல வரிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசின் வருவாயை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரிகளில், சொத்து வரி, நில வரி, அரச வரி ஆகியவை முதலில் அறிமுகப்படுத்தப்படும்.

இதுவரை வரி விதிக்கப்படாத பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஒரே வரி விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் படி வரி விதிக்கப்பட உள்ளது. 

இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த நபர் மற்றும் இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில், வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

அந்தக் கலந்துரையாடலில் புதிய பொலிஸ் மா அதிபர் யார் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டாலும் அவர் 3 மாத காலத்திற்கு மட்டுமே நியமிக்கப்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் சேவைக் காலம் கடந்த 26ஆம் திகதி நிறைவடைந்த போதிலும், பொலிஸ் மா அதிபர் பதவி இன்னும் வெற்றிடமாகவே உள்ளது.

அதன்படி, பொலிஸ் மா அதிபர் பதவியில் இல்லாமல் 13 நாட்கள் கடந்து செல்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று பல தேசிய பத்திரிகைகள் சி.டி..விக்கிரமரத்னவுக்கு மீண்டும் சேவையை நீட்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டன. .

எவ்வாறாயினும், பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடலின் போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சரின் தீர்மானம் தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அமைச்சருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பிரதான நகரில் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் நுவரெலியா பம்பரகலை தோட்டத்தை சேர்ந்த 33 வயதுடைய ஆறுமுகம் ஹாரியதாஸ் என்ற நபர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
 
நுவரெலியா பிரதான நகரில் நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
கத்தியால் குத்திய பழங்கள் விற்கும் வியாபாரி தானாகவே நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். 

 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு பைத்தியமில்லை என வெகுஜன ஊடகம் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் அன்றாடச் செலவுகளுக்கும் அரசாங்கம் பணத்தை வழங்குவது மிகவும் சிரமமாக உள்ளது என்றார்.

எனவே இந்தக் காலப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.