பாராளுமன்றத் தேர்தலை நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச். எம். பிரியந்த ஹேரத்தினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி ஒக்டோபர் 4 முதல் ஒக்டோபர் 11 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல்கள் சட்டத்தின்படி, ஐந்து வாரங்களுக்கு குறையாமலும், வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஏழு வாரங்களுக்கு மிகையாகாமலும் வாக்குப்பதிவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அதன்படி, வேட்புமனு ஏற்கும் பணி முடிவடையும் ஒக்டோபர் 11 ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15 ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14 ஆம் திகதி, அந்த சட்டக் காலப்பகுதியில் உள்ளடக்கப்படாததால், அன்றைய தினம் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே சம்பந்தப்பட்ட விடயத்தை சரி செய்வதற்கு ஏற்ற உத்தரவாக இருந்தால், உயர் நீதிமன்றம் அத்தகைய உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, காலி உலுவித்திகே பிரதான கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடங்களை மாற்றுவது முக்கியமல்ல.தலைமைத்துவம் முக்கியம்.
ரணில் விக்கிரமசிங்க தனது அணிக்கு தொடர்ந்து தலைமை தாங்குகிறார்.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் மேலும் தலைமைத்துவத்தை வழங்கி மக்களுக்காக உழைக்க ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாக வஜிர தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்ததாவது, 13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக அந்த காலத்திலே இருந்து ஜேவிபி செயற்பட்டது.
ஆனால் ஐனாதிபதி தேர்தல் காலத்தில் அதற்கு மாற்றான கொள்கையுடன் வாக்கு கேட்டனர். இவ்வாறான நிலையில் இப்போது மீண்டும் தமது நிலைப்பாட்டையா சில்வின் சில்வா ஊடாக வெளிப்படுத்த முயல்கின்றனர்.
ஆனாலும் அக்கட்சியின் பிமல் ரத்நாயக்க அப்படி அவர் கூறவில்லலை என்றவாறாக கூறியிருக்கிறார். இதனூடாக தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறன கருத்துக்களை கூறுவது அந்த மக்களின் மனங்களை நோகச் செய்யும் என்பது அவர்களுக்கே தெரிகிறது போல உள்ளது.
இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும் இப்போது இருக்கும் 13 ஆவதையும் நாங்கள் இதற்காக பறிகொடுத்துவிட்டு ஜேவிபியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்.
ஏனெனில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிங்களவர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் பாசையும் மதமும் எங்கள் எல்லோரையும் பீடிக்க கூடியதாகத் தான் அமையும். ஆகையினால் அவ்வாறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கின்றோம். சிர்வின் சில்வா போன்றவர்கள் அவ்வாறு கூறுவது பிழை என்று தெளிவாக கூறுகின்றோம்.
இந்த 13 ஆவது திருத்தத்தை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறி கூறி வருகின்றதை பார்க்கிறோம். அவ்வாறு அவர்கள் எதனைக் கூறினாலும் 13 ஆவது திருத்தச் சட்டம் எந்தக் காலத்திலும் எங்களுக்கு ஒரு தீர்வாக அமையாது. அவ்வாறு அமையவும் போவதில்லை.ஆனால் தமிழ் மக்களுக்கு எந்தவாறான தீர்வு தரப் போகின்றார்கள் என்று குறிப்பிடுகையில் பொருளாதார பிரச்சனை தான் எங்களுக்கு இருக்கு என்று சில்வின் சில்வா குறிப்பிடுகின்றார்.
அதுவும் பொருளாதார பிரச்சனை என்று கூறும் போது எங்களுடைய தமிழ்ப் பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கபடுகின்றன. பௌத்த சின்னங்கள் கொண்டுவரப்பட்டு புதிய புதிய விகாரைகள் அமைக்கப்படுகின்றன.
வடக்கையும் கிழக்கையும் ஒருமித்து வைத்திருக்கும் இடத்திலே சிங்களப் பிரதேசத்தைக் கொண்டு வந்து எங்களுடைய தொடர்ச்சியை அற்றுப் போகச் செய்கின்றார்கள். குறிப்பாக வடகிழக்கிலே அதிக இரானுவர்கள் குவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதனால் எங்களுக்கு ஏற்படும் பலவிதமான சமூக பிரச்சனைகளை நாங்கள் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறோம்.
இவற்றையெல்லாம் பற்றி குளிப்பிடாது பொருளாதார அபிவிருத்தி என்று சில விடயங்களை செய்வதால் பிரச்சனை தீரும் என அவர் நினைத்தாரானால் அது அவருடைய அறியாமையை வெளிப்படுத்துகிறது.
வடகிழக்கு மாகாணங்களிலே தமிழ் மக்கள் மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக தமிழ் மொழியை பாவித்து அவர்களுக்கென்று வாழ்வு முறையொன்று அமைத்து இருக்கிறார்கள். அதனை உப்போதும் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதனை இல்லாமல் படுத்தும் விதத்தில் பொருளாதார ரீதியான தேவை என்று கூறுவது மனவருத்தத்திற்குரியது.
அதனை நீங்கள் கண்டி்க்கிறோம்.மேலும் முன்னாள் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து என்பது தெற்கில் பொருந்தினாலும் வடகிழக்கிலே எங்களுக்கு பொருந்தாது. உண்மையில் இளையவர்கள் அனுபவசாலிகளாகவும் இருக்க முடியும். ஆனாலும் ரணில் அவர்கள் அனுபவசாலிகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென கூறுவதற்கு காரம் இருக்கலாம்.
அதாவது அனுபவம் இல்லாமல் சில புதிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் போது இந்த நாட்டிற்கு அந்த விடயம் ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்துமென்று கருதலாம். ஆனால், வடகிழக்கு மாகாணங்களிலே இது சம்பந்தமாக அவ்வாறான ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இப்போது இருக்கும் அரசியல் யாப்பின் பிரகாரம் எல்லா அதிகாரங்களும் மத்தியிலே தான் இருக்கின்றது.
ஆகவே எங்களுக்கு தேவையானவர்கள் வந்து மக்களுக்காக ஓடியாடி சில சில நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க கூடியதாகவும் பல இடங்களிலும் சென்று மக்களுக்கு எதனை எடுத்துக் கொடுக்க முடியும் என்று ஆராயந்து நடவடிக்கை எடுக்க கூடியவர்கள் தான் தேவை. ஆகவே அந்த விதத்தில் வடகிழக்கு மமாகாணங்களில் இளைஞர்கள் கட்டாயமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென மக்களைப் பொறுத்தவரையில் நினைக்கின்றனர். Mmm
மேலும், மத்தியில் இருக்கின்ற பொருளாதார பிரச்சனைகள் சம்பந்தமான நிதி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு அவர் கூறுவது சரியாக இருக்கும். ஆனால் பாராளுமன்றத்திலே நாங்கள் இவ்வாறான வயது சென்றவர்களை கொண்டிருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஏனென்றால் அதிகாரம் எங்கள் கைவசம் இல்லாத நிலை உள்ளது. ஆகையினால் அவர் கூறுவது தெற்கிற்கு பொருந்தும் எனினும் வடகிழக்கு மாகாணத்திற்கு பொருந்தாது என்று தான் நான் அவதானிக்கிறேன் என்றார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் 8 வாகனங்கள் மஹிந்த ராஜபக்ஸவின் வசம் இருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வசம் 11 அரச வாகனங்கள் தற்போது உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதிக்குள்ள உரிமைகள் சட்டத்திற்கமைவாக மஹிந்த ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவும் தம்வசமுள்ள மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
வருடத்தின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 8.3 வீதத்தால் அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
வருடத்தின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் மூலம் 942.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை உயர்த்திய நிலையில், இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களும் அரிசியின் விலையை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், சந்தையில் கீரி சம்பா தவிர மற்ற அரிசி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ.400 ஆக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் விலை ரூ. 250-270 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
பாரிய அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலையை குறைப்பதாக கூறினாலும் சந்தையில் ஒரு கிலோ அரிசி 210-230 ரூபா வரை அதிக விலையில் உள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளை வெளியிடத் தயார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தனிநபரின் அறிக்கைகளின் அடிப்படையில் அவை ஏன் வெளியிடப்படுவதில்லை என்று கேட்ட அவர், பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பணிகளைச் சரியாகச் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.உதய கம்மன்பில சிறு பிள்ளைகள் மைதானத்தில் விளையாட்டுப் பொருட்களை வீசி கவனத்தை ஈர்க்கும் வகையில் செயற்படுவதாகவும், அவரின் அறிக்கைகள் தொடர்பில் தாம் கவலைப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
அந்த இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, பொறுப்புகளில் இருந்து தட்டிக்கழிக்காத அனுபவமிக்க அணியே அடுத்த பாராளுமன்றத்திற்கு தேவை எனவும் வலியுள்ளார்.
உங்கள் எதிர்காலத்தை புதிய பாராளுமன்றம் தீர்மானிக்கும். இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்தால் நாடாக மீண்டு வரலாம்.
தவறினால் நாடு மீண்டும் அழியும். மீண்டும் வரிசையில் நிற்கும் காலத்திற்கு நகரும். அதனால் கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கொழும்பு - கிரேண்ட்பாஸ் மாதம்பிட்டி மயானத்திற்கருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியின் பின்பக்க ஆசனத்தில் அமர்ந்திருந்த நபர் மீது காரில் வந்த சந்தேகநபர்களால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிஹிஜய செவண குடியிருப்பு தொகுதியில் வசித்துவந்த 35 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
நாடு தற்போது கடனில் இயங்குவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தனது அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் காரணமாக இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு புதிய வருமானம் கிடைக்காது எனவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
எனவே, உள்நாட்டிலேயே கடன் வாங்க வேண்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்காத பின்னணியிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.