தேர்தல் அலுவலகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஒத்திவைப்பு கோரும் மனு இன்றைய தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நேற்றைய தினம் சோசலிச மாணவர்கள் சங்கம் தேர்தல் திணைக்களம் முன்பாக போராட்டம் நடத்தினர்.
ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான துறவிகள் வாரியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்கோட் மாவத்தையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பெருந்தொகையான தொழில் அதிபர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
துறைமுகங்கள், பெட்ரோலியம், மின்சாரம், வங்கிகள் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் ஊழியர்கள் ஏராளமானோர் அந்த இடத்தில் குவிந்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன குறித்த மனு தாக்கல் செய்திருந்தார்.
தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படவிருந்த போதிலும், மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் உத்தரவு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
போதிய புலனாய்வுத் தகவல் கிடைத்தும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
மொனராகல - புத்தல பிரதேசத்தில் இன்று (22) காலை 11.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியில் நடைபெறாவிட்டாலும் கட்டுப்பணத்தை திரும்ப செலுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத்தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை உரிய திகதியில் நடத்துவதற்கு சாத்தியமில்லை என்ற போதிலும் அதற்காக வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தை உடன் திரும்ப செலுத்தக்கூடிய சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ரத்து செய்ய வேண்டுமாயின் அரசாங்கம் நாடாளுமன்றில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது எல்லை நிர்ணயம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் அவ்வாறு செய்தால் வேட்பு மனுக்களை இரத்து செய்ய முடியும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத்தேர்தலை தற்போதைக்கு நடத்த முடியாது என உச்ச நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் தேர்தலை நடத்தவே முடியாது என கூறவில்லை என நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 1137 உள்ளூராட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் இது அமைந்துள்ளது.
குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் திங்கட்கிழமை நள்ளிரவுடன் இரண்டரை வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில் இலங்கை எப்போது வேண்டுமானாலும் பொதுத் தேர்தலுக்கு செல்லலாம்.
அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின்படி, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் நாட்டின் தலைவரால் அவையைக் கலைக்க முடியும்.
அரசியலமைப்பின் 70 வது பிரிவின் கீழ், அவையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
அரச அமைச்சர்களின் பாவனைக்காக அரசாங்கம் 239 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த வாகனங்கள் ஏற்கனவே துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
சாமானியர்களின் மின் கட்டணத்தை உயர்த்தி அமைச்சர்கள் மகிழ்கிறார்கள் என்று கூறும் அவர், அந்த வாகன சுகத்தை அமைச்சர்கள் அனுபவிக்க மக்களே மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.
தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லாவிட்டாலும், இவ்வாறான வீண் செலவுகளுக்கு அரசாங்கத்திடம் பணம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டம் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை (22) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.