web log free
May 12, 2025
kumar

kumar

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நேற்று மதியம் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சான்றிதழை இந்தியா வழங்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது.

இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிப்பதில் இருந்த முக்கிய பிரச்சினை தீர்க்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றியது போன்று ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை மூளையை பயன்படுத்தி விரட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

கோட்டாபாய ராஜபக்ச சர்வாதிகாரியாக மாறி மக்களை ஒடுக்குவார் என்று தான் முதலில் நினைத்ததாகவும், இறுதியில் அவர் எதுவும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால் கோட்டாபாய ராஜபக்ஷ பயன்படுத்தாத சகல சூழ்ச்சிகளையும் சதிகளையும் தற்போதைய ஜனாதிபதி பயன்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஜனவரி மாத இறுதிக்குள் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும் எனவும், மக்கள் வீதிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே எதிர்வரும் 31ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிணை வழங்குவது குறித்த முடிவு அன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது. 

பேலியகொட பிரதேசத்தில் இன்று (17) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலுபாலம பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

க.பொ.த.பொதுதரத்தில் சித்தியடைந்த மாணவர்களை க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கைகள் மூலம் பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, அப்பகுதியின் வட்டாரக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் வசிக்கும் பகுதியில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ஒரு பாடசாலையைப் பெற ஏற்பாடு செய்யலாம் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023ம் ஆண்டுக்கான இடைநிலை வகுப்புகளுக்கு (1 – 6 தவிர) குழந்தைகளை சேர்ப்பதற்கான புதிய சுற்றறிக்கையும் வெளியிடப்பட உள்ளதாகவும், அதன்படி, முதல் தவணை நடைபெறும் மார்ச் 27ம் திகதிக்குள் விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுவரை தேசிய பாடசாலைகளுக்கு இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை அமைச்சு வழங்காது.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயின் விடுதலை மற்றும் பயங்கரவாதச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி பம்பலப்பிட்டியில் இருந்து ஆரம்பமாகிய நிலையில் டுப்ளிகேஷன் வீதியில்்சென்று கொண்டிருந்த போது  பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரையை பிரயோகித்துள்ளனர் .

தலவாக்கலை  மிடில்டன் பிரிவில் உள்ள தோட்ட வீடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்று (15) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, மற்ற வீடுகளுக்கும் பரவியதால், சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் 12 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர், உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

தை பொங்கல் கொண்டாட்டம் நேற்று இடம்பெற்றதாகவும், இதன் காரணமாக தோட்டத்தில் தை பொங்கல் கொண்டாட்டத்தில் பலர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

"பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் - கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள். எனவே, 5 தமிழ்க் கட்சிகளைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நேற்று உருவான புதிய கூட்டணி தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய 5 தமிழ்க் கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டுள்ளன. 5 தமிழ்க் கட்சிகளும் 'ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி' எனும் பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தங்களைப் பிரகடனப்படுத்தியுள்ளன.

இது தொடர்பில் சம்பந்தன் எம்.பியிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-  

"எவரும் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திக் கட்சிகள், கூட்டணிகள் - கூட்டமைப்புக்கள் அமைப்பதை நான் எதிர்க்கவில்லை.

ஆனால், தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டால் அது மக்களைத்தான் தாக்கும்; மக்களைப் பலவீனப்படுத்தும். தமிழ் மக்கள் இந்தக் கருமத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி நீண்டகால வரலாற்றைக் கொண்ட கட்சி. தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சி; 1949 ஆம் ஆண்டு தொடக்கம் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சி; தமிழ் மக்களுக்காக அறவழியில் போராடி பல தியாகங்களைச் செய்த கட்சி.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி கொழும்பில் எனது இல்லத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது. ஆனால், கூட்டமைப்பின் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளும் (ரெலோ, புளொட்) அந்தத் தீர்மானத்துக்கு எதிர்மறையாகச் செயற்படுகின்றன. இது தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

தமிழ் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயற்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.

எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் நான் எதிர்ப்பு அரசியல் செய்ய விரும்பவில்லை. இதுவரை காலமும் நடந்த விடயங்கள், நடக்கின்ற விடயங்கள் ஆகியவற்றைத் தமிழ் மக்கள் கவனமாகச் சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்" - என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா மூத்த துணைத் தலைவர் பதவி உட்பட கட்சியின் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் அவர் இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏசியன் மிரர் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..! 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd