ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது அருவருப்பதாக இருப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச என்னையும் மனுஷ நாணயக்காரவையும் தவளைகள் என்று வர்ணித்துள்ளார். தவளைகள் போல் கிணற்றுக்குள் இருந்திருந்தால், எந்த நன்மையும் ஏற்படாது.
இதன் காரணமாகவே கிணற்றில் இருந்து
வெளியில் பாய்ந்து குதிக்க தீர்மானித்தோம். நாடு ஸ்திரமின்மையை இழக்கும் விதத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என நான் சஜித் பிரேமதாசவிடம் கோருகிறேன் எனவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலி இன்று (02) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வைத்தியசாலையின் தோல் நோய் பிரிவிற்கு முதலிகே அழைத்து வரப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று (02) எதிர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்திருந்தனர்.
நேற்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பொரளை சிறிசுமண தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறிசுமண தேரரை இன்று (02) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் இணைந்து நிதி மோசடியில் ஈடுபட்டதாக பொரளை சிறிசுமண தேரர் நேற்று (01) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டத்தை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு முழுவதும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் இன்று (02.11.2022) மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
மருதானையில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளது.
இந்த போராட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட 15 இற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 150 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் மிகப்பெரிய போராட்டம் இது என்பதுடன், கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், இன்றைய தினம் வேலை நாள் என்ற போதும் கூட கொழும்பில் அதிகளவில் மக்கள் நடமாட்டத்தை காண முடியாத நிலை காணப்படுகிறது.
இவ்வாறானதொரு சூழலில் போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில் சில வேளைகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியங்களும் இருப்பதாக சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, நாடு முழுவதும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, வடமேல், ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
கொழும்பு - அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்
காலி - அடிக்கடி சிறிதளவில்மழை பெய்யும்
யாழ்ப்பாணம் - அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்
கண்டி - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்
இரத்தினபுரி - அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்
திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
மன்னார் - அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்
அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் ஊர்வலம் இன்று (02) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமாகி அதன் முடிவில் பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.
'அடக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக, உரிமைகளுக்காகப் போராடுவோம்' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளம் சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், உட்பட பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுதந்திர தேசியப் பேரவை, சோசலிசக் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டாலும் ஜே.வி.பி கலந்து கொள்ள வாய்ப்பில்லை.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 வகையான உணவு வகைகளின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ரோல்ஸ், பரோட்டா, முட்டை ரொட்டி, காய்கறி ரொட்டி ஆகியவற்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு சாதாரண தேநீர் 30 ரூபாவிற்கும், ஒரு பால் தேநீர் 100 ரூபாவிற்கும் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளுக்கு அமைய பொரளை சிறிசுமண தேரர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நடிகை ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவில் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டதாக நடிகை ரம்பா இன்ஸ்டாவில் தகவல் தெரிவித்துள்ளார். மகள் சாஷா மருத்துவமனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.