web log free
June 13, 2024
kumar

kumar

நாடு முழுவதும் பல பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்படும் நிலையில் தற்போது காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகமும் முற்றுகையிடப்பட்டுள்ளது. 

இன்று காலை அலரி மாளிகை முன்பாக மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த பொது மக்களை தாக்கியிருந்தனர்.

இதனையடுத்து ஆவேசமடைந்த அரசாங்க எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக நாட்டின் பல பகுதிகளில் அரசியல்வாதிகளின் இல்லங்களை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.

அத்துடன் தற்போது அலரி மாளிகைக்குள்ளும் இவர்கள் நுழைய முயற்சித்த நிலையில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே கடும் கோபத்திலிருக்கும் அரசாங்க எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி செயலகத்தையும் முற்றுகையிட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்று காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட உரை...

அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை என அவர் இன்று (09) தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. சவால்களை எதிர்கொண்டு சவால்களை சமாளிப்பதுதான் எனது கொள்கை. சவால்களை கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை. அவற்றுக்கான முன்னுதாரணங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் அதன் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகின்றன. அவர்களுக்குத் தேவையானது அதிகாரம் மட்டுமே. ஜனாதிபதிக்கு எவ்வித தடையின்றி முடிவெடுக்க முடியும்.

பொதுநலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைதான் என்னை அரசியலுக்கு வர வைத்தது. இப்போது என்ன செய்வது என்று நான் உங்களிடம் கேட்கிறேன்.

உங்களுடன் ஒரு முடிவுக்கு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலில் தாய்நாடு, இரண்டாவது தாய்நாடு, மூன்றாவது தாய்நாடு. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

உடன் அமுலாகும் வகையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போதைய நெருக்கடிக்கு பிரதமர் பதவி விலகுவதே சிறந்த தீர்வாக அமையும் என அமைச்சரவைப் பேச்சாளர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

தற்போதைய அமைச்சரவை எனது பதவியை இராஜினாமா செய்யுமாறும், புதிய அமைச்சரவையை நியமிக்க எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமரின் பதவி விலகல் அமைச்சரவையை கலைக்கும் செயலாகவே கருதப்படுவதாகவும், பிரதமர் பதவி விலகுவதே சிறந்த தீர்வாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் இன்று தனது முடிவை அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆமர் வீதி பகுதியில் அனைத்து வீதிகளையும் மறித்து மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

தமக்கு எரிவாயு கிடைக்காவிடின் நாளைய தினம் நடுச்சந்தியில் கூடாரம் அமைத்து வீதிகளை மறித்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்போம் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆமர் வீதிகுதியில் தற்போது பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் பொலிஸார் கைகளில், தடியடி பிரயோகம் மேற்கொள்ளும் பொல்லுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடன்னின் கீழ் இலங்கை அரசாங்கத்தினால் நீர் கேனான் வாகனம் இறக்குமதி செய்யப்படுவதாக வெளியான தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று மறுத்துள்ளது.

“இந்திய அரசாங்கத்தால் நீட்டிக்கப்பட்ட கடன் உதவின் கீழ் இலங்கை அரசாங்கத்தால் நீர் கேனான் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டது என்ற செய்திகளை நாங்கள் பார்த்தோம். இந்த அறிக்கைகள் உண்மையில் தவறானவை. இந்தியா இலங்கைக்கு வழங்கிய எந்தவொரு கடனுதவியின் கீழும் "இந்தியாவினால் நீர் கேனான் வாகனங்கள் வழங்கப்படவில்லை” என உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வழங்குவது தற்போதைய சூழ்நிலையில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்கே , இலங்கை மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இவ்வாறான தவறான அறிக்கைகள் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்காது” என்றும் அது மேலும் கூறியுள்ளது

ஒரு முக்கியமான வாரத்தை முன்னிட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அனுராதபுரத்திற்கு விஜயம் செய்து ஜய ஸ்ரீ மஹா போதியை தரிசனம் செய்தார்.

அனுராதபுரத்தில் உள்ள மிகப் பெரிய வரலாற்று பௌத்த நினைவுச்சின்னங்களில் ஒன்றான ருவன்வெலி மகா சேயாவிற்கும் பிரதமர் விஜயம் செய்தார்

லங்கா ஐ.ஓ.சி எரிபொருளின் விலை அதிகரிப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

லங்கா ஐஓசி அல்லது சிபெட்கோவில் விலை உயர்வு இல்லை என்றார்.

பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் போலியான மற்றும் பொய்யான செய்திகளை பதிவிட்டு பகிர்பவர்களுக்கு எதிராக அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்கும்.

ஒரு நாள் சேவை தவிர்ந்த கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் திங்கட்கிழமை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை வெளியிடுகையில், கடந்த வெள்ளிக்கிழமை (5) முதல் கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் சேவை செவ்வாய்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது

நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.