யால விலங்குகள் சரணாலய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று (26) கலந்துகொண்டு அவர் இவ்வாறு கூறினார்.
இதன்படி அரசியல் அழுத்தம் இன்றி அந்த விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
யால சரணாலயத்தில் பாதுகாவலர்கள் மற்றும் சாரதிகளை ஒதுக்கி சட்டவிரோதமாக நடந்து கொண்ட 09 பேர் இன்று (26) காலை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளனர்.
யால சரணாலயத்தில் சட்டவிரோதமாக ஓட்டிச் சென்ற 07 வாகனங்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக யால சரணாலய பிரதிப் பாதுகாவலர் தெரிவித்தார்.
பிரித்தானிய சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய அலுவல்கள் அமைச்சராக கடமையாற்றிய ரணில் ஜயவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
செப்டம்பர் 6 ஆம் திகதி, அவர் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் அமைச்சராக பதவியேற்றார்.
பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் புதிய அமைச்சரவையை நியமிக்கத் தயாராகி வருவதால், அமைச்சர் பதவியை விட்டு விலகி பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ரணில் ஜயவர்தனவின் இராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாரிய குழுவொன்று தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொள்ளும் நம்பிக்கையில் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுமார் நாற்பது பேர் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இக்குழுவினர் ஏற்கனவே பல தடவைகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர், ஒரு குழுவுடன் இணைந்து செயற்படும் போது கட்சி மாறுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வுடன் செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபையை ஸ்தாபிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் அவ்வாறு மேற்கொள்ள முயற்சிப்பது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகும் எனவும் சபை முதல்வரும் அமைச்சருமான (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த கடந்த 19 ஆம் திகதி தெரிவித்தார்.
தற்பொழுது சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபையை ஸ்தாபிப்பதற்கு தயாராகுவதாக ஊடகங்கள் மூலம் அறிக்கையிடப்படுவதாகவும் அது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விசேடமாக தேர்தல் ஒன்றின் மூலம் பொதுமக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதாகவும், மக்கள் பிரதிநிதிகளை மாற்ற வேண்டும் எனின் தேர்தல் மூலம் அதனை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால், இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வது சட்டரீதியானது அல்ல எனவும் அது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்களால் முன்வைக்கப்பட்ட பாராளுமன்ற சிறப்புரை மீறப்பட்டுள்ளமை தொடர்பான விடயத்தை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரை பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்
கிரிக்கெட் வீரர்களான அசித்த பெர்னாண்டோ, மதீஷ பத்திரன மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் அவுஸ்திரேலியா செல்வதற்கான விசாக்கள் இன்னும் நிலுவையில் உள்ளது
அணியிலுள்ள பல வீரர்களுக்கு தொடர் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வார இறுதியில் மூன்று துடுப்பாட்ட வீரர்களையும் காத்திருப்பு வீரர்களாக அனுப்ப இலங்கை கிரிக்கெட் தீர்மானித்திருந்தது.
இருப்பினும், டி20 உலகக் கோப்பைக்காக காத்திருப்பில் இருந்த வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் ஏன் முன்னதாக விசா எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இலங்கையில் இப்போது கசுன் ராஜித மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோர் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர், பினுர பெர்னாண்டோ போட்டியிலிருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பக்கபடுகிறது.
புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமித்து அமைச்சரவை விஸ்தரிப்பும், புதிய ஆளுநர்கள் பலரை நியமிப்பதும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த நியமனங்களை உடனடியாக வழங்குமாறும் கூறியிருந்தது.
ஆனால் விரைவில் எந்த முடிவும் எடுக்கப்படாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர்பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட யாழினி ராஜகுலசிங்கம்(Yashini Rajakulasingham )அமோக வெற்றி பெற்றார்.
ஸ்காபுறோரூச் பார்க் (Scarborough-Rouge Park) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட அனு சிறீஸ்கந்தராஜா (Anu Sriskandaraja )அமோக வெற்றி பெற்றார்.
ஸ்காபுறோ மத்தி (Scarborough Center) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நீதன் சாண் (Neethan Chan)அமோக வெற்றி பெற்றார்.
WARD 7 COUNCILLOR) கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட யுவனீற்ரா நாதன்(Yuvaneetra Nathan )அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.
இதேவேளை, வெற்றிபெற்ற நான்கு தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இலங்கையில் மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 671015 ஆக உள்ளது.
இன்று நாட்டில் கொவிட் மரணம் எதுவும் பதிவாகவில்லை.
இதுவரை பதிவாகியுள்ள நாட்டின் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16774 ஆகும்.
விகாரைகளில் சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்பில் பௌத்த அலுவல்கள் ஆணையாளரிடம் உடனடியாக அறிக்கை கோரியுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறு பிள்ளைகளை பிக்குவாக மாற்றுவது என்ற பெயரில் விகாரைகளுக்கு அழைத்து வந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு தாம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், விகாரைகளில் இவ்வாறான தவறுகளை செய்பவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான குற்றங்களை சட்டரீதியாக எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தாம் ஆராய்வதாக தெரிவித்த விக்கிரமநாயக்க, இது தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தாம் நம்புவதாகவும் சுட்டிக்காட்டினார்.
விகாரைகள் சட்டம் மற்றும் தேரவாத துறவி சொற்பொழிவு சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும், இது போன்ற தவறான செயல்களை தடுக்க வாய்ப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து சில யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சட்டங்கள் காலத்திற்கேற்ப திருத்தப்பட வேண்டும் என்றும், இந்தச் சட்டங்களில் விகாரை விவகாரங்கள் தொடர்பான கடப்பாடு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இவ்வாறான விடயங்களில் நிரந்தர தீர்வுகளை காண முடியாது என தெரிவித்த அவர், தவறு செய்யும் பிக்குகளின் அங்கிகளை கழற்றுவது போன்ற தண்டனைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டா கோ ஹோம் போராட்டத்தின் பின்னணியில் நிரந்தரமாக மூன்று வகையான குழுக்கள் இருந்ததாகவும், மூன்றாம் தரப்பு யார் என்பதை தற்போதைக்கு வெளிப்படுத்த முடியாது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஏசியன் மிரருக்கு தெரிவித்தார்.
மூன்றாவது தரப்பினர் தொடர்பில் தன்னிடம் ஆதாரம் இல்லை என்றும், இரண்டு தரப்பினர் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் உறுதியாக இருந்ததாகவும், அதில் ஒன்று ரணில் விக்கிரமசிங்க என்றும், அந்தப் போராட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியதாகவும் எம்.பி. கூறினார்.
ரணில் விக்கிரமசிங்க இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கட்சி சார்பற்ற பொது மகன்கள், தெரியாமலும் சிலர் அறிந்தும் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததா அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியாமல் கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த ஓரிருவர் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாகவும் தனிப்பட்ட முறையில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அடுத்த நாட்டின் தலைமைத்துவத்தை பெறும் நோக்கில் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.