web log free
September 08, 2024
kumar

kumar

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைப்பாடு செய்ய சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரோயல் பார்க் கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமையுடன் தன்னை தொடர்புபடுத்தி  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் முறைப்பாடு செய்யவே குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்ததாக தேரர் தெரிவித்தார். 

பேருவளை பிரதேசத்தில் இருவர் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்திச் செல்லப்பட்டவர்கள் மீன்பிடி கப்பல் உரிமையாளர் மற்றும் மீனவர் என தெரிவிக்கப்படுகிறது. 

இவர்களில் ஒருவரது மனைவி கடந்த 20ஆம் திகதி தனது கணவர் வெள்ளை நிற வேனில் ஏறியதாகவும் அதன் பின்னர் எவ்வித தகவலும் இல்லை எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தனது மகன் வெள்ளை வேனில் கடத்தப்பட்டதாக காணாமல் போன மற்றையவரின் தாய் தெரிவித்துள்ளார்.

பட்டகொட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் பெறுவதற்காக 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் சாரதி வாகனத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அஹங்கம, சங்கரத்ன மாவத்தையைச் சேர்ந்த 63 வயதுடைய வீரப்புலி சுனில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐந்து நாட்களாக டீசலை எதிர்பார்த்து டிப்பர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், டிப்பருக்குள் அவர் இறந்து கிடப்பதைக் கண்ட ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 439 எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 20 எச்.ஐ.வி தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். 

இதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் 20 முதல் 49 வயது வரையிலானவர்கள். கடந்த காலங்களை விடவும் இளம் வயதினர் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்து என டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துளார்.

இது ஓர் ஆபத்தான நிலை எனவும், கூடுதல் எண்ணிக்கையிலான தொற்றாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிமுகம் இல்லாதவர்களுடன் பாலுறவு கொள்ளும் போது பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

40,000 மெட்ரிக் டன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு சரக்கு கப்பல் ஒன்று நாளை (24) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் இன்று உறுதிப்படுத்தினார்.

புதிய சப்ளையரிடமிருந்து பெற்றோல் அனுப்பப்படும் என்றும் அது இலங்கைக்கு செல்லும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கப்பல் நிறுத்தப்பட்டவுடன், சரக்குகள் இறக்கப்பட்டு, தற்போதுள்ள வரிசைகளைக் குறைக்க நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை உயர்வினால் விலை அதிகரிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“ஐரோப்பாவில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக உலக அளவில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது. உக்ரைனில் நிலவும் மோதல் காரணமாக ஐரோப்பாவிற்கு எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்குவதை ரஷ்யா நிறுத்தியுள்ளது. எனவே இலங்கையிலும் எரிபொருள் விலையேற்றம் ஏற்படும்” என பிரதமர் தெரிவித்தார்.

“தற்போது இலங்கைக்கு மாதாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய 550 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன. எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, இந்த நோக்கத்திற்காக தேவையான நிதியைப் பெறுவதில் நாங்கள் சிரமங்களை அனுபவித்து வருகிறோம். இதன் விளைவாக டாலர் வருமானத்தின் அடிப்படையில் அதிகபட்ச எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்போம். எரிபொருள் பற்றாக்குறையை தீர்க்க அதிக நேரம் எடுக்கும். எனவே எரிபொருளைப் பயன்படுத்தும் போது மக்கள் சிக்கனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வெளிநாட்டு உதவிகளை நாடியுள்ள நிலையில், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நன்கொடையாளர் மாநாட்டை நடத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

"வரலாற்று நட்பு நாடுகளாக இருந்த இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவின் ஆதரவு எங்களுக்கு தேவை," என்று அவர் கூறினார்.

இந்தியாவின் உயர்மட்டக் குழுவொன்று இன்று புது தில்லியில் இருந்து கூடுதல் ஆதரவைப் பெறுவதற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் அமெரிக்க கருவூலத்திலிருந்து ஒரு சிறப்புக் குழு அடுத்த வாரம் விஜயம் செய்யும் என்று விக்கிரமசிங்க கூறினார்.

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருங்க பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக் கூடாது என்றார்.

எல்லாவற்றிற்கும் முன் தாய்மை என்ற கருத்து மதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

பிரேமச்சந்திர நேற்றைய தினம் பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட அவமானகரமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் அரசியல் விஷயமாக தனது இல்லத்திற்கு வந்திருப்பதாகவும், அது தொடர்பான சித்தாந்தத்தின் மூலம் அதைக் கையாள வேண்டும் என்றும் கூறினார். அவரது தாய்மையை அவமதிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்றார் அவர்.

கொழும்பு - கோட்டை மற்றும் தலங்கம பிரதேசங்களில் கடந்த மாதம் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரட்டா என அழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்ன உள்ளிட்ட 7 சந்தேகநபர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி ஊடாக மருதானை பொலிஸில் சரணடைந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கமவில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 9 பேரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தனது மார்பகங்கள் வெளித் தெரிந்தது தொடர்பில் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஹிருணிக்கா பிரேமச்சந்திர, மூன்று பிள்ளைகளுக்கு பாலூட்டிய தனது மார்பகங்கள் குறித்து பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.

அவருடைய முகநூல் பதிவின் தமிழ் வடிவம் பின்வருமாறு, 

"எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்! அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன். 

(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன். 

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!"

- ஹிருணிகா பிரேமச்சந்திர