web log free
September 08, 2024
kumar

kumar

இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி ஒருபோதும் தனக்கு கூறவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இராஜினாமா செய்யுமாறு அவர் தனக்கு இனி கூறப்போவதுமில்லை என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை அலரி மாளிகையில் இன்று சந்தித்த போதே பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஸ விலகக்கூடாது என இதன்போது உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் மாவட்ட தலைவர்களும் ஏகமனதாக தீர்மானித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி ஏப்ரல் 29ஆம் திகதி காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்து அது தொடர்பில் கலந்துரையாடுமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் ஆளும் கட்சித் தலைவர்கள் மற்றும் கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து தற்போது சுயேச்சைக் குழுக்களாக செயற்படுபவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகா  சங்கத்தினர், பேராயர் உட்பட அனைத்து மதத் தலைவர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

பிரதமர் மற்றும் அரசாங்கம் இராஜினாமா செய்ததன் பின்னர் உருவாக்கப்படவுள்ள உத்தேச அரசாங்கத்தின் கட்டமைப்பு, செயற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு தீர்வாக பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கொள்கையளவில் உடன்படுவதாக ஜனாதிபதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கிணங்க, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அமைச்சரவை, ராஜினாமா செய்ததன் பின்னர், உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தின் கட்டமைப்பு குறித்து கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவிருக்கும் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்தில் பங்கேற்குமாறு பாராளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

மருதானை புனித ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டிடம் ஒன்றில் சற்று முன்னர் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எமது அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை என்பது கிஞ்சித்தும் கிடையாது என தான் அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்ததாக யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.

இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் யாழ் மறைமாவட்ட ஆயரை திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆயர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ”நாட்டின் நிலைமை பற்றியும் விசேடமாக வடக்கிலே என்ன மாதிரியான நிலைமை காணப்படுகின்றது என்பதை அமெரிக்க தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

முப்பது வருடங்களாக இந்த சூழ்நிலையில் வாழ்ந்து வந்த பழக்கப்பட்டவர்கள். நாங்கள் அஹிம்சை வழியில் போராடினோம். அதற்குக் கிடைத்தது அடியும் உதையும். அடக்குமுறையை எதிர்த்து ஆயுத வழியில் முப்பது வருடம் போராட்டம் இடம்பெற்று அதுவும் தவறி விட்டது. ஆகவே இனி என்ன செய்வதென்று தெரியாமல் இறைவனிடம் மன்றாடுகிறோம்.

இங்குள்ள அரசியல்வாதிகள் தொடர்பில் அவர் என்னிடம் கேட்டார். நான் அவர்களிடம் கூறினேன். ஒற்றுமை என்பது எமது அரசியல்வாதிகளிடம் கிஞ்சித்தும் கிடையாது. பதவி தமது பரம்பரை சொத்து என்பது போல் அவர்கள் செய்யப்படுகின்றனர். ஏனையவர்கள் முன் வருவதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . அதுவே அவர்களது குணமாக இருந்தது” என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறும் புதிய ஜனாதிபதி மற்றும் அமைச்சரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ் அரசாங்கத்தை அமைக்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் தயாரில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மிகவும் கவலையாக இருப்பதாகவும், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28ம் திகதி நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தொழிலாளர் தேசிய சங்கம் பூரண ஆதரவு வழங்கும் என அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தனது முகநூலில் விடுத்துள்ள செய்தி வருமாறு, 
 
"தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிலாளர் தேசிய சங்கம் என்ற ரீதியில் நாம் முழுமையான ஆதரவை வழங்குகிறோம்.
 
எனவே எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்."

 

நிதி ​அமைச்சர் அலி சப்ரி மீண்டும் நீதி அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் நீதி அமைச்சராக அலி சப்ரி கடமையாற்றுவார்.

இன்று (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் (12.5kg) விலை 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் கூறுவதற்காக தன்னால் பதவி விலக முடியாது எனவும், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் காட்டினால் மாத்திரமே பதவி விலகத் தயார் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

'யாரேனும் என்னை அனுப்ப நினைத்தால் அனுப்பி காட்டட்டும்' என மஹிந்த கூறியுள்ளார். 

அமைச்சர்கள், மாகாண சபை முன்னாள் அமைச்சர்கள் குழுவுடன் அலரிமாளிகையில் இன்று (26) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.