உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 25ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடையவிருந்த போதிலும் உள்ளூராட்சி அமைச்சரின் அதிகாரத்தின் பிரகாரம் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது.
அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை இம்மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கடன் நிவாரண நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக, பரிஸ் கிளப் (Paris Club) அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பரிஸ் கிளப் அல்லாத இருதரப்பு கடன் வழங்குநர்களை பரிஸ் கிளப் ஒருங்கிணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை பரிஸ் கிளப் வரவேற்றுள்ளது.
கடனாளி நாடுகள் அனுபவிக்கும் கொடுப்பனவு சிரமங்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கும் பெரிய கடன் வழங்கும் நாடுகளின் அதிகாரிகள் குழுவே பரிஸ் கிளப் ஆகும்.
பாண் ஒன்றின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
450 கிராம் பாண் ஒன்றின் விலை ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. 300
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது அதனை அண்மித்த தினங்களில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முப்பத்தைந்து இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர்களை விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பலர் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களை வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என்றும் பட்ஜெட் தலைவர்களுடன் மாநில அமைச்சர்களின் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வர விரும்பினால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவோ அல்லது வேறு எவரிடமோ இவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
"எனினும் முன்னாள் அதிபர் ராஜபக்சே நாடாளுமன்றத்துக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை என்று கூறிய அவர் இதுவரை கட்சியில் அப்படியொரு கதை நடந்துள்ளது என்றார்.
அவர் மேலும் கூறுகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வரும் பேச்சு சமூக ஊடகங்களால் வெளியிடப்பட்ட பொய்யாக இருக்க வேண்டும்."
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு நான்கு மாத காலத்திற்கு அமெரிக்கா செல்ல உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன மற்றும் நவீன் மாரப்பன தமது வாடிக்கையாளருக்கு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இலங்கையின் நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மற்றும் ஜெஹான் கனக ரெட்னா ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனுவில் நிதி முறைகேடுகள் மற்றும் இலங்கை பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது
.தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை வரவேட்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமானநிலையம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் அவர் ராஜினாமா செய்ய வழிவகுத்த வெகுஜன எதிர்ப்புகளைத் தொடர்ந்து அவர் இலங்கையை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் காரணமாக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 2023 ஜனவரி 15 ஆம் திகதிவரையான காலப்பகுதியினுள் அவர் வெளிநாடு சென்றுவர உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நிலையில், பாதீட்டுக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதியப்பட்டன.
அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால பாதீடு 115 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
வாக்கெடுப்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் அணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் வாக்களிப்பை புறக்கணித்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்தனர்.
2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு, திருத்தங்களுடன், மூண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு நடத்தாது 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு நிறைவேற்றப்பட்டது.