web log free
May 09, 2025
kumar

kumar

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி வருவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் கூறியுள்ளது.

காலியில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடியிலுந்தார்.

நேற்று முன்தினம் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடியபோது, ஏஞ்சலோ மெத்யூஸும் அணியில் இடம்பெற்றிருந்தார். 

இந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 

எரிபொருள் நெருக்கடி காரணமாக, ரயில்வே ஊழியர்கள் பணிக்கு வராததால் பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், அசௌகரியத்திற்கு உள்ளான ஏராளமான மக்கள், கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றமாக நடந்து கொள்கின்றனர்.

அத்தியாவசிய சேவை என குறிப்பிடப்படுவதால் புகையிரத ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என புகையிரத ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நிலவும் சூழ்நிலை காரணமாக ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன், என்ஜின் சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலம் நேற்று முடிவிற்கு வரவிருந்த நிலையில், ஜனாதிபதியினால் கலாநிதி நந்தலால் வீரசிங்க 6 வருடங்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியைப் பெற முடியும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவில் கட்சி அமைப்பாளர்களை கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து எதிர்கால ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரிக்கு முன்னர் நடத்த வேண்டும் எனவும் அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் பசில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பான தகவல்கள் பொய்யானவை என மஹிந்த ராஜபக்சவின் அலுவலகம் டுவிட்டர் செய்தி மூலம் அறிவித்துள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையை சுற்றுலா தலமாக மாற்ற முடியும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் சர்வதேச தரத்திலான வைத்தியசாலைகள் மற்றும் இதற்கு போதுமான மனித வளங்கள் உள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் 10 நிமிடங்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது. நாளொன்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆகும். ஆண்டு இறப்பு எண்ணிக்கை 3,000 க்கும் அதிகமாக உள்ளது. இன்னும் பலர் நிரந்தரமாக செயலிழந்து விடுகிறார்கள். நாடு நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் இந்த பாரதூரமான நிலையில் இருந்து விடுபட முறையான வேலைத்திட்டம் தேவை என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சமத் தர்மவர்தன தெரிவித்துள்ளார்.

சாலை பாதுகாப்புக்காக பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. துல்லியமான தரவுகளின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க இந்த ஏஜென்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தை இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆய்வக இரசாயனத் தேவைகள், உணவு ஊட்டச்சத்தின்மை மற்றும் சமூகத்தில் ஏற்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தடுப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

கட்டாரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் தாம் அங்கத்துவம் பெற்றுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவரைப் போன்ற பெயரில் வேறு சிலரும் இருக்கலாம், ஆனால் அது கண்டிப்பாக அவர் இல்லை என்றும் கூறுகிறார். நாமல் ராஜபக் தனது சமூக வலைத்தள கணக்கில் இந்த கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

இந்த நிறுவனத்திடம் இருந்து கடன் அடிப்படையில் எரிபொருளைப் பெறுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.மீண்டும் ஒரு பழைய செய்தி சமூக ஊடகங்களில் நான் ஒரு பகுதியாக இருப்பதாக பொய்யாகப் பரப்பப்படுகிறது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று (30) காலை கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தினால் ஜயந்த டி சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பஸ் கட்டணம் 22% அதிகரிக்கப்படவுள்ளதுடன் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்துக்கு ஏற்ப இந்த உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று மின் கம்பத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

வாகனங்களில் எரிபொருள் மற்றும் மின்கலங்களை திருடுவதாக கூறப்படும் இந்த முச்சக்கரவண்டிக்கு தண்டனையாகவே இந்தச் செயல் செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான குறிப்பும் தொங்கவிடப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd