web log free
May 10, 2025
kumar

kumar

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் உயர் மட்டத்தில் இருந்து அனுப்பப்படுகின்ற பட்டியலுக்கு கொலன்னாவையில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவை முனையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள இன்றும் அதிகளவிலான வாகனங்கள் சென்றிருந்தன.

முனையத்தில் இடப்பற்றாக்குறை நிலவியதால், சில வாகனங்கள் வௌியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

பீப்பாய்களில் எரிபொருளை பெற்றுச்செல்லவும் சிலர் வருகை தந்திருந்தனர்.

எனினும், வரிசைகளில் காத்திருக்கும் மக்களுக்கு எரிபொருள் வழங்கும் நோக்கில், கொலன்னாவை எரிபொருள் முனையத்தில் இருந்து ஒரு பௌசர் கூட வௌியேறவில்லை.

அவ்வாறாயின், கொலன்னாவையில் எரிபொருள் யாருக்கு வழங்கப்படுகிறது?

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு, இல்லை என அங்கிருந்த ஒருவரிடம் இருந்து பதில் வந்தது.

மீன்பிடிப் படகுகளுக்கு தேவையான எரிபொருள் வழங்கப்படுவதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

உயர் மட்டத்தில் இருந்து வரும் பட்டியலுக்கு அமைய எரிபொருள் வழங்கப்படுவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

அவரின் தகவலுக்கு அமைய, இன்றைய நாள் முழுவதும் உயர் மட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதை காண முடிந்தது.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இங்கு வந்து எரிபொருள் பெற்றுச் செல்வதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. 

மொரட்டுவை கட்டுபெத்த சந்​தியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விதம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் வரிசையில் நின்றவர்களை போலீசார் அடித்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பேருவளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) விற்பனை நிலையங்களில் இருந்து அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விடுவிக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த முடிவு பத்தாம் தேதி வரை அமலில் இருக்கும்.

ஆனால் இந்தியன் ஆயில் நிறுவனம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து குறைந்த அளவு எரிபொருளை வெளியிடுகிறது.

 

தர்கா நகரில் உள்ள ஐ.ஓ.சி பெற்றோல் நிலையத்தில் 28 ஆம் திகதி இரவு லொறிக்கு வரிசையில் நின்றிருந்த ஒருவர் அளுத்கமவில் இருந்து வெலிபென்ன நோக்கிச் சென்ற டிப்பர் ரக பிரதான வீதியைக் கடக்கும் போது மோதியதில் உயிரிழந்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான சாரதியும் தர்கா நகரில் எரிபொருள் வரிசையில் இருந்து இரவு உணவிற்காக அளுத்கம நகருக்குச் சென்றுவிட்டு தர்கா நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது வீதியைக் கடந்த நபர் டிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

187/3, அலவத்துகொட, புவக்வத்தை, தர்காநகரை சேர்ந்த சிங்கப்புலிகே ஆனந்த (58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அளுத்கம-வெலிபென்ன தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தர்கா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வீதியைக் கடக்கும் போது பாதிக்கப்பட்ட நபர் அன்றிரவு மற்றுமொரு நபருக்கு சொந்தமான லொறியுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் அளுத்கம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய 29 வயதுடைய டிப்பர் சாரதி அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின், கொலன்னாவையில் உள்ள மொத்த களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக  முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் எரிபொருளைப் பெறுவதற்கு எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறிய அவர், இந்தியாவும் மிகவும் நம்பிக்கையான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பாதையில் தடுப்புகளை அமைத்த பாதுகாப்பு படையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிருணிகா பிரேமச்சந்திர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு தடுப்புகளை அமைக்க பொலிஸாருக்கு உரிமையில்லை எனவும் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் பல சுகாதார தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்போது சுகாதார நிபுணர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு ரூ. 1200 மற்றும் இந்த விகிதத்தில் உள்ள சிக்கல்களை நாங்கள் விவாதித்தோம். ஆனால் இதுவரை எந்த தீர்வும் எமக்கு கிடைக்கவில்லை

960 மணிநேரமே என் இலக்கு - முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்வேன்  என அமைச்சர் தம்மிக்க பெரேரா  தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறுகையில், 

"மக்கள் பட்டினியால் வாடினால், நாம் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. ஆக, சென்று எதையாவது செய் எனக்கூறியே - அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்.  

6 மாதங்களுக்குள் உங்களாலும் முடியாவிட்டால் - பதவி துறந்து வாருங்கள் என மனைவியும் அறிவுரை வழங்கியுள்ளார். அதேபோல 'தாத்தா கம் ஹோம்' (அப்பா வீட்டுக்கு வாங்க) - என பதாகை ஏந்தப்படும் என பிள்ளைகளும் அறிவித்துவிட்டனர்.   

அந்த வகையில் எனக்கான காலம் 6 மாதங்கள். அதாவது 960 மணித்தியாலங்களே எனக்கு வேலை செய்வதற்கான நேரம். அந்த காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்யாவிட்டால், 'தாத்தா கம் ஹோம்' எனக்கூறி பிள்ளைகள் எனது வீட்டுக்கு முன் வந்து விடுவார்கள். அப்போது எனக்கு வீடு செல்ல வேண்டிவரும்.   

என்னை போல் ஒருவருக்கு 6 மாதங்களுக்குள் மக்களுக்கு முன்னேற்றகரமான எதையாவது செய்ய முடியாவிட்டால், பதவி வகித்து என்ன பயன்? " 

இவ்வாறு இலங்கையில் உள்ள பிரபல கோடிஸ்வர வர்த்தகரும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd