ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கூறப்படும் முன் மற்றும் பின் கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அரச புலனாய்வுப் பிரிவு, தேசிய புலனாய்வுத் தலைவர் மற்றும் பிற அதிகாரிகள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதை ஆராய்வதற்காக விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ என்.ஜே. அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் அறிக்கை இவ்வருடம் செப்டெம்பர் 15ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று(12) பதவியேற்க உள்ள நிலையில்,அவரின் பதவியேற்கும் நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக செந்தில் தொண்டமான் இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிக மழையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த 9 நாட்களில் 879 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், அதிவேக வளர்ச்சி காணப்படுவதுடன், மே மாதத்தில் 2647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, இதுவரை நாடளாவிய ரீதியில் 25,891 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் டெங்கு அபாயம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாகவும் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதிக டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன் எண்ணிக்கை 5,624 ஆகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,930 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2,487 பேரும், கண்டி மாவட்டத்தில் 1,986 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,441 பேரும் உள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேரடியாக ஆதரவாக நிற்கும் பொஹொட்டுவ பாராளுமன்ற உறுப்பினர்களை தமது கட்சி உறுப்பினர்களிடமிருந்து ஓரங்கட்டுவதற்கான நுட்பமான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க கட்சியின் குழுவொன்று நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, பொஹொட்டுவவில் இந்த நாட்களில் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் தொகுதி மாநாடுகளுக்கு பொஹொட்டுவவைச் சேர்ந்த ரணிலுக்கு ஆதரவான உறுப்பினர்கள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் கலாவெவ தொகுதி மாநாட்டுடன் முதல் சம்பவம் ஆரம்பமானது எனவும், அதற்கு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அழைக்கப்படவில்லை எனவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
மாத்தளை பொஹொட்டுவவில் பலமாக இருந்த ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகன் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோருக்கு அண்மையில் மாத்தளை இரத்தோட்ட தொகுதி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக பொஹொட்டுவ கட்சியில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேரடியாக உதவ தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்கக் கோரி அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
ஆனால் இது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கடிதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 116 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
எம்.பி.க்களுக்கு வரியில்லா வாகன உரிமம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் நாடாளுமன்ற அவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம் அடுத்த வாரம் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர மற்றும் ரொஷான் ரணசிங்க தலைமையிலான அரசியல் குழுக்கள் சமகி ஜன பலவேகய (SJB) உடன் தேர்தல் கூட்டணியை உருவாக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கும் வழிமுறைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. தேர்தல் நிலுவையில் உள்ள நிலையில், புதிய அரசியல் அமைப்புக்கள் யதார்த்தமானவை.
இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள். பின்னர், அதிலிருந்து விலகி எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அடுத்த மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
ஹொரண பிரதேசத்தில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பொருத்தமான நபர் முன்வைக்கப்படுவார் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியில் சமகி ஜன பலவேகயவை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பலமான அரசியல் பிரமுகர்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு வந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்போதும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில் புதிய கூட்டணியின் மொனராகலை பேரணியில் இணைந்து கொள்வார்கள் என தெரிகிறது.
இன்னும் இரண்டு வாரங்களில் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் கூட்டணி தொடர்பில் நாட்டில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் பரந்த அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடுவார் என்றும் அந்த ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 95 இலட்சம் வாக்குகளைப் பெறுவார் என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைத்து பலப்படுத்தவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக வெற்றிபெறச் செய்யவும் தாம் செயற்பட்டு வருவதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிராம சேவகன் நாட்டின் தலைவராக வந்ததும் நாடு எப்படி இருந்ததோ அதே போல் தாழ்த்தப்பட்ட குறைந்த சாதியை சேர்ந்தவர் நாட்டின் தலைவரானால் முழு நாடும் அழிந்து விடும் என்கிறார் சமந்தபத்திர தேரர்.
தாழ்த்தப்பட்ட குறைந்த சாதிக்காரன் நாட்டின் தலைவனாக வந்தால், நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க நேரமில்லாமல், தன்னை இழிவுபடுத்திய பல தரப்பினருக்கும் பதில் சொல்ல நேரமிருக்காது என்றும் தேரர் குறிப்பிடுகிறார்.
அரச குலத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக வர வேண்டும் எனவும், வரலாற்றை வாசித்து மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சமந்தபத்திர தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, தாழ்ந்த ஜாதியில் இருப்பவர் சுவர்க்கத்தைப் பார்ப்பது கூட கடினம் என்றும், எல்லாவற்றையும் கொண்டவர், எவ்வளவு கிடைத்தாலும், அனைத்தையும் உடனடியாக கைவிட முடியும் என்றும் மேலும் கூறினார்.