தங்களது விரியும் பாதையில் ஈர்ப்புமிக்க முன்னேற்றத்தை பதிவுசெய்திருக்கும், லங்கா ஸ்பைசஸ் தனியார் நிறுவனமானது, கொழும்பு நாவலையிலும், கண்டியின் கட்டுகஸ்தோட்டையிலும் தன்னுடைய 6வது மற்றும் 7வது Mc Currie காட்சியறைகளை சமீபத்தில் திறந்துள்ளது. Mc Currie பிரான்சைஸ் தனியார் நிறுவனத்தின் கீழ் இயங்கும், இவ்விருப் புதிய கிளைகளும் அணுகுவதனை வளப்படுத்துவதிலும் நாடாளவியரீதியிலான பன்முக வாடிக்கையாளர் பிரிவுகளிற்கு சேவையாற்றுவதிலுமான வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பிற்கு உதாரணமாக விளங்குகின்றது.
கொட்டாவை, பொரளை, கல்கிசை, கிருலப்பனை, மற்றும் மாத்தளையில் உள்ளவற்றைப் போன்றே காணப்படும், புதிதாக திறக்கப்பட்ட காட்சியறைகளானவை, 120 இற்கும் மேற்பட்ட Mc Currie பண்டகசாலைகளிலிருந்தான அபரிதமான தெரிவுகளை வழங்குகின்றது. பந்துன், ஊறறுகாய், சம்பல், சட்னி வகை, மற்றும் பேஸ்ரி வகைகள் போன்ற உலர்த்தப்பட்ட நறுமணப்பொருட்கள் முதல் சாடிகளில் அடைக்கப்பட்ட சுவையுணவுகள் வரையில் வாடிக்கையாளர்கள் இலங்கைச் சுவையின் பன்மைத்துவங்களை அனுபவித்து மகிழலாம்.
தசாப்தகாலமாக, Mc Currie ஆனது உத்தியோகப்பூர்வ இலங்கை நறுமணத் திரவியங்களது முகவராகவே விளங்கி, உள்ளுர் மற்றும் சர்வதேசம் என இரு தளங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் உள்ளுர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களிற்கு சமமாகவே சேவையை வழங்கும் வகையிலேயே அனைத்து Mc Currie காட்சியறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
லங்கா ஸ்பைசஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. மஞ்சு ஆரியரத்ன அவர்கள், Mc Currie இன் பௌதீக தடங்களை விரிவுபடுத்துவதன் மூலோபாய முக்கியத்துவத்தினை வலியுறுத்திக்கூறினார். 'Mc Currie ஆனது உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக இலங்கையர்களின் இதயத்தில் குன்றா இடத்தினை பிடித்துள்ளது. எம்முடைய விரிவுபடுத்தும் மூலோபாயமானது அனைத்து பின்னணியிலும் காணப்படும் வாடிக்கையாளர்களுடன் ஆழமான இணைப்பை பேண விரும்புகின்றோம் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.'
லங்கா ஸ்பைசஸ் தனியார் நிறுவனத்தின் அர்ப்பணிப்புமிக்க ஊழியர்கள் மீதான தன்னுடைய நன்றியை வெளிப்படுத்தியதில் கட்டுகஸ்தோட்டை மற்றும் நாவல காட்சியறைகளின் திறப்புவிழாவானது சில குறிப்பிடத்தக்க அம்சங்களை கொண்டிருந்தது. புதிய காட்சியறைகளை திறந்துவைப்பதில் சிரேஷ்ட ஊழியர்களிற்கு முன்னுரிமையளித்து கௌரவப்படுத்தியமையானது, தன்னுடைய ஊழியப்படை குறித்த நிறுவனத்தின் அர்ப்பணிப்பிற்கு மேலுமொரு எடுத்துக்காட்டாக விளங்கியது.
தரம் மற்றும் தூய்மை என்பவற்றால் இயக்கப்படும், Mc Currie ஆனது இலங்கையின் நறுமண துறையை தலைமைத்தாங்க ஆர்வங்கொண்டுள்ளது. 200 இற்கும் மேற்பட்ட பல்வேறு வகைப்பட்ட உற்பத்திகளுடன், நிறுவனமானது அதிகாரபூர்வமான இலங்கையின் சுவைகளை உலக சந்தைக்கு கொணர்வதில் தொடர்ச்சியாக புத்தாக்கங்களை மேற்கொள்கின்றது.
Mc Currie இன் சர்வதேச பிரசன்னமானது அவுஸ்திரேலியா, மாலைத்தீவுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வரையில் சுழல்கின்றது. உற்பத்திகளின் ஒருமைப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக, நிறுவனமானது அதிநவீன வளிநீக்கி பொதியிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதுடன் ISO 22000:2010 உணவு பாதுகாப்பு முறைமைகள், ஹலால் சான்றிதழ் மற்றும் SEDEX உறுப்புரிமை உள்ளிட்ட கடுமையான உணவுப் பாதுகாப்பு தராதரங்களையும் பேணுகின்றது.
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 05 இல் இருந்து 06 வருடங்களாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஜமைக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சட்டத்தரணியுமான பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
06 வருடங்களாக இருந்த ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 வருடங்களாக குறைக்கப்பட்டது போன்று பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மூலம் பதவிக்காலத்தை 05 வருடத்திலிருந்து 06 வருடங்களாக நீடிக்க முடியும்.
அதன்படி பொது வாக்கெடுப்பு தேவையில்லை என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, கட்சியின் தீர்மானத்தின் பிரகாரம் வெற்றி வாய்ப்பு உள்ளவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு தமது குழு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பல முதியவர்கள் இருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தானும் பொருத்தமானவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அங்கு எந்த வேட்பாளரும் முன்வைத்து வெற்றி பெற முடியுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், கட்சி கூட்டணியாக உதவினால் தானும் வெற்றிபெற முடியும் என்றார்.
வங்கி, வாடிக்கையாளர்களுக்கு இணையவழி CRIB அறிக்கைகளுக்கான அணுகலை வழங்கும் முதலாவது முக்கியமான முறைசார் வங்கியாக மாறியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட கடன் அறிக்கைகள் (MyReport) மற்றும் கடன் தரப்படுத்தல் புள்ளி (CRIB Score)) தொடர்பில் அறிந்துகொள்வதற்காக பதிவுசெய்து, கோரிக்கை விடுப்பதற்கான, சிரமங்களற்ற மற்றும் திறன்மிக்க வழிமுறையை அறிமுகப்படுத்தும் வகையில் கடன் தகவல் பணியகத்துடன் (Credit Information Bureau - CRIB ) ஏற்படுத்தப்பட்டுள்ள புதுமையான கூட்டாண்மை தொடர்பில் மக்கள் வங்கி பெருமையுடன் அறிவித்துள்ளது.
தனிநபர் ஒருவரோ அல்லது நிறுவனம் ஒன்றோ கடனொன்றுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பதாக தமது கடன் தரப்படுத்தல் தொடர்பில் சிறப்பாக விளங்கிக் கொள்வதற்கு 'MyReport' மிகவும் முக்கியமானது. இந்த அத்தியாவசியமான மற்றும் புத்தாக்கமான சேவை தற்போது '‘People's Pay’ wallet app மூலம் தங்குதடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் முக்கியமான முறைசார் வங்கியொன்றால் இந்த வகையில் முதன்முறையாக வழங்கப்படும் சேவையாக மாறியுள்ளது.
இன்றைய வேகமான டிஜிட்டல் யுகத்தில், தனது வாடிக்கையாளர்களின் பரிமாண மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளை நிவர்த்தி செய்யும் முயற்சிகளை மக்கள் வங்கி தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.
வாடிக்கையாளர்கள் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் இருந்தும் கூட, தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே முக்கியமான நிதியியல் தகவல் விபரங்களை அணுகுவதற்கு எமது வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளிப்பதை உறுதி செய்து, மகத்தான டிஜிட்டல் வங்கிச்சேவை அனுபவங்களை வழங்குவதில் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு இந்த சமீபத்தைய முயற்சி சிறந்ததொரு சான்றாகும்.
'இந்த வசதியின் அறிமுகமானது வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்தி, டிஜிட்டல் மாற்றத்தை உள்வாங்குவதில் எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது,' என்று மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் திரு. கிளைவ் பொன்சேகா அவர்கள் குறிப்பிட்டார்.
'முன்னெப்போதும் இல்லாத வகையில், உலகளாவிய தொற்றுநோய் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில், எமது வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக டிஜிட்டல் தீர்வுகள் மீது நாம் மூலோபாயரீதியாக முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். 'MyReport' இல் CRIB அறிக்கைக்கான வேண்டுகோள் விண்ணப்பங்களை ஒருங்கிணைத்துள்ளதன் மூலமாக, இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவையில் புதியதொரு தர ஒப்பீட்டு நியமத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம்,' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்கள் தற்போது எவ்விதமான ஆவண நடைமுறைகளோ அல்லது கூடுதல் சரிபார்ப்பு வழிமுறைகளோ இன்றி, '‘People's Pay’ wallet app மூலமாக நேரடியாகவே தமது CRIB அறிக்கையை (MyReport) கோருவதற்கான பதிவு நடைமுறையை மேற்கொள்ளலாம். இதற்கான பதிவை மேற்கொண்ட பின்னர், இந்த app இல் ஒரு சில எளிய படிகளின் மூலமாக, மிக இலகுவாக 'MyReport' ஐப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பாதுகாப்பான, இலகுவாக உபயோகிக்கக்கூடிய தளமானது வாடிக்கையாளர்களின் தகவல் விபரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் அதேசமயம், தமது கடன் அறிக்கைகள் மற்றும் தரப்படுத்தல் புள்ளிகளை இலகுவாக அணுகுவதற்கும் வாய்ப்பளிக்கின்றது.
CRIB 'MyReport' சேவைக்கான பதிவு இலவசமாக வழங்கப்படுகின்றது. ('CRIB Score)' வழங்கும் தங்குதடையின்றிய வங்கிச்சேவை அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்கள் தமது மக்கள் வங்கிக் கணக்குகள் மூலமாக இச்சேவைக்காக இணையவழியில் கொடுப்பனவுகளை மிகவும் சௌகரியமாக மேற்கொள்ள முடியும்.
வங்கித்துறையில் தொழில்நுட்பரீதியான மேம்பாடுகளைப் பொறுத்தவரையில் மக்கள் வங்கி தொடர்ந்தும் CRIB வகித்து வருகின்றது. 'MyReport' உடன் CRIB இன் 'CRIB Score)' கோரிக்கை விண்ணப்பத்தை ஒருங்கிணைத்துள்ளமை, இலங்கையில் முன்னிலை வகிக்கும் டிஜிட்டல் வங்கிச்சேவை வழங்குநராக மாறுவதை நோக்கிய வங்கியின் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான சாதனையாகும்.
யாழ். பிரதேச ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டுக்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
இது கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தைரியமற்ற கோழைகளின் அற்பத்தனமான சட்டவிரோத செயற்பாடாகும்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்வதற்கு பொலிசாஸார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதோடு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என்றுள்ளது.
ஊடகவியலாளர் வீட்டுக்கு இன்று அதிகாலை நுழைந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டை அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு பலம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்கள் குழு மற்றும் புதிய கூட்டணியின் எம்.பி.க்கள் குழுவிற்கு இடையில் பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அண்மையில் மிக இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு வந்த எம்.பி.க்கள், தங்கள் மெய்ப்பாதுகாவலர்களை கூட கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பார்த்துக் கொண்டனர்.
புதிய கூட்டணியில் எப்படி இணைவார்கள், அப்படியானால், அது எப்படி நடக்கும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
எதிர்வரும் 29ஆம் திகதி மொனராகலையில் நடைபெறவுள்ள பேரணியில் இவர்கள் இணைந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இலங்கையின் வேலைத்திட்டத்தின் 2 ஆவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் எங்களின் அர்ப்பணிப்புக்கு இந்தச் சாதனை ஒரு சான்றாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்துள்ளதுடன், அது தொடர்பான யோசனையை மதிப்பீடு செய்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றதன் பின்னர் ஆணைக்குழு இறுதி முடிவை அறிவிக்கும்.
இதன்படி, 0-30 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்தக் கட்டணத்தை 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாக 2 ரூபாவினாலும், 31-60 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்தக் கட்டணத்தை 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக 11 ரூபாவினாலும் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
61-90 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்தக் கட்டணத்தை 18 ரூபாவாகவும், 91-120 அலகுகளுக்கு இடையில் மாதாந்தக் கட்டணத்தை 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக 20 ரூபாவாலும் குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்ட விதிகளை வலுப்படுத்தி தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
டிசம்பர் 12, 2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் உட்பட அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்பிப்பதற்கு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சர்கள் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தனிப்பட்ட வெற்றி தோல்விகளை விட நாட்டின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (11) பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கொள்கை சீர்திருத்த உரையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் மக்கள் திருப்தியடைந்தால், அந்த முறையை முன்னெடுத்துச் செல்லலாம், இல்லையெனில் சரிந்த பொருளாதாரம் கொண்ட நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக, மருந்துகளை விநியோகிக்க முடியாமல் மக்கள் வரிசையில் நிற்க நேரிடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.