சமகி ஜன பலவேகவில் இருக்க முடியாவிட்டால், கட்சியை விட்டு வெளியேறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவை போர் வீரன் என கௌரவிக்க கட்சியில் பல மூத்தவர்கள் இருந்த போதே அவருக்கு தவிசாளர் பதவி வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
சஜித் பிரேமதாசவை சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்தது குறித்து கருத்து தெரிவித்த அவர், தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்த பியங்கர ஜயரத்ன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, புத்தளம் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் பியங்கர ஜயரத்னவுக்கு வழங்கப்பட உள்ளது.
பொஹொட்டுவவில் பணியாற்றுவதற்கு முன்னர், 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சுதந்திர கட்சியின் புத்தளம் மாவட்ட தலைவராகவும், நீண்ட காலம் அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றிய சிரேஷ்ட அரசியல் பிரமுகருமான பியங்கர ஜயரத்ன வடமேற்கு மாகாண சபை மற்றும் மாகாண அமைச்சராக உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
இதற்கிடையில், பிரதமர் கோட்டாபாய ராஜபக்சவின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக பியங்கரா ஜயரத்ன தனது அப்போதைய அமைச்சர் பதவியை 2021 ஏப்ரலில் ராஜினாமா செய்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி தயாராக இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவ பரிந்துரைகள் காரணமாக முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் உள்ள அசௌகரியத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் தமது கட்சியின் வெற்றிக்காக அவர் பாடுபடுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (20) முதல் மழையுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, மேற்கு, சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
இந்த மழையுடனான காலநிலை எதிர்வரும் சனிக்கிழமை (22) வரை தொடரலாம் என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
வவுனியாவின் சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நேற்றிரவு(18) 11 மணியளவில் 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதனால் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான லயனல் பிரேமசிறி, சமகி ஜன பலவேகயவில் இணைந்துள்ளார்.
காலி மஹிந்த வித்தியாலயத்தின் முன்னாள் மாணவரான இவர் தொழில் ரீதியாக சட்டத்தரணியும் ஆவார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியலில் பிரவேசித்த அவர் முதலில் காலி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து மீண்டும் காலி மாவட்ட மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
லயனல் பிரேமசிறி 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைந்ததுடன் அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக சுமார் 100 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பை உருவாக்க சமகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சேனாரத்ன, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே, தன்னைத் துரோகியாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்றார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐம்பத்தொரு வீதமானவர்கள் தயாராக இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
கட்சி தனக்கு பத்து நிபந்தனைகளை வழங்கியுள்ளதாகவும், அந்த நிபந்தனைகளுக்கு அமைய தான் அனைத்து திட்டங்களையும் தயார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பத்து நிபந்தனைகளுக்கு ஏற்ப திட்டம் உருவாக்கி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது குறித்தும் திட்டமிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மிக்க பெரேரா மேலும் கூறியதாவது:
நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 115 நாட்களே உள்ளன என்றார்.
கட்டணம் இன்றி இலவச சிறப்பு ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பொசன் போயாவை முன்னிட்டு மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்காக இலவச விசேட புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மஹவ - அநுராதபுரம் பகுதிகளுக்கு இடையிலான புகையிரத பாதையின் பணிகள் நிறைவடையாததால் பொசன் காலத்தில் புகையிரத சேவைகளை ஈடுபடுத்த முடியாது எனவும் அதற்கு பதிலாக 400 விசேட பஸ்கள் கூடுதலாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை புதிய குறுகிய தூர புகையிரத பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்கு கட்டணமின்றி விசேட புகையிரதத்தை இயக்க தயார் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவார் என சண்டே டைம்ஸ் அரசியல் எழுத்தாளர் தெரிவிக்கிறார்.
சண்டே டைம்ஸ் செய்தியின்படி, ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி கடிதம் அனுப்பவுள்ளார்.
ஜனாதிபதியால் விரைவில் முன்வைக்கப்படவுள்ள இந்தக் கோரிக்கைக்கு பொஹொட்டு கட்சி இணக்கம் தெரிவிக்கும் என சண்டே டைம்ஸின் அரசியல் செய்தியாளர் கூறுகிறார்.
அதாவது அடுத்த பொதுத் தேர்தலில் தம்மிக்க பெரேராவை பிரதமராக நியமிக்கும் உடன்பாட்டின் அடிப்படையில் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சமூக ஊடகங்களைக் கையாள ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக சண்டே டைம்ஸின் மேற்கண்ட கட்டுரை தெரிவிக்கிறது.
அந்த குழுவின் தலைவராக சாகல ரத்நாயக்க உள்ளார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் பின்னர் தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி மாத்தறையில் முதலாவது மாபெரும் கூட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வாறான மேலும் பல பாரிய கூட்டங்கள் ஜூலை 7, ஜூலை 14 மற்றும் ஜூலை 21 ஆகிய திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த பொது கூட்டங்களை ஏற்பாடு செய்வது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்றுள்ளார்.